April 6, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

2–4 minutes

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் பாஸ்போர்ட் (One Day Service)  எடுப்பது பற்றி நிறைய குழப்பங்கள் இப்போதும் நிலவுகின்றன. ஆகவே, அது பற்றி சில தெளிவுகள் இங்கு முழுமையாக வழங்கப்படுகின்றன.

இலங்கையில் பாஸ்போர்ட் (Passport)  பெறுவதற்கு பல பிராந்தியங்கள் இருந்தாலும் ஒரே நாளில் பெற்றுக் கொள்ள (One Day Service)  நாம் கொழும்புக்கு வரவேண்டும். பத்தரமுல்ல (Battaramulla)  சுஹுருபாய தலைமையத்தில் மாத்திரமே நாம் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டின் புதிய விதிகளின் படி இது முற்றிலும் இலகுவான ஒரு விடயமாகும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration)  புதிய விதிகள் இங்கு உங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு நீங்கள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.30 வரை உங்களுக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும்.

தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்

நீங்கள் விண்ணப்பிக்கச் செல்லும்போது பின்வரும் ஆவணங்களின் அசல்பிரதிகள் (0riginal) மற்றும் பிரதிகளை (photocopy) கைவசம் வைத்திருங்கள்.

1.        பிறப்புச் சான்றிதழ் : புதிய முறையில் கணினி மயப்படுத்தப்பட்ட (Computerized) பிறப்புச் சான்றிதழ் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

2.        தேசிய அடையாள அட்டை (NIC)

3.        புகைப்பட ரசீது : அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டுடியோவில் (Authorized Photo Studio) உங்களுக்கான புகைப்படத்தை பதிவு செய்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள முடியும். (பத்தரமுல்ல (Battaramulla)  அலுவலக வாசலில் கூட நூற்றுக்கணக்காக ஸ்டூடியோக்கள் அதிகாலையிலேயே திறந்திருப்பதைக் காணலாம்)

4.        பழைய பாஸ்போர்ட் – உங்களிடம் ஏற்கனவே ஒரு பாஸ்போர்ட் (Passport)  இருக்கின்றது என்றால் கட்டாயமாக அதை நீங்கள் கொண்டு வர வேண்டும்.

5.        தொழில் சான்றிதழ் – உங்கள் பாஸ்போர்ட்டில் உங்கள் தொழில் பதவியைக் குறிக்க வேண்டும் என்றால் வேலை செய்யும் இடத்தின் கடிதம் தேவைப்படும்.

2026 ஆம் ஆண்டுக்கான கட்டண விபரங்கள் (Fee)

ஒரு நாள் சேவை (One Day Service)  20 000 ரூபாய் (ஒரே நாளில் உங்களால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்)

சாதாரண சேவை  10 000 ரூபாய்

(விண்ணப்பங்களை ஒப்படைத்து விட்டு வந்தால் உங்கள் வீடு தேடி (Passport)  வரும்)

விண்ணப்பிக்கும் முறை ((Step-by-Step Process))

1.        Online Appointment முதலில் நீங்கள் உங்களுக்கான திகதியை பதிவு செய்ய வேண்டும். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration)  இணையதளத்தில் (eservices.immigration.gov.lk) உங்களுக்கான நேரத்தை முன்பதிவு (Appointment) செய்ய வேண்டும்.

2.        Photo புகைப்பட ரசீது பெற்றுக் கொள்ளல்

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோ சென்று புகைப்படம் எடுத்து அதன் ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

3.        குறிப்பிட்ட நாள் பத்தரமுல்ல அலுவலகம் (Department of Immigration and Emigration)  சென்று ஆவணங்களை வழங்கி உங்கள் கைவிரல் அடையாளத்தை வழங்கிக் கொள்ளுங்கள்.

4.        உரிய கட்டணத்தைச் செலுத்தி 20000 ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்

5.        அன்றே – அங்கே காத்திருந்து உங்கள் பாஸ்போர்ட்டை (Passport)  பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏமாறாதீர்கள்…

உங்களுக்குத் தேவையாயான அனைத்து வசதிகளும் பத்தரமுல்ல (Battaramulla)  அலுவலகத்திலேயே (Department of Immigration and Emigration)  பெற்றுக் கொள்ள முடியும். தற்போது நாம் ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டும்போதும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என வீடீயோ காணொளிகள் (Video) அனைத்து இடங்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. எமது ஆவணங்களை முறையாகப் பெற்றுக் கொண்டால், அலுவலகத்தின் ஒவ்வொரு படியிலும் அவர்கள் தரும் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றினால் ஒரு நாளில் பாஸ்போர்ட் எடுத்தல் (One Day Service) என்பது மிகவும் சர்வசாதாரண விடயம்தான்.

ஒரு சிலர் பாஸ்போர்ட் (Passport)  எடுக்க வேண்டும் என்றால் முதல் நாள் இரவே சென்று காத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அது தேவையற்றது. எமக்கான நாளை முன்கூட்டியே பதிவு செய்து விட்டு அந்த நாளின் காலையிலேயே சென்றால் மிக இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். சிற்றுண்டிச் சாலைகள் தாரளமாக இருக்கின்றன. வரிசையில் சற்று நேரம் பொறுமையாக நிற்க வேண்டும் என்பதால் உங்களுக்குத் தேவையான தண்ணீர் போத்தல்களை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

நீங்கள் செல்லும்போது நூற்றுக்கணக்கான நபர்கள் வரிசையில் இருப்பதைக் காணலாம். வரிசை மெதுமெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும். சலித்துக் கொள்ளாமல் அதில் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகின்றீர்கள் என்றால் வாகனங்களை பார்க் (Parking) செய்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் சிறு கட்டணங்களை செலுத்தி ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கள்களையும் நிறுத்த முடியும். (வாகன பார்க்கிங் தனிப்பட்டவர்களால் செய்யப்படுகின்றது. அதற்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் (Department of Immigration and Emigration)  சம்பந்தம் இல்லை)

பத்தரமுல்ல (Battaramulla)  அழகிய பிரதேசமாகும். சற்று அருகிலேயே ஓய்வெடுக்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. ஆனால், கொழும்பு என்பது அதிகாலையிலும் அந்திமாலையிலும் வாகன நெரிசல் கொண்ட பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்றவாறு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

நான் எனது ஒரு நாள் பாஸ்போர்ட் சேவைக்காக (One Day Service)  செல்லும்போது காலை ஆறு மணி இருக்கும். தேவையான ஆவணங்களையும் அவற்றில் பிரதிகளையும் (photo copy) வீட்டில் இருந்து கொண்டு சென்றதால் தாமதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், நீண்டிருக்கும் வரிசைகளை கண்டபோது சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஒரு பக்கம் ஒரு நாள் சேவை. இன்னொரு பக்கம் சாதாரண சேவை, சற்றுத் தொலை அடையாள அட்டைக்கான சேவை என வரிசைகள் நீண்டிருந்தன. ஆனால், தேவையான வழிகாட்டல்கள் அனைத்தும் தாரளமாக கிடைத்தன. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தலையை தூக்கிப் பார்த்தால் தொலைக்காட்சித் திரையில் காணப்பிக்கப்பட்ட காணொளிகள் அவற்றை தெளிவு படுத்தின.

ஏமாற்றக் கூடியவர்கள் எங்கும் இருப்பார்கள். ஏமாறாமல் இருப்பது எமது கைகளில்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள