இது உங்களின் குரல்களுக்கான தளம்

ரேபீஸ் நோயும் நிவாரணமும் – Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)

4–5 minutes

Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)
சிரேஷ்ட வைத்திய அதிகாரி
ஆதார வைத்தியசாலை
ஏறாவூர்

உலகில் ‘குணப்படுத்தவே முடியாது… நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்ற வகையறாக்குள் அடங்கும் ஒரு நோய் ரேபீஸ் எனப்படும் விசர் நாய்க்கடி நோயாகும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர்.
அதேவேளை, இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மையாகும்.

ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு கிடையாது. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகளில்
உயிர் வாழுங்கள் கிருமியாகும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபீஸ் நோய் ஏற்பட்டுவிடும். வரும். முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘விசர்நாய்க்கடி நோய்’ என்கிறோம்.

பரவுகை

ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முள்ளந்தண்டு முண்ணான் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும். இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால், பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். முகத்திலோ, கழுத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

அறிகுறிகள்

பொதுவாக, வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றலாம். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி . உணவு சாப்பிட முடியாத நிலை போன்றன ஏற்படும். தண்ணீர் குடிக்க முடியாத நிலை தோன்றுதால் நோயாளிகள் மிகவும் சிரமத்தை அனுபவிப்பார்கள். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்குவதற்கு உதவும் தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிப்பதற்கு அச்சம் அடைவார்கள். இந்த நிலை‘ஹைட்ரோபோபியா’ என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும் நிலையேற்படும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள். (Restless) எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்து வதும் கடிக்க வருவதுமாக நிலைமை தோன்றும். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பு ஏற்படும் .

தெருநாய்கள் காட்டு விலங்குகள் மற்றும் கண்காணிக்க முடியாத விலங்குகளினால் ஏற்படும் காயங்களுக்கான நிவாரணம் –

ரேபீஸ் முற்காப்பு தடுப்பூசி (ஏ ஆர் வி புரஃபிலக்சிஸ்)

இது மனித குலத்தின்
உயிர் காக்கும் தடுப்பூசியாகும்.
நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது பழைமையான ஒரு நடைமுறை. இப்போது நவீன நிவாரண முறையில் தடுப்பூசிகள் இரண்டு கைப்புயங்களிலும் போடப்படுகின்றன வந்துவிட்டன. ஐந்து சோடி ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்துவிடலாம். நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 30வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் அந்த காயத்தினால் ஏ ஆர் எஸ் எனப்படும் மருந்து செலுத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது.

இதற்கு அதிக செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இத்தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

வீட்டுநாய்க்கடிக்கான நிவாரணம்

வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும்,
போடாமல் விட்டிருந்தாலும் ஒரே நிவாரணம்தான்.அதாவது,

அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தேவையில்லை . ஆனால் ,அதே நேரத்தில் அந்த நாயை 14 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். 14 நாட்களுக்குள் நாய் இறந்து விட்டாலோ அல்லது நாய்க்கு நோய் மற்றும் விசர் ஏற்பட்டு விட்டாலோ அல்லது நாய் தொலைந்து போய்விட்டாலோ (அதாவது நாயை கண்காணிக்க முடியாது போய்விட்டாலோ) நிச்சயம் ரேபீஸ் முற்காப்பு ஊசிகளை தொடங்கி விடவேண்டும்.

வெறிநாயின் அடையாளம்

ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும். எந்நேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும். எதுவும் சாப்பிடாமல் இருந்து 10 நாளில் இறந்து போகும்.

எச்சரிக்கை

சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். வீடுகளில் செல்லப்பிராணிகளாக விலங்குகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கு ரேபீஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இவர்கள் வளர்க்கும் விலங்குகளோடு நெருங்கிய தொடர்புடையவராக இருப்பதால் நிச்சயம் ரேபிஸ் தடுப்பூசிகளை அவ் விலங்குகளுக்கு போட்டுக் கொள்வது அத்தியாவசியமாக பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறான விலங்குகளை கையாளும்போது பிராண்டுதல், நாவினால் தீண்டுதல் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளை அறிவதில்லை.

இலங்கையில் ரேபீஸ் “முன்காப்பு (Pre-exposure prophylaxis)” தடுப்பூசிகள்

இந்த முன்காப்பு பேபிஸ் தடுப்பூசிகள் குறிப்பிட்ட உயர் ஆபத்து குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன. இது பொதுமக்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படுவதில்லை.

இலங்கையின் நடைமுறை

விலங்குகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள் போன்ற உயர் ஆபத்து நபர்களுக்கு:
கால்நடை மருத்துவர்கள் (Veterinarians)
விலங்கு பராமரிப்பு ஊழியர்கள்
ரேபீஸ் ஆய்வக பணியாளர்கள்
வனவிலங்கு அதிகாரிகள்
விலங்கு தனிமைப்படுத்தும் நிலையங்களில் வேலைசெய்யும்ோர்
ரேபீஸ் தடுப்பு பணியாளர்கள்

இவர்கள் “high-risk group” உயர்வான ஆபத்துக்குரியவர்கள் எனக் கருதப்படுகின்றனர், அதனால் முன்காப்பு தடுப்பூசி வழங்கப்படுகிறது .
0, 7, 28 நாட்களில் மூன்று தடுப்பூசிகள்
1 வருடத்திற்கு பிறகு booster தடுப்பூசி
அதன் பின்னர் 5 வருடத்திற்கு ஒருமுறை booster தடுப்பூசி வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு பொதுவாக கடி அல்லது exposure ஏற்பட்ட பின் (Post-exposure prophylaxis) தான் வழங்கப்படுகிறது
இது அரச மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது.

வீட்டு நாய்களுக்கான தடுப்பூசி

இலங்கையில் வீட்டு நாய்களுக்கு (Domestic dogs) ரேபீஸ் தடுப்பூசி வழங்கும் முறை அரசு சுகாதார மற்றும் கால்நடை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது.
ரேபீஸ் தடுப்பூசி அட்டவணை (Sri Lanka)

  1. குட்டிநாய் (Puppy) காலத்தில்
    முதல் தடுப்பூசி:
    4–6 வார வயதில் தொடங்கலாம்
    இரண்டாம் டோஸ் (Booster):
    முதல் டோஸுக்கு 3 மாதங்களுக்கு
  2. பொதுவான நடைமுறை (பல இடங்களில்)
    தாய் நாய் தடுப்பூசி போட்டிருந்தால்:
    👉 குட்டிநாய்க்கு 3 மாத வயதில் முதல் டோஸ்

தாய் நாய் தடுப்பூசி போடப்படாதிருந்தால்:
அதிகால வயதில் (early age) தொடங்கலாம்

  1. தொடர்ந்து (Booster doses)
    ஒவ்வொரு ஆண்டும் (Annual vaccination) அவசியம்

முக்கிய குறிப்புகள்
6 வாரத்திற்கு மேல் உள்ள அனைத்து நாய்களும் தடுப்பூசி பெற வேண்டும் .
தடுப்பூசி பதிவுகள் (vaccination record) வைத்திருக்க வேண்டும்
அரசு மருத்துவ/கால்நடை அலுவலகங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இலங்கையில் மனிதர்களுக்கு ரேபீஸ் பரவும் முக்கிய காரணம் நாய்க்கடி.நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மனிதர்களை பாதுகாக்கும் முக்கிய அம்சமாகும்.

நாய்க்கடிக்கு நவீன சிகிச்சை

ரேபீஸ் நோயாளியை சில மருந்துகள் மூலம் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு சென்று, அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஒரு வாரத்துக்குக் கொடுத்து வந்தால், ரேபீஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால், நோய் குணமாகிவிடுகிறது. இது எல்லோருக்கும் பலன் தரும் எனக் கூற முடியாது. உடலுக்குள் புகுந்த ரேபீஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை மூளையைத் தாக்குவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் ரேபீஸ் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இதுவரை உலகில் 7 ரேபீஸ் நோயாளிகள் இப்படி உயிர் பிழைத்து வரலாறு படைத்துள்ளனர். உயிர் காக்கும் இந்தச் சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டக்கால் (Milwaukee protocol) என்று பெயர். இந்தியாவின் தமிழகத்தில் வேலூரிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள