April 9, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

5–7 minutes

சிறுவர்களுக்கான
நபியவர்களின் வாழ்கை வரலாறு

அஹதியாப் பாடசாலைகளுக்கு, குர்ஆன் மத்ரஸாக்களுக்கு, நபியவர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு,

(முதலாவது அத்தியாயம்)

01. ஜாஹிலிய்யாக் காலம்


ஆசியக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓர் தீபகற்பம்தான் அரேபியா ஆகும். ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய முப்பெரும் கண்டங்களின் மையப்புள்ளியாக அரேபியா அமைந்திருக்கின்றது. அரபு மொழியில் இப்பகுதி ‘ஜஸீரத்துல் அரப்’ என அழைக்கப்படுகின்றது.
அரேபியா என்பது பெரும்பாலும் அகன்ற பாலைவனங்களைக் கொண்ட பூமியாகும். ஆங்காங்கே சில பசுந்தரைகளை மாத்திரமே பார்க்க முடியும். இந்த பகுதிகளில் நபியவர்களின் பிறப்புக்கு முற்பட்ட காலத்தை நாம் ஜாஹிலிய்யாக் காலம் என அழைக்கின்றோம்.
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கள் முட்டாள்தனம், முரட்டுத்தனம், அநீதி போன்ற அறியாமைகளுக்குள் மூழ்கி வாழ்ந்தனர். அன்று வாழ்ந்த மக்கள் பீப்பாய்களில் மதுவை நிரப்பி அருந்திக்கொண்டிருந்தார்கள். எதிரிகள் மண்டையோடுகளில் மது அருந்துவதை தமது இலட்சியமாகக் கொண்டிருந்தனர். ஏழை எளிய மக்களை ஏமாற்றியும் அவர்களை வதைத்தும் வாழ்ந்துகொண்டிருந்தனர்.
அந்த மக்கள் அல்லாஹ்வோடு சேர்த்து இன்னும் பல விடயங்களையும் கடவுளாக வணங்கிக்கொண்டிருந்தனர். குறி சொல்பவர்களை கடவுளின் தரத்திற்கு உயர்த்தி அவர்களை போற்றிக்கொண்டிருந்தனர். உண்மை, நேர்மை, சமத்துவம், மனிதம் போன்ற மனித வாழ்வுக்குத் தேவையான எந்தவொரு விடயமும் அங்கு காணப்படவில்லை. ஆயினும் அவர்கள் சிலரிடம் வாக்கு மீறாமை, விருந்தோம்பல், அமானிதம் பேணுதல் போன்ற சிற்சில நல்ல வழக்கங்களும் இருந்தன.


ஜாஹிலிய்ய சமூகம் பெண்களை அவமாச் சின்னமாக கருதினர். அதனால் எந்த பாவமுமே அறியாத அப்பாவி பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கொன்று புதைத்துக்கொண்டிருந்தார்கள்.

நபியவர்கள் வாழ்ந்த அரேபியாவில் மாத்திரமல்ல, அன்று ஒட்டுமொத்த உலகமும் இவ்வாறுதான் அநீதிகளாலும் அறியாமையாலும் நிரப்பப்பட்டிருந்தது.
இப்போதுதான் உலகிற்கு ஒரு விடிவு தேவைப்பட்டது. மனிதனை மனிதனாக வாழ வைக்க ஒரு வழிகாட்டல் தேவைப்பட்டது. மனிதர்களுக்கு வழிகாட்ட ஒரு வழிகாட்டி தேவைப்பட்டார்.

வினாக்கள்

02. நபியவர்கள் பிறப்பு

இந்த மனித இனத்தின் மிகச்சிறந்த மனிதரான முஹம்மத் நபியவர்கள் யானை வருடம் என அழைக்கப்படும் (ஆமுல் பீல்) வருடத்தில் மக்காவின் பிரபல குறைஷிக் கோத்திரத்தில் பனூ ஹாஷிம் குலத்தில் பிறந்தார்கள். அது அரபு வழக்கப்படி ரபீஉல் அவ்வல் மாதம் பனிரெண்டாம் நாளாகவும் திங்கட் கிழமையாகவும் இருந்தது.

நபியவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் நபியவர்கள் பிறக்க ஆறு மாதத்திற்கு முன்பே மரணித்து விட்டார்கள் என்பதையும் நபியவர்களின் தாயார் ஆமினா நபியவர்களின் ஆறாம் வயதில் மரணித்துவிட்டார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

அக்கால வழக்கப்படி நபியவர்கள் பால்குடி வளர்ப்பிற்காக கிராமப்பகுதில் வாழ்ந்த அன்னை ஹலீமா நாயகியிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அங்குதான் நபியவர்கள் தூய அரபுமொழியை உச்சரிக்க கற்றுக்கொண்டார்கள். இறுதியாக, நபியவர்களை அக்காலத்தில் மக்கா மக்களின் தலைவரான, நபியவர்களது பாட்டனார் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால், இரண்டு ஆண்டுகள் கடக்க முன்பே அப்துல் முத்தலிபும் மரணமடைந்துவிட இறுதியாக நபியவர்களை அவர்களுடைய சிறிய தந்தை பொறுப்பேற்றுக்கொண்டார். நபியவர்களும் அபூதாலிப் அவர்களின் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வளர்ந்தார்கள். சிலவேளை தனது சிறிய தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கவும் செல்வார்கள்.


நபியவர்களது பன்னிரண்டு வயதில் அபூதாலிப் அவர்கள் தனது வியாபார விடயமாக ஷாம் பிரதேசத்திற்கு செல்லப் புறப்பட்டார்கள். சிறுவராக இருந்த நபியவர்களுடம் அடம்பிடித்து தனது சிறிய தந்தையுடன் புறப்பட்டுவிட்டார்கள்.
ஆனால், ஷாம் செல்லும் வழியில் நபியவர்களை நன்கு கூர்ந்து அவதானித்த பஹீரா எனும் பாதிரியாரின் முகம் மாற்றமடைந்தது. உடனே அபூதாலிப் அவர்களை அழைத்து ‘இவர் சாதாரண சிறுவர் அல்ல, இவர்தான் எதிர்காலத்தில் இறைத்தூதராக வரப்போகின்றார்கள். நீங்கள் இவரை ஷாம் பிரதேசத்திற்குள் அழைத்துச்சென்றால் இவரை அடையாளம் காணும் யூதர்கள் இவருக்கு ஏதாவது துன்பம் செய்ய முற்படலாம்’ என எச்சரித்தார்கள். ஆகவே நபியவர்கள் உடனடியாக மக்காவிற்கே திரும்ப வேண்டி இருந்தது.

வினாக்கள்

03. நபியவர்களின் இளமைக்காலம்

முஹம்மத் அவர்கள் சிறு வயதிலயே சிறந்த பண்பாடு உள்ளவராக இருந்தார். அதனால்தான் மக்கள் அவரை ‘அஸ்ஸாதிக்‘ (உண்மையாளர்), ‘அல் அமீன்’ (நம்பிக்கைக்கு உரியவர்) என அழைத்தனர். மக்கள் தூர இடங்களுக்கு செல்வது என்றால் தம்மிடம் உள்ள பெறுமதியான பொருட்களை முஹம்மத் அவர்களிடம்தான் பாதுகாப்பதற்காக ஒப்படைத்துவிட்டு செல்வார்கள்.

அப்போது மக்காவில் கதீஜா நாயகி எனும் பெரிய செல்வ சீமாட்டி ஒருவர் இருந்தார். அவரிடம் பெரிய வர்த்தக கூட்டம் ஒன்று இருந்தது. அந்த வர்த்தக கூட்டத்தை நம்பி ஒப்படைக்கும் அளவு யார் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார் என்று தேடிப்பார்த்த போது அனைவரும் ‘முஹம்மத்’ அவர்களைப் பற்றிச் சொன்னார்கள்.

கதீஜா நாயகியும் தனது வர்த்தக கூட்டத்தை முஹம்மத் நபியவர்களிடம் ஒப்படைத்து சிரியா எனும் நாட்டுக்கு அனுப்பினார்கள். முஹம்மத் அவர்களும் தனது திறமையை பயன்படுத்தி கதீஜா நாயகிக்கு இரண்டு மடங்கு இலாபத்தை பெற்றுக்கொடுத்தார். இலாபத்தை விட கதீஜா நாயகிக்கு முஹம்மத் அவர்களின் நேர்மைதான் அதிகம் பிடித்துப் போனது.

சில நாட்களின் பின்னர் முஹம்மத் அவர்களுக்கும் கதீஜா நாயகி அவர்களுக்கும் திருமணம் நடந்தது. அல்லாஹ் அவர்களுக்கு காஸிம், அப்துல்லாஹ் எனும் ஆண் குழந்தைகளையும் ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், பாத்திமா ஆகிய பெண் குழந்தைகளையும் பரிசாக கொடுத்தான். ஆனால், சிறுவயதிலயே ஆண் குழந்தைகள் இருவரும் மரணித்துவிட்டார்கள்.

வினாக்கள்

04. இறைத்தூதராக நியமிக்கப்படல்


மக்காவில் மிகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் செல்வம் படைத்தவராகவும் வாழ்ந்துகொண்டிருந்த முஹம்மத் (ஸல்) அவர்களை மிகப்பெரிய கவலை ஒன்று வாட்டிக்கொண்டிருந்தது. அது தனது மக்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு அறியாமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களே என்ற கவலைதான். இவ்வளவு அறியாமையாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கின்றார்களே என்ற கவலைதான்.
இவற்றைப் பார்த்து மனம் வருந்திய முஹம்மத் (ஸல்) அவர்கள் எவ்வாறு தனது மக்களை மீட்டெடுப்பது என கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.


முஹம்மத் (ஸல்) அவர்களின் கவலையை நீக்க அல்லாஹ் விரும்பினான். அதேபோன்று உலகை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு மீட்டெடுக்கவும் நாடினான்.
ஒரு நாள் நபியவர்கள் ஹிரா குகையில் அமர்ந்திருந்து தனது மக்களுக்கான விடிவைப் பற்றி சந்தித்துக்கொண்டிருக்கும்போது அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் தனது தூதான அல்குர்ஆனை நபியவர்களுக்கு கொடுத்து அனுப்பினான்.


நபியர்கள் ஹிராக்குகையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று வானத்தில் ஓர் ஒளி தோன்றியது. நபியவர்களுக்கு முன்னால் வானவர்களில் தலைவராக ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றினார்கள்.
‘ஓதுவீராக!’ என்று ஜிப்ரீல் (அலை) நபியயவர்களுக்கு கட்டளையிட்டார்கள். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘எனக்கு ஓதத்தெரியாதே!’ என நடுக்கத்துடன் பதில் கூறினார்கள்.
ஆனால், ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களை கட்டியணைத்து ‘ஓதுவீராக!’ என்று ஜிப்ரீல் (அலை) என திரும்பவும் கட்டளையிட்டார்கள். அப்போதும் நபியவர்கள் ‘எனக்கு ஓதத்தெரியாதே!’ என கூறினார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் திரும்பவும் சற்று இறுக்கமாக நபியவர்களை கட்டியணைத்து ‘ஓதுவீராக!’ என்று ஜிப்ரீல் (அலை) என திரும்பவும் கட்டளையிட்டார்கள். இப்போதும் நபியவர்கள் ‘எனக்கு ஓதத்தெரியாதே!’ என திரும்பவும் பதில் கூறினார்கள்.
இறுதியாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் திரும்பவும் மேலும் இறுக்கமாக நபியவர்களை கட்டியணைத்து ‘ஓதுவீராக!’ என்று ஆரம்பித்து ஸுரா அலக்கின் ஐந்து வசனங்களை ஓதிக்காண்பித்தார்கள்.


இதுதான் நபியவர்கள் இறைத்தூதராக தெரிவு செய்யப்பட்ட சம்பவமாகும். அதேபோன்று, உலகை இருளில் இருந்து பாதுகாக்க அல்குர்ஆன் அருளப்பட ஆரம்பித்த சம்பவமும் இதுவாகும். அளவற்ற அன்பும் நிகரற்ற ஆதரவும் கொண்ட அல்லாஹ் தனது இணையற்ற கருணையால் எமக்கு வழிகாட்ட அற்புத நாள்தான் அது. அது ரமழான் மாதத்தின் ஒரு நாளாகும்.


திடீரென்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் கலக்கமடைந்த நபியவர்கள் வீட்டுக்கு வந்து தன் அன்பு மனைவியிடம் நடந்த விடயங்களை எத்திவதை;தார்கள். கதீஜா நாயகியும் நபியவர்களை பழங்கால வேதங்கள் பற்றியும் பண்டைய வரலாற்றில் தோன்றிய நபிமார்கள் பற்றியும் அறிந்திருந்த வரகா பின் நவ்பலிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றைக் கூற அவரும் நபியவர்கள் அல்லாஹ்வால் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தியை எத்திவைத்தார்கள்.

வினாக்கள்

05. இஸ்லாமிய பிரச்சார பணியின் ஆரம்பம்

நபியவர்கள் முதன் முதலாக தனது தூதை தனது அன்பு மனைவி கதீஜா நாயகிக்கு சொன்னார்கள். கதீஜா நாயகி துளியும் யோசிக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதேபோன்று நபியவர்களின் உற்ற தோழராக அபூபக்கர் (ரழி) அவர்களும் சிறுவர்களாக அலி இப்னு அபூதாலிப் (ரழி), ஜைத் இப்னு ஹாரிதா (ரழி) ஆகியோரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். அடுத்ததாக நபியவர்களின் கவனம் தனது குடும்த்தின் பக்கம் சென்றது.
நபியவர்கள் தனது நபிப்பட்டம் கிடைத்ததில் இருந்து மூன்று வருடங்கள் இரகசியமாகவே இஸ்லாமிய பிரசாரத்தை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை வாலிபராக இருந்த அர்கம் (ரழி) அவர்களின் வீட்டில் வைத்து கற்றுக்கொடுத்தார்கள்;


துன்பங்கள் ஆரம்பமாகின்றன

குறைஷ காபிர்களுக்கு நபியர்களை பின்பற்றும் மக்கள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்வது கோபத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் மக்காவின் பிரபல உயர்குடும்பங்களைச் சேர்ந்த உஸ்மான் இப்னு அப்வான் (ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) போன்றவர்களும் இஸ்லாத்தை ஏற்றது அவர்களை அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஆகவே, குறைஷிக் காபிர்கள் நபியவர்களையும் அவரது தூதை ஏற்றுக்கொண்டவர்களையும் கொடுமை செய்ய ஆரம்பித்தனர்.


நபியவர்கள் பற்றிய பல கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பிவிட்டனர். நபியவர்கள் பொய்யர் எனவும் அவர்தான் இட்டுக்கட்டிய கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி அப்பாவி மக்களை மயக்கி குழப்பத்தை உண்டு செய்கிறார் எனவும் கூறினர். அது மாத்திரமின்றி நபியவர்கள் நடந்துசெல்லும் பாதையில் கூரிய முற்களை பரப்பி வைத்தனர். அத்துடன் நபியவர்கள் மீது குப்பைகளை கொட்டினர். நபியவர்கள் தொழும்போது அவர்மீது அழுகிய ஒட்டகக்குடல்களை கொட்டி நபியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தனர்.
மறுபக்கம் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களுக்கும் இந்தக் கொடுமைகள் அளவின்றி நடந்தன. கொடிய அபூஜஹ்ல் அன்னை சுமையாவை அடிவயிற்றில் ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொன்றான். அதேபோன்று ஈவிரக்கம் அற்ற குறைஷஷpக் காபிர்கள் பிலால் (ரழி) அவர்களை கொடிய பாலைமணலில் படுக்க வைத்து அவரின் நெஞ்சின் மீது பாரிய பாறாங்கல்லை வைத்தனர். மறுபக்கம் உஸ்மான் (ரழி) அவர்களை ஒரு போர்வையினுள் சுருட்டி இருபக்கமும் புகை நிரப்பி மூச்சுத்தினற வைத்தனர். ஹப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்களை நெருப்புத்தனல் மீது படுக்க வைத்தனர். அந்த நெருப்பு அவரது உடலை சுட்டுப்பொசுக்கியது.
இந்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய நபியவர்களுக்கு அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் வசனங்கள் மிகப்பெரும் ஆறுதலையும் உத்வேத்தையும் வழங்கின. அதேபோன்று அருமை மனைவி கதீஜா நாயகியும் அபூதாலிப் அவர்களும் எப்போதும் நபியவர்களுக்கு பக்க பலமாக இருந்தார்கள்.

வினாக்கள்

  1. இஸ்லாத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட பெண் யார்?
  2. குறைஷிக் காபிர்கள் கொடுமை செய்த நபித்தோழர்களின் பெயர்களைத் தருக?
  3. உஸ்மான் (ரழி) எவ்வாறு கொடுமை செய்யப்பட்டார்கள்?
  4. நபியவர்களுக்கு ஆறுதலாக இருந்தவர்கள் யார்?
  5. நபியவர்கள் எத்தனை வருடம் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?

2 responses to “சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01”

  1. […] சிறுவர்களுக்கானநபியவர்களின் வாழ்கை… சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு(இரண்டாவது அத்தியாயம்) […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள