இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Inshirah Ifham

  • Untitled post 984
    0

    அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!! என்ன நானா நீங்க சிவ பூஜைல கரடி பூந்த மாதிரி கலச்சுட்டீங்க” என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டே வேலையை ஆரம்பித்தனர். “ யோசிக்கிறிங்களா கத இடைல மறைந்து போயிற்று என்று !!! பொறுங்கள் சிறிது தூரம் சென்று விபரிக்கிறேன்.” – தொடரும் –

    மேலும் வாசிக்க…

  • Untitled post 980
    0

    பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான வீடு கூடவே அழகும் கலந்து அனைவரது கண்களையும் பறிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. மீராவுக்கோ அளவுக்கு மீறிய சந்தோசம். அதை விட ரீசாவுக்கு புதிய இடம் மிகவும் பிடித்துப்போயிற்று. அதற்கு காரணங்கள் பல இருக்க மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துக்கொண்டிருந்தன. – தொடரும்-

    மேலும் வாசிக்க…

  • Untitled post 977
    0

    கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன் சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அஹ்மத் எடிப்பார்த்தல் சாமான்களை ஏற்றிச்செல்ல லாரி வந்து வெளியே நின்றுகொண்டிருந்தது. – தொடரும்-

    மேலும் வாசிக்க…

  • Untitled post 974
    0

    ”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “ என்று கூறியவளும் நகர்ந்தாள். அடுத்த நாளை வரவேற்பதற்காக சேவலும் நேர காலத்தோடு விழித்துக்கொண்டது போலும். வளமையை விட உற்சகமாக கூவி சூரியனை அழைத்தது. சூரியனும் என்றும் இல்லாத பிரகாசத்தோடு எட்டிப்பார்க்க மீரா விழித்துக்கொண்டாள். -தொடரும்-

    மேலும் வாசிக்க…

  • Untitled post 970
    0

    “என்ன நீங்க இப்புடி சொல்றிங்க.அவ அவட வேல எல்லாதையும் முடிச்சிட்டு தான் சும்மா இருக்கா” என்று மீரா கூறினாலும் பாரிஸ் ஹாஜியரோ வாயை மூடாமல் தொடர்கிறார் “ஏதேதோ சொல்லி சமாளிங்க.நானும் சில நாட்களா பாத்துட்டு தான் இருக்கேன் ரீசாட போக்குனா எனக்கு சரியா படல்ல, நீங்க எல்லாதையும் செய்றிங்க அவ போன்லயே இருக்கா, இப்போ சுபஹ் தொழ எழும்புறதும் இல்ல,இரவாகி தூங்குறதும் தாமதமா தான்” என்று கூறிவிட்டு படுக்கையை நோக்கி நகர்கிறார் தந்தை. -தொடரும்-

    மேலும் வாசிக்க…

  • Untitled post 967
    0

    “மகள்! மகள்! எல்லா சாமான்கலயும் பாத்து எடுங்க திரும்ப வர ஏலா தெரியும் தானே?”. தலையை அசைத்தவாறு ரீசா அங்கும் இங்கும் ஓடினாலும் எதையும் எடுத்ததாக காணவில்லை. “ ”சாப்பிட்டச்சு தானே இப்போ போய் தூங்குவோம்.அப்போ தான் காலைல எழும்பலாம்”. என்கிறாள் தாய் மீரா. பாரிஸ் ஹாஜியாரோ ரீசாவை வெறித்து பார்த்த வண்ணம் “இவளுக்கு ஃபோன் வாங்கிக்கொடுத்தது எண்ட தப்பு தான் போல” என்கிறார் கோவத்தோடு….

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள