image : 2026 UK Student Visa – முழு வழிகாட்டி தமிழில் (இலகுவான விளக்கம்)
UK Student Visa requirements for Sri Lankan students 2026
London என்பதே இன்றைய இளைஞர் யுவதிகளின் பெரும் கனவு. Uk சாம்ராஜ்ஜியத்தில் கால் வைக்க வேண்டும் என பலர் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நாட்களில் Uk செல்வது என்பது சர்வசாதாரண விடயமாகிவிட்டது.அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் சிரிப்பீர்கள் எல்லாருமே ஹேண்ட் பேக் தூக்கிக்கொண்டு பறக்க புறப்பட்டு விட்டார்கள். அங்கே அவர்கள் University களில் கற்பதும் Part time வேலை செய்வதும் புகழ் பெற்ற London வீதிகளில் உலா வருவதும் WhatsApp புகைப்படங்களில் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
Uk Student Visa என்பது அவ்ளோ பெரிய விடயம் அல்ல. அதை எவ்வாறு விண்ணப்பிப்பது, அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் எவை, அந்த ஆவணங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இலகுவாகவும் தெளிவாகவும் பார்க்கலாம்.(இந்த தகவல்கள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டுக்கானவை என்பதை கருத்தில் கொள்க)
- UK Student Visa என்றால் என்ன?
Uk – இல் Degree, masters, PhD அல்லது Foundation போன்ற முழு நேர படிப்பு ஒன்றை படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தான் Uk Student Visa. முன்பு இது Tire 4 (General) என அழைக்கப்பட்டது. தற்போது Student Route என அழைக்கப்படுகின்றது.
Uk Student Visa மூலம் நீங்கள் அங்கு சட்டபூர்வமாக தங்கி படிக்கலாம். அதேபோன்று குறிப்பிட்ட நேர அளவு பகுதி நேரமாக வேலை செய்யலாம்.
- நாம் என்ன செய்ய வேண்டும் ?
Uk செல்வதற்கு முதல் முக்கியமான வேலை நமக்குப் பொருத்தமான university ஒன்றை தேர்வு செய்து அதற்கு Admission பெறுவதாகும். ஏனென்றால் அந்த university யினால் Offer Letter பெறாமல் Visa Apply செய்ய முடியாது.
பொதுவாக மாணவர்கள் universityஐ தமக்கு பொருத்தமானதாகவே தெரிவு செய்வார்கள். தமக்கு பொருத்தமான படிப்பு அங்கு இருக்கின்றதா?
அதற்கு உரிய தகுதி தன்னிடம் இருக்கின்றதா?
இந்த இரண்டு விடயங்களையும் கவனமாக ஆய்வு செய்வார்கள். மூன்றாவதாக தங்குமிட வசதிகளை அருகில் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதையும் கவனிப்பார்கள்.
University of Oxford
University of Manchester
Coventry University
University of East London
உட்பட இன்னும் பல பல்கலைக்கழகங்களை நீங்கள் தேடிப் பார்க்கலாம்
Universityகள் உங்களை தமது மாணவர்களாக தேர்வு செய்ய சில பரீட்சைகளை நடத்தும். பெரும்பாலான University பரீட்சைகளில் நேர்முகத் தேர்வு நடக்கும்.
உரிய Coverage வசதிகள் பெற்று முழுமையாக தயாராக இருப்பது உங்கள் வெற்றிக்கு காரணமாக அமையும்.
எதற்காக எமது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தீர்கள், உங்களது நிதி வசதி எவ்வாறு இருக்கின்றது, நீங்கள் எதற்காக இந்த பாட நெறியை தேர்வு செய்தீர்கள் என்பது போன்ற பல வினாக்கள் உங்களிடம் கேட்கப்படும். இணையதளத்தை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் கேட்கப்படும் அனைத்து வினாக்களையும் விடைகளையும் நீங்கள் எளிதாக தேர்ச்சி கொள்ள முடியும்.
இந்த நேர்முகத் தேர்வுகளில் சித்தி பெற்றவுடன் உங்களுக்கு offer letter கிடைக்கும்.
- CAS என்றால் என்ன?
CAS என்பது “Conformation of Acceptance for Studies” ஆகும். நீங்கள் விரும்பிய, நீங்கள் முயற்சி செய்த, நீங்கள் விண்ணப்பித்த University உங்களை மாணவராக ஏற்றுக் கொண்டது என்பதற்கான உறுதிப்படுத்தும் ஆவணம் இதுவாகும்.
University இனால் Offer letter கிடைத்த பிறகு Tuition fee deposit செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் University உங்களுக்கு CAS issue செய்யும். CAS இல்லாமல் Visa Apply செய்ய முடியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
- Financial Requirement
Uk Student Visa இல் அடிப்படை விடயம் இதுவாகும். ஆகவே இதனை தெட்டத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.
Uk தேசமானது படிப்பதற்கு என்று சொல்லிக்கொண்டு தன்னிடம் வருபவர்களை மிகக் கவனமாக கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது. குடியேற்ற குடியகல்வு விதிகள் மிகக் கடுமையாக மாறிய பின்னர் Uk Student Visa என்ற போர்வையில் தன்னிடம் வருபவர்கள் உண்மையாக கல்வி கற்க தான் வருகின்றார்கள் என்பதை அது அவதானிக்கின்றது.
Visa Apply பண்ணும் போது வருகின்ற பெரும்பாலான Refuseகளுக்கு அடிப்படை காரணம் Financial proofதான் காரணம்.
- Tuition fee
CAS இல் குறிப்பிடப்பட்ட First year tution fee Amount கட்ட வேண்டும். (பாட நெறிக்கான முழு கட்டணத்தை செல்ல முன்பே கட்ட வேண்டும் என்பதில்லை. முதலாவது வருடத்திற்கான கட்டணத்தை கட்டினால் போதும்)
- Maintenance fund
நாம் Ukஇல் தங்கி கற்கும் அளவு பண வசதி உள்ளவர்களா என்பதை Uk அரசுக்கு நிரூபிக்க வேண்டும். இதற்காக எமது வங்கிகளில் இருக்கும் பணத்தை காட்ட வேண்டும். (Bank Statement). இது ஏறக்குறைய 10 மில்லியன்கள் அளவில் காட்ட வேண்டி இருக்கும்.
Bank statementஇல்
- குறைந்தது 28 நாட்களாவது Continue balance இருக்க வேண்டும்.
- 28 நாட்கள் முடிந்தால் தான் Visa Apply செய்ய வேண்டும். மறந்து விடாதீர்கள்
- English Requirement
Uk என்பது ஆங்கில தேசம் ஆகும். ஆகவே பல்கலைக்கழக படிப்பு முதல் அனைத்துமே அதே மொழியில்தான் நடைபெறும் என்பது ஒரு பொது மறந்து விடாதீர்கள். பொதுவாக தேர்வுகளில் வெற்றி பெற…
IELTS
UKVI IELTS போன்றன எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில university களில் MOI (Medium of Instructions) accept செய்யப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்களில் IELTS இல்லாமலும் நுழையலாம். University களுக்கு ஏற்ப மாற்றம் அடையுமே தவிர ஆனால் மொழிப் புலமை அத்தியாவசியமாகும்.
0/L பரிட்சையில் English பாடத்தில் C இருக்கின்றது தானே …
- Visa Apply செய்வது
பின்வரும் ஆவணங்கள் documents சரியாக இருக்கின்றதா என பார்த்துக் கொள்ளுங்கள்
- Valid passport (https://thalamvoice.com/2026-ஒரே-நாளில்-passport-எடுப்பது)
- Cas Letter
- Bank Statement
- Academic cerficates
- English cerficate
- Tb Test Report (அரசு அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களில் மாத்திரமே இதனை பெற வேண்டும்)
- Visa Application form
- Visa fee paymant receipt
- Visa Apply எவ்வாறு செய்வது
Visa application முழுவதும் Online மூலமாகத்தான் நாம் செய்ய வேண்டும் (நிதானம் தேவை) இதற்கு Uk Government official website மூலமே செய்ய வேண்டும்.
Online இது மாத்திரம் இது நிறைவு பெற்று விடாது.
Visa fee கட்டணம் செலுத்த வேண்டும்.
IHS ( immigration Health surgchage) கட்டணம் செலுத்த வேண்டும். (நீங்கள் Uk கல்வி கற்கும் போது உங்கள் ஆரோக்கியத்திற்கான அனைத்து சேவைகளையும் இதன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்)
பின்னர், Biometric appointment book செய்ய வேண்டும்.
இதற்காக நீங்கள் Colombo தெமட்டகொட (மேம்பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் வலது பக்கமாக அமைந்திருக்கும் கட்டிடம். கொழும்புக்கு புகையிரதத்தில் வருவதென்றால் தெமடகொட புகையிரத நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரம்) VFS Center சென்று fingerprints and photo வழங்க வேண்டும்.
பொதுவாக உங்கள் Visa கைக்கு இரண்டு மூன்று வாரங்களில் கிடைத்து விடலாம். ஆனால் அவசரமாக தேவைப்பட்டால் மேலதிக கட்டணம் செலுத்தி Priority Service மூலம் வேலை செய்து கொள்ள வேண்டும்.
7. Visa Interview
Apply செய்யும் அனைவருக்கும் interviewக்கான அழைப்பு வருவதில்லை. ஒரு சிலரை மாத்திரமே அழைப்பார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப கேட்கும் இவ்வாறான கேள்விகளுக்கு நேர்மையான பதில் அளிக்க வேண்டும்.
- ஏன் இந்த Course
- ஏன் இந்த University
- படித்த முடிந்த பிறகு என்ன செய்வீர்கள்
- உங்களுக்கான பணம் எவ்வாறு வருகின்றது
முக்கியமான ஒரு விடயம் – அங்கே எம்மை நேர்காணல் செய்பவர்களை நான் விட நாங்கள் அதிபுத்திசாலி அல்ல. ஆகவே மழுப்பல்களையும் விழுங்கல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- Uk இல் கற்கும் போது வேலை செய்யலாமா?
தாராளமா நீங்கள் வேலை செய்யலாம். அங்கே நீங்கள் இன்றைய சின்ன சின்ன வேலைகளை கண்டறிந்து கொள்ள முடியும். ஆனால் கற்கின்ற காலங்களிலும் அதிக அவசரப்படாமல் இருப்பது மிகவும் பொருத்தமானது.
Term time காலங்களில் வாரத்திற்கு 20 மணி நேரமும் Vacation காலங்களில் full time ஆகவும் நீங்கள் வேலை செய்யலாம்.
Visa Refuse ஆக காரணங்கள்
- Bank statement mistake
- fake documents
- CAS mismatch
- Interview யில் தவறான பதில்
- Financial gap
இலங்கையில் இப்போது தாராளமாக Uk Students Visa செய்து தரக்கூடிய நிறுவனங்கள் முளைத்து விட்டு இருக்கின்றன. அதேபோன்று அடிக்கடி ஏமாந்த, ஏமாற்றுபவர்களின் கதைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய முன்னால் அவர்களால் Uk தேசத்திற்கு வெற்றிகரமாக விசாரித்து பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
Bank balance யிற்கு 10 காட்ட வேண்டும் என்றதும் அச்சப்பட வேண்டாம். அது 28 நாட்கள் மாத்திரமே காட்ட வேண்டிய தொகை ஆகும். அதுக்கு மாற்றமாக கட்ட வேண்டிய தொகை அல்ல. அதே போன்று உங்களுக்கு தாராளமாக பாடநெறி கட்டணத்தில் ஒரு பகுதியை Scholarship ஆக பெற்றுக்கொள்ளலாம்.
UK Student Visa requirements for Sri Lankan students 20
(பகுதி இரண்டுக்காக காத்திருங்கள் )




Leave a Reply