இது உங்களின் குரல்களுக்கான தளம்

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

3–4 minutes

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன.


நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால் அற்புதமாக செதுக்கியிருந்தாள் அம்னா. அபாயாக்கள், பெண்களுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள், இன்னும் இன்னும் இத்தியாதிகள் என பூரணமாக்கப்பட்டிருந்த அந்த மாளிகையை நோக்கி பல பிரதேசங்களில் இருந்தும் பட்டாளம் பட்டாளமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

அதனோடு சேர்த்து தனது தையல் வேலைகளையும் நடாத்திக் கொண்டிருந்தாள். இப்போது அதில் மட்டும் பதினொரு பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சென்ற மாதம்தான் நோன்புப் பெருநாள் வந்துவிட்டுப் போயிருந்தது. நோன்புப் பெருநாளில் பெண்கள் ஆடைக்கடை வியாபாரம் என்றால் கேட்கவும் வேண்டுமா! ஒரு சூறாவளி அடித்தது போன்றிருந்தது வியாபாரம். ஒரு நொடி கூட ஓய்வில்லாமல் அரக்கப் பரக்க வேலை செய்ய வேண்டியிருந்தது.

பெருநாள் கடந்துவிட்ட பின்பும் இரண்டு வாரத்திற்கு முதுகு வலி.
ஆனாலும், கனவுகளுக்காக போராடுவதில் உள்ள வலியும் அதீத சுகம்தானே!


அன்று ஞாயற்றுக் கிழமை

அம்னா தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தாள். கண்கள் முழுக்க எதிரே செழித்து வளர்ந்திருந்த மரதோண்டி மரங்களை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படியும் இருபது மரங்களாவது இருக்கும். இவற்றின் இலைகளை பரிபக்குவமாய் பறித்து… அரைத்து… என அவளது கற்பனைகள் நீண்டு கொண்டிருந்த போது…
பின்னால் காலடிச் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்க்க பக்கத்து வீட்டு ஆயிஷா நின்று கொண்டிருந்தாள்.

‘உங்களை அவசரமாக வரட்டாம். யாரோ இளவரசன் உங்களைப் பார்க்க வந்திருக்கானாம். ஆஹ், சொரி.. இளவரசர் உங்களைப் பார்க்க வந்திருக்கின்றாராம்’ என்றாள் நமட்டுச் சிரிப்புடன்..

‘இளவரசனா…!’ அம்னாவின் புருவங்கள் உயர்ந்தன.

யாராக இருக்கும்…

அவளது ஆச்சரியத்தைப் பார்த்து ஆயிஷாவை விஷயத்தைப் போட்டுடைத்தாள். ‘உங்களைப் பெண் கேட்டு கொழும்பில் இருந்து யாரா வந்திருக்காங்களாம். உம்மா உங்களை அவசரமாக அள்ளிட்டு வரச் சொன்னாங்க’ என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து சென்று விட்டாள்.
அம்னா கொஞ்சம் குழம்பித்தான் போனாள். காலங்கள் எத்தனை கடந்தாலும் என்னும் கடந்த கால காயங்களின் வலிகள் இன்னும் மறையவில்லை. முதன் முதலாக பூத்த நேசத்தின் வலியை யாரால் விழுங்கித் தொலைக்க முடியும்? அஸ்ஜத்தை அவள் மனதாரத்தான் கொண்டாடினாள். அவன் போதைக்கு அடிமை என தெரிந்த பின்பும் ஒரேயடியாக அவனை வெறுத்துவிடவில்லை. எப்படியாவது அவனை திருத்தி விடலாம் என்றுதான் முயற்சித்தாள்.

ஆனாலும்…

என்ன செய்வது.. விதியெழுதும் தீர்ப்புக்களை ஜீரணித்துக் கொள்ளத்தானே வேண்டும் என வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டு வாசலில் பென்னம் பெரிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டு ஜீனத்தும்மா மாமி குறுகுறு பார்வையுடன் தென்னை மரத்திற்கு பின்னால் மறைந்திருந்து பார்ப்பதை ஓரக் கண்ணால் பார்த்து இரகசியமாக சிரித்தவாறே வீட்டுக்குள் நுழைந்தாள்.
முன் ஹோலில் அக்ரம் உட்கார்ந்திருந்தான்.

அம்னா எதிர்பார்த்ததுதான்.

அவனது பேச்சுத் தோரணையை வைத்தே என்றாவது ஒருநாள் தன்னை பெண் கேட்டு வருவான் என அவளுக்குத் தெரிந்திருந்தது. அது பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் அபூர்வ ஆற்றல். எவன் எந்த நோக்கத்திற்காக பழகுகின்றான் என்று ரொம்பவுமே சுலமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால், எதுவுமே விளங்காதது போன்று நடித்துக் கொள்வார்கள்.
அம்னாவைக் கண்டதும் அக்ரம் பதற்றமானான்.

மௌனத்தை அக்ரமின் உம்மாதான் உடைத்தார். வழமையாக நேரடியாக எல்லாத்தையும் சொல்லும் வழக்கம் உள்ளவர் என்பதால் எடுத்தவுடனேயே விசயத்திற்கு வந்தார்.

‘அம்னாவை இப்போ எல்லாம் பிடிக்குறது எவ்ளோ கஷ்டம் என்று தெரியுமா! போன் எடுத்தால் பேச்சே இல்லை. சரி அது இருக்கட்டும். விசயத்திற்கு வாரன். அக்ரமுக்கு வீட்ல கல்யாணப் பேச்ச எடுத்து நாலு வருசமாச்சு. ஏதாவது நொண்டிக் காரணம் சொல்லி ஓடிக் கொண்ட இருந்ததான். நேற்றுதான் அவனுக்கு உன்னைப் பிடிக்கும் என்று சொன்னான். அதுதான் இன்றைக்கே புறப்பட்டு வந்துவிட்டோம்’ என்றார்.
அக்ரம் வெட்கப்பட்டான்.
அம்னாவின் உம்மாவின் முகத்தில் ஆயிரம் வருடங்களாக காணாமல் போயிருந்த ஈரப் புன்னகை மெதுவாக எட்டிப் பார்த்தது. அல்லாஹ் தன் மகளுக்கு ஒரு வழியைக் காட்டிட்டான் என மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டார்.

ஆனால், அம்னாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும்தான். ஆனால், என்ன முடிவு எடுப்பது என்றும் குழப்பமாக இருந்தது. அக்ரமை அவளுக்கு இந்த நான்கு வருடங்களாக நன்றாகத் தெரியும். அவளின் வாழ்வில் நடந்த சங்கதிகளும் அவனுக்குத் தெரியும்.

ஆனால்,

ஆனாலும்,

அவளால் ஒரு முடிவுக்கு வரவில்லை.

வாப்பா இருந்தால் தெம்பாக முடிவெடுக்கலாம். எந்த முடிவு எடுத்தாலும் அவர் துணையாக நிற்பார். இப்போது யார் இருக்கின்றார். ‘எனக்கு யோசிக்க கொஞ்ச டைம் வேணும்’ என்று அவர்களின் மனது நோகாதபடி சொல்லி அனுப்பிவிட்டாள்.

அடுத்த நாள்

அதிகாலை

இன்னும் முழுதாக விடியவில்லை.
சின்னஞ் சிறு புற்களின் நுனி மீது இருந்த பனித்துளிகளில் சூரியன் நிச்சலடித்துக் கொண்டிருந்தது.
வாப்பாவின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தாள் அம்னா. வாப்பாவின் கப்றின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. பார்வை வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.
ஒரு பெண்ணுக்கு இந்த உலகில் மிகவும் பெறுமதியானது என்ன? வைரக் கற்கள் பதித்து தங்க ஆபரண்களா? அல்லது அவளை அலங்கரித்துக் காட்டும் ஆடைகளா? அல்லது பளிங்குத் தரைகள் பதித்த மாடமாளிகையா?
சத்தியமாக எதுவுமேயில்லை. அவளுக்கு அடிப்படைத் தேவை ஒரு உண்மையான நேசம். எப்போதும் எங்கும் எதற்காகவும் யாருக்காவும் தன்னை விட்டுக் கொடுக்காத ஒரே ஒரு நேரம். அது மட்டும் அவளுக்கு தாராளமாகப் போதும். எவ்வித முன்னாயத்தங்களும் தயாரிப்புக்களும் இன்றி விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு பேச ஒரு நேசம். எமது குறைகளை குத்திக்காட்டாத, எமது வேதனைகளை பாடப்போதனை செய்ய பயன்படுத்திக் கொள்ளாத, எமது கிறுக்குத்தனங்களை கேலி செய்யாத நேசம். நாம் சொல்லமாலேயே சொல்ல வருகின்றதை புரிந்து கொள்கின்ற… அறியாமல் செய்த தவறுகளை சிறு புன்னகையுடன் மன்னிக்கின்ற நேசம்…
அந்த நேசத்தை அள்ளித் தர ஆகச் சிறந்த ஆள் வாப்பாதான். அதற்குப் பின்னர்தான் மற்ற எல்லாரும்….

வாப்பாவின் கப்றை ஏறிட்டுப் பார்த்தாள் அம்னா. ‘இருந்தாலும் இவ்வளவு அவசரமாக.. இந்த உலகத்துல என்னை தனியே தவிக்க விட்டுட்டு போயிருக்கக் கூடாது வாப்பா!’ என விம்மினாள்.

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள