April 9, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்

6–9 minutes

image : போட்டிப் பரீட்சைகளுக்கான இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள் -(பகுதி 01)

01. பண்டைய காலமும் மன்னர் ஆட்சியும்

  1. இலங்கையின் முதல் வரலாற்று நூல் எது?
    தீபவம்சம்.
  2. இலங்கையின் முழுமையான வரலாற்றைக் கூறும் நூல் எது?
    மகாவம்சம்.
  3. விஜயன் இலங்கைக்கு வந்தபோது இங்கே சந்தித்த இளவரசி யார்?
    குவேனி.
  4. இலங்கையில் பௌத்த மதம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
    மஹிந்த தேரர் (அசோக சக்கரவர்த்தியின் மகன்).
  5. பௌத்த மதம் அறிமுகமானபோது இலங்கையை ஆட்சி செய்த மன்னன் யார்?
    தேவநம்பிய தீசன்.
  6. இலங்கையின் முதல் தலைநகரம் எது?
    அனுராதபுரம்.
  7. அனுராதபுரத்தில் ‘மகா விகாரை’யைக் கட்டியவர் யார்?
    தேவநம்பிய தீசன்.
  8. துட்டகைமுனு மன்னனுக்கும் எல்லாளனுக்கும் இடையில் போர் நடந்த இடம் எது?
    விஜிதபுர.
  9. இலங்கையில் முதன்முதலில் குளங்களை அமைக்கும் முறையைத் தொடங்கி வைத்த மன்னன்?
    பண்டுகாபயன்.
  10. சீகிரியா கோட்டையை நிர்மாணித்த மன்னன் யார்?
    காசியப்பன்.
  11. அனுராதபுரத்திற்குப் பின் இலங்கையின் இரண்டாவது தலைநகராக விளங்கியது எது?

பொலன்னறுவை.

  1. பொலன்னறுவை காலத்தில் மிகப்பெரிய குளத்தை (பராக்ரம சமுத்திரம்) கட்டியவர் யார்?
    மகா பராக்கிரமபாகு.
  2. பல்லவக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட இலங்கையின் தளம் எது?
    நாலந்த கெடிகே.

02. பகுதி 2: காலனித்துவ காலம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்)

  1. இலங்கைக்கு முதன்முதலில் வந்த ஐரோப்பியர்கள் யார்?
    போர்த்துக்கேயர் (1505)
  2. கண்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது?
    1815 மார்ச் 2.
  3. இலங்கை பிரிட்டிஷாரிடம் முழுமையாக வீழ்ந்த ஆண்டு எது?
    1815
  4. இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
    ஆங்கிலேயர்.
  5. இலங்கையில் முதன்முதலில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு?
    1864 (கொழும்பு – அம்பேபுஸ்ஸ).
  6. போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஒல்லாந்தருக்கு உதவிய மன்னன் யார்?
    இரண்டாம் இராஜசிங்கன்.
  7. இலங்கையில் ‘ரோமன் டச்சு’ சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
    ஒல்லாந்தர் (னுரவஉh).
  8. கடைசி கண்டி மன்னன் யார்?
    ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்.

03. சுதந்திரப் போராட்டமும் நவீன இலங்கையும்

  1. இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு மற்றும் திகதி?

1948, பிப்ரவரி 4.

  1. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் யார்?

டி. எஸ். சேனநாயக்க.

  1. இலங்கை ஒரு குடியரசாக (சுநிரடிடiஉ) மாறிய ஆண்டு எது?

1972, மே 22.

  1. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?

சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கை).

  1. இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?

ஜே. ஆர். ஜெயவர்தன.

  1. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ள நான்கு அரச இலைகள் எதனைக் குறிக்கின்றன?

மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா (நான்கு பிரம்ம விஹாரங்கள்).

  1. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (டீஆஐஊர்) எந்த நாட்டின் உதவியுடன் கட்டப்பட்டது?

சீனா.

  1. இலங்கையின் தற்போதைய தலைநகரம் எது?

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை.

  1. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரம் எது?

யாழ்ப்பாணம்.

  1. மகாவலி அபிவிருத்தித் திட்டம் யாரால் துரிதப்படுத்தப்பட்டது?

காமினி திஸாநாயக்க.

04. புவியியல் மற்றும் பொதுத் தகவல்கள்

  1. இலங்கையின் மிக நீளமான நதி எது?

மகாவலி கங்கை.

  1. இலங்கையின் மிக உயர்ந்த மலை எது?

பிதுருதாலகால.

  1. இலங்கையின் மிகப்பெரிய இயற்கை ஏரி எது?

பதவிய குளம் (அல்லது பொதுவாக வவுனியா குளம் போன்ற குளங்கள்).

  1. இலங்கையில் உள்ள மாகாணங்களின் எண்ணிக்கை எத்தனை?

9 மாகாணங்கள்.

  1. இலங்கையில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

25 மாவட்டங்கள்.

  1. யால தேசிய பூங்கா எதற்குப் பெயர் பெற்றது?

சிறுத்தைகள் (டுநழியசனள).

  1. இலங்கையின் தேசிய மரம் எது?

நாக மரம்.

  1. இலங்கையின் தேசிய மலர் எது?

நீலோற்பலம்

  1. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

வொலிபோல்.

  1. ஆடம்ஸ் பீக் என அழைக்கப்படும் மலை எது?

ஸ்ரீ பாத (சிவனொளிபாத மலை).

  1. இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட இடம் எது?

லூல்கந்துர (ஜேம்ஸ் டெய்லர்).

  1. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிர்கள் எவை?

தேயிலை, இறப்பர், தென்னை.

  1. இலங்கையில் அதிக மழை வீழ்ச்சியைப் பெறும் இடம் எது?

வட்டவளை.

  1. இலங்கையின் தென்கோடி முனை எது?

தேவேந்திரமுனை

  1. இலங்கையின் வடகோடி முனை எது?

பருத்தித்துறை

  1. இலங்கையின் வரலாற்றில் அதிக காலம் தலைநகராக இருந்தது எது?

அனுராதபுரம் (சுமார் 1400 ஆண்டுகள்).

  1. கோட்டை இராச்சியத்தை நிறுவியவர் யார்?

ஆறாம் பராக்கிரமபாகு.

  1. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதி யார்?

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

  1. பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கையின் முதல் ஆளுநர் யார்?

பிரடெரிக் நோர்த்

  1. இலங்கையில் முஸ்லிம்கள் முதன்முதலில் எந்தப் பகுதியில் குடியேறியதாகக் கருதப்படுகிறது?

பெருவளை

  1. கண்டி மன்னர்களின் கடைசி வம்சாவளி எது?

நாயக்கர் வம்சம்.

  1. யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னன் யார்?

சங்கிலியன்.

  1. இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதல் சட்டவாக்கக் கழகம் எது?

கோல்ப்ரூக் – கேமரன் சீர்திருத்தம் (1833)

05. பண்பாடு, மதம் மற்றும் கட்டிடக்கலை

  1. இலங்கையில் உள்ள மிகப் பழமையான தூபி எது?

தூபாராமய.

  1. புத்தரின் புனித தந்தம் இலங்கைக்கு யாரால் கொண்டுவரப்பட்டது?

ஹேமமாலா மற்றும் தந்தகுமாரன்.

  1. புனித தந்தம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது ஆட்சி செய்த மன்னன் யார்?

சிறிமேகவண்ணன்.

  1. இலங்கையின் மிகப்பெரிய தூபி எது?

ஜேத்தவனாராமய.

  1. அனுராதபுரத்தில் உள்ள ‘சமாதானப் புத்தர் சிலை’ எதனால் ஆனது?

டொலமைட் கல்.

  1. இலங்கையின் ‘கலாசார முக்கோணம்’ என அழைக்கப்படும் பகுதிகள் எவை?

அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி.

  1. இலங்கையின் தேசிய அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?

கொழும்பு (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1877).

  1. கண்டி தலதா மாளிகையில் ‘பெரஹரா’ விழாவைத் தொடங்கிய மன்னன் யார்?

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்.

  1. இலங்கையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோட்டை எது?

கொழும்பு கோட்டை (பின்னர் ஒல்லாந்தரால் காலி கோட்டை விரிவுபடுத்தப்பட்டது).

  1. இலங்கையில் இந்துக்களின் புனிதத் தலமான ‘கதிர்காமம்’ எந்த ஆற்றின் கரையில் உள்ளது?

மாணிக்க கங்க

06. பிரிட்டிஷ் கால நிர்வாகம் மற்றும் பொருளாதாரம்

  1. இலங்கையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டப் பயிர் எது?

காப்பி

  1. இலங்கையில் காப்பிப் பயிர்ச்செய்கை அழியக் காரணம் என்ன?

இலை வெப்பு நோய்

  1. இலங்கையில் முதன்முதலில் தந்தி (வுநடநபசயிh) சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?

1858 (கொழும்பு – காலி).

  1. இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா.

  1. இலங்கையில் ‘சோல்பரி சீர்திருத்தம்’ அறிமுகமான ஆண்டு? 1947
  2. இலங்கையின் முதலாவது தேர்தலை நடத்திய ஆணைக்குழு எது?

டொனமூர் ஆணைக்குழு.

  1. இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகமான ஆண்டு? 1931
  2. இலங்கையில் ‘இரட்டை ஆட்சி முறை’ ஒழிக்கப்பட்ட சீர்திருத்தம் எது?

டொனமூர் சீர்திருத்தம்.

  1. பிரிட்டிஷ் காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் கல்விப்பணி செய்த அமெரிக்க மிஷனரிகள் எங்கு ஆரம்பிக்கப்பட்டனர்?

வட்டுக்கோட்டை (யாழ்ப்பாணக் கல்லூரி).

07. நவீன வரலாறு மற்றும் அமைப்புகள்

  1. இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

ஆனந்த சமரக்கோன்.

  1. இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1950
  2. இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1956 (எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க).

  1. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் (UN) இணைந்த ஆண்டு? 1955
  2. இலங்கையின் கொடியை வடிவமைத்த குழுவின் தலைவர் யார்?

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க.

  1. இலங்கையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது?

விக்டோரியா அணை.

  1. இலங்கையின் முதலாவது பெண் ஆளுநர் யார்?

சீதா செனவிரத்ன.

  1. இலங்கையின் ஒன்பதாவது மாகாணமாக உருவாக்கப்பட்டது எது?

வடமத்திய மாகாணம்.

  1. கொழும்புத் துறைமுகம் எந்தக் காலத்திலிருந்தே சர்வதேச வணிக மையமாகத் திகழ்ந்தது?

8-ஆம் நூற்றாண்டு (அரபு வணிகர்கள் காலம்).

08. சமூக மற்றும் கலைத் தகவல்கள்

  1. இலங்கையில் மிகப்பழமையான பாறை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?

தம்புள்ளை மற்றும் தம்புல்லகல.

  1. இலங்கையின் ‘நெற்களஞ்சியம்’ என அழைக்கப்படும் மாவட்டம் எது?

அம்பாறை.

  1. இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு புகழ்பெற்ற ‘ஜேம்ஸ் டெய்லர்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஸ்காட்லாந்து.

  1. இலங்கையில் ரப்பர் பயிர்ச்செய்கை எங்கு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது?

களுத்துறை (ஹெணரத்கொட தாவரவியல் பூங்கா).

  1. இலங்கையின் முதலாவது வானொலி சேவை எது?

கொழும்பு வானொலி ( 1925).

  1. இலங்கையின் புகழ்பெற்ற ‘மூன்றாம் பராக்கிரமபாகு’ எந்த நகரைத் தலைநகராகக் கொண்டிருந்தார்?

குருணாகல்.

  1. இலங்கையில் ‘இலங்கைத் தமிழ் அரசு கட்சி’யை ஆரம்பித்தவர் யார்?

எஸ். ஜே. வி. செல்வநாயகம்.

  1. இலங்கையின் தேசிய அருங்காட்சியகம் யாரால் திறந்து வைக்கப்பட்டது?

வில்லியம் கிரிகோரி.

  1. இலங்கையின் தற்போதைய நாணய அலகு எப்போது அறிமுகமானது?
  • 1870-களில் (பிரிட்டிஷ் ஆட்சியில்)

09. பண்டைக்கால அரசுகளும் கட்டுமானங்களும் (இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்)

  1. இலங்கையில் ‘கல் விகாரை’ எங்கு அமைந்துள்ளது?
  • பொலன்னறுவை.
  1. அனுராதபுரத்தில் உள்ள ‘ருவன்வெலிசாய’ தூபியைக் கட்டிய மன்னன் யார்?
  • துட்டகைமுனு.
  1. இலங்கையில் முதன்முதலில் ஒரு பெண்ணாக அரியணை ஏறியவர் யார்?
  • அனுலா தேவி.
  1. சீகிரியாவில் உள்ள சுவர் ஓவியங்களில் காணப்படும் பெண்களின் எண்ணிக்கை எத்தனை?
  • தற்போது 21 உருவங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
  1. அவ்கண’ புத்தர் சிலை எந்த மன்னனின் காலத்தில் செதுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது?
  • தாதுசேன மன்னன்.
  1. கலைப்படைப்பான ‘இசுறுமுனிய காதலர்கள்’ சிற்பம் எங்குள்ளது?
  • அனுராதபுரம் இசுறுமுனிய விகாரை.
  1. இலங்கையின் வரலாற்றைக் கூறும் ‘சூளவம்சம்’ யாரால் எழுதப்பட்டது?
  • தர்மகீர்த்தி தேரர்.
  1. பண்டைய இலங்கையில் வெ வ்பதஎன்பது எதனைக் குறிக்கும்?
  • குளம் சார்ந்த நீர்ப்பாசனச் சட்டங்கள்.
  1. கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனை ஆங்கிலேயர் எங்கு நாடு கடத்தினர்?
  • இந்தியாவின் வேலூர் கோட்டைக்கு.
  1. மகா பராக்கிரமபாகு மன்னனின் அமைச்சரவையில் இருந்த புகழ்பெற்ற தமிழ் அமைச்சர் யார்?
  • குளக்கோட்டன் (திருகோணமலைக் கோயிலைப் புதுப்பித்தவர்).

11. காலனித்துவ காலப் போராட்டங்கள் (இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்)

  1. 1818-ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த ‘ஊவா-வெல்லஸ்ஸ’ கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
  • கெப்பட்டிபொல திசாவ.
  1. 1848-ஆம் ஆண்டு மாத்தளைக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய இருவர் யார்?
  • வீரபுரன் அப்பு மற்றும் கொங்காலேகொட பண்டார.
  1. இலங்கையில் போர்த்துக்கேயரின் அதிகாரத்தை ஒழிக்க ஒல்லாந்தருடன் ‘கண்டி ஒப்பந்தம்’ செய்த ஆண்டு?
  • 1638.
  1. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குத் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தொழிலுக்காக அழைத்து வரப்பட்டனர்?
  • தேயிலை மற்றும் காப்பித் தோட்ட வேலைக்காக.
  1. இலங்கையில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் எது?
  • காலி டச்சு தேவாலயம்
  1. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட ஆண்டு எது?
  • 1981, ஜூன் 1.

12. அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசமைப்பு

  1. இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி எது?
  • லங்கா சமசமாஜக் கட்சி (1935).
  1. இலங்கை சுதந்திரக் கட்சியை தோற்றுவித்தவர் யார்?
  • எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க (1951).
  1. ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) தோற்றுவித்தவர் யார்?
  • டி. எஸ். சேனநாயக்க (1946).
  1. இலங்கையில் 1972-இல் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்?
  • கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா.
  1. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ள ‘சிங்கம்’ எதனைக் குறிக்கிறது?
  • சிங்கள இனம் மற்றும் வீரத்தைக் குறிக்கிறது.
  1. தேசியக் கொடியில் உள்ள ‘ஆரஞ்சு மற்றும் பச்சை’ நிறப் பட்டைகள் எதனைக் குறிக்கின்றன?
  • தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைக் குறிக்கின்றன.
  1. இலங்கையின் உச்ச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
  • கொழும்பு
  1. இலங்கையில் ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
  • 5 ஆண்டுகள் (தற்போதைய சட்டப்படி).

12. நீர்ப்பாசனம் மற்றும் புவியியல் அடையாளங்கள் (இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்)

  1. இலங்கையில் ‘கலாவெ வ’ குளத்தைக் கட்டிய மன்னன் யார்?
  • தாதுசேனன்.
  1. பண்டைய இலங்கையில் ‘யோத எல’ கால்வாயின் சிறப்பு என்ன?
  • இது மிகக் குறைந்த சரிவைக் கொண்டது (ஒரு மைலுக்கு சில அங்குலங்கள் மட்டுமே).
  1. இலங்கையின் மிகப்பெரிய குளம் எது?
  • பராக்கிரம சமுத்திரம்.
  1. மன்னாரில் உள்ள ‘கட்டுக்கரை குளம்’ யாரால் கட்டப்பட்டது?
  • வசப மன்னன்.
  1. இலங்கையின் மிக ஆழமான துறைமுகம் எது?
  • திருகோணமலை இயற்கை துறைமுகம்.
  1. இலங்கையில் ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் நகரம்?
  • நுவரெலியா.
  1. இலங்கையின் எந்தப் பகுதியில் இரத்தினக்கற்கள் அதிகம் கிடைக்கின்றன?
  • இரத்தினபுரி.

13. மதம் மற்றும் இலக்கியம்m (இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்)

  1. இலங்கையின் மிகப்பழமையான தமிழ் இலக்கியமான ‘சரசோதிமாலை’ எப்போது எழுதப்பட்டது?
  • கி.பி. 1310 (தம்பதெனிய காலம்).
  1. புத்தரின் திருத்தந்தம் முதன்முதலில் எந்த நகரத்தில் வைக்கப்பட்டது?
  • அனுராதபுரம்.
  1. இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்ப வந்த சங்கமித்தை எதைக் கொண்டு வந்தார்;?
  • ஸ்ரீ மகா போதி கிளையை (அனுராதபுரத்தில் நடப்பட்டது).
  1. ‘தர்மசக்கரம்’ இலங்கையின் எந்தச் சின்னத்தில் காணப்படுகிறது?
  • இலங்கையின் தேசிய இலச்சினையில்
  1. முஸ்லிம்களின் புனிதத் தலமான ‘தப்தர் ஜெய்லானி’ எங்குள்ளது?
  • கூரகல (பாலங்கொடை).
  1. யாழ்ப்பாண அரசர்களின் கொடியில் இருந்த சின்னம் எது?
  • நந்தி (மாடு).

14. பொது அறிவு மற்றும் நவீன கால நிகழ்வுகள் (இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்)

  1. இலங்கையில் ‘சென்சஸ்’ எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முதலில் எப்போது நடந்தது?
  • 1871.
  1. இலங்கையின் முதலாவது வானொலி நிலையத்தின் பெயர் என்ன?
  • கொழும்பு வானொலி (பின்னர் இலங்கை வானொலி).
  1. இலங்கையில் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
  • 1979.
  1. இலங்கையில் 2004-இல் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் எது?
  • சுனாமி
  1. இலங்கையின் முதலாவது செய்மதி எது?
  • ராவணா-1
  1. இலங்கையில் உள்ள உலகப் பாரம்பரியத் தளங்களின் எண்ணிக்கை?
  • 8 இடங்கள்.
  1. இலங்கையின் தேசிய மரம் ‘நாக மரம்’ என அறிவிக்கப்பட்ட ஆண்டு?
  • 1986.
  1. இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற ஆண்டு?
  • 1996.
  1. இலங்கையில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையம் எது?
  • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (கட்டுநாயக்க).
  1. இலங்கையின் மிக நீளமான பாலம் எது?
  • கிண்ணியா பாலம் (திருகோணமலை).
  1. இலங்கையில் ‘வெள்ளையர்’ (ஐரோப்பியர்) ஆட்சியை முற்றாக ஒழித்த ஆண்டு?
  • 1948.
    15. பண்டைய நீர்ப்பாசனமும் பொருளாதாரமும்
  1. இலங்கையில் ‘குளங்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
  • பொலன்னறுவை.
  1. கந்தளாய் குளத்தை நிர்மாணித்த மன்னன் யார்?
  • இரண்டாம் அக்கபோதி.
  1. பண்டைய இலங்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய வாசனைத் திரவியம் எது?
  • கருவா
  1. இலங்கையின் வரலாற்றில் ‘நீர்ப்பாசன மன்னன்’ என்று போற்றப்படுபவர் யார்?
  • மகா பராக்கிரமபாகு.
  1. பண்டைய காலத்தில் ‘மாதோட்டம்’ துறைமுகம் எதற்குப் புகழ் பெற்றது?
  • குதிரைகள் மற்றும் முத்து வணிகத்திற்கு.
  1. இலங்கையில் ‘மின்னேரிய குளம்’ யாரால் கட்டப்பட்டது?
  • மகாசேன மன்னன்.
  1. மகாசேன மன்னன் மக்களால் எவ்வாறு தெய்வமாகப் போற்றப்பட்டார்?
  • மின்நேரிய தேவா
  1. இலங்கையில் ‘பதவிய குளம்’ யாரால் கட்டப்பட்டது?
  • முதலாம் முகலன்.
  1. பண்டைய காலத்தில் வன்னிப் பகுதியை ஆட்சி செய்த தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • வன்னியபங்கள்.

16. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக் குறிப்புகள்

  1. இலங்கையில் போர்த்துக்கேயரின் முதல் கோட்டை எங்கு அமைக்கப்பட்டது?
  • கொழும்பு (1518 இல்).
  1. இலங்கையில் ‘இலத்தீன்’ எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
  • போர்த்துக்கேயர்.
  1. ஒல்லாந்தர் இலங்கையில் தங்களது நிர்வாக மையமாக எதனைப் பயன்படுத்தினர்?
  • கொழும்பு மற்றும் காலி.
  1. ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட மிக நீளமான கால்வாய் எது?
  • ஹாமில்டன் கால்வாய் (கொழும்பு – நீர்கொழும்பு).
  1. இலங்கையில் ‘கத்தோலிக்க மதம்’ யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
  • போர்த்துக்கேயர்.

மேலதிக இணைப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள