இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும் செயற்பாடையும் நோக்கினால் அதில் மனிதனின் நலனுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
நோன்பைப் பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில், ‘நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)’ (2:184) என்று குறிப்பிட்டுள்ளான்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்:
- எமது இப்தார் மற்றும் ஸஹ்ர் உடைய நேரங்களில் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றல்.
- ஒவ்வொருவரது உடல் ஆரோக்கிய நிலைக்கேற்ப போதுமான தூக்கத்தில் கவனம் செலுத்தல்.
- எமது வீட்டிலுள்ள சிறார்களும் எம்முடன் இணைந்து நோன்பு நோற்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். எனவே, அவர்கள் நோன்பு நோற்கும் விடயத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளல்.
- கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோருக்கு நோன்பு நோற்பதில் சில சலுகைகள் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளன.
- நோன்பு நோற்க சக்தியற்ற வயோதிகர்களுக்கும் நிரந்தர நோயாளிகளுக்கும் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது. அதேநேரம் அந்த ஒவ்வொரு நோன்புக்காகவும் அவர்கள் ஒரு مُد (முத்) அரிசியை ஃபித்யாவாக கொடுக்க வேண்டும். ஒரு مُد (முத்) என்பது 600 கிராம் ஆகும்.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் நாட்பட்ட, கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக…!!




Leave a Reply