இது உங்களின் குரல்களுக்கான தளம்

குர்ஆனை மனனமிட ஒரு சிறிய டிப் – Inshira Ifham

1–2 minutes

– Inshira Ifham

ஒர் இளைஞன் இன்ஜினியர் faculty இற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.
நான்கு வருட கற்கை . இவர் தனது பல்கலைக்கழக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகையின் பின்னர் அல்குர்ஆனில் ஐந்து வசனங்களை மனனம் செய்கின்றார்.
அன்றைய நாளுக்குரிய தொழுகைகளில் அந்த வசனங்களை ஓதுகின்றார். ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒர் உஸ்தாதை சந்தித்து அந்த வாரம் மனனம் செய்தவற்றை ஓதிக் காட்டுகிறார். நான்கு வருட கற்கை முடியும் போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழ் உம் அவர் இன்ஜினியரும் அவர்.

ஆக அல்குர்ஆனை மனனம் செய்ய மத்ரஸா ஒன்றில் சேர வேண்டிய எந்தத் தேவைப்பாடும் இல்லை. மத்ரஸா போறவர்கள் மாத்திரம் தான் குர்ஆனை மனனம் செய்ய வேண்டும் என்றுமில்லை. நான் இன்ஜினியரிங் செய்றேன் எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என அந்த இளைஞர் சோம்பிப் போகவில்லை.

நாமலும் ட்ரை பண்ணலாமா?? .
அம்ம ஜுஸு விலிருந்து ஆரம்பிக்கலாம்.
சுபஹ் தொழுகையின் பின்னர் ஒன்றோ இரண்டோ வசனங்களை பார்த்து ஐந்து தடவை ஓதலாம் ஆறாம் தடவை அது மனனமாகிவிடும். மனனமாகவில்லையா? சோர்ந்து போகத் தேவையில்லை மீண்டும் ஒரு ஐந்து தடவை ட்ரை பண்ணலாம் .

பின் அடுத்த தொழுகையிற்கு முன்னர் அந்த வசனங்களை குர்ஆனில் பார்த்து ஓதிக் கொண்டு முதல் ரகஅத்தில் ஸூரா பாத்திஹாவிற்கு பிறகு நாம் மனனம் செய்த வசனங்களை ஓத வேண்டும் .
சில நேரம் ஓரே தடவையில் ஞாபகம் வராது அடுத்தடுத்த தொழுகைகளில் முயற்சிக்கும் போது இன்ஷா அல்லாஹ் கட்டாயம் வசனங்கள் வாய்க்குள் நுழைந்துவிடும்.

ஒவ்வொரு முறையும் அந்த வசனங்கள் மனனமாக நாவினால் உச்சரிக்கும் போது அடையும் குதூகலம் இருக்கே அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும் .

அகில இரட்சகன் முன்னால் , அவனது கலாமை ஒப்புவிக்கும் போது புல்லரித்துப்போவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அடுத்த நாள் சுபஹுத் தொழுகைவரை நாம் தொழும் ஒவ்வொரு தொழுகையிலும் அதைக்கடைபிடிக்க வசனங்கள் சிலையில் எழுத்தாக மனதில் பதிந்து போகும்.

மனனமிடும் போது தர்ஜுமத்துல் குர்ஆனை பயன்படுத்துவது சிறந்தது. அந்த வசனங்களின் பொருளையும் மனதில் இருத்திக் கொண்டால் தொழுகையில் போகஸும் கூடும்.

அவசரம் தேவையில்லை. சும்மா இருப்பதிலும் ஒரு நாளுக்கு ஒரு வசனத்தை மனனமிடுவதும் சிறப்புத்தானே.

மெது மெதுவாக ஆரம்பிப்போமா?
நான் ஆரம்பித்து விட்டேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள