April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

3–5 minutes

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த தாயும் வேண்டாத நிலையில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம்.  தமது மனைவி குழந்தைகளுக்காக கொடிய பாலைவனத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான, இலட்ச்சக் கணக்கான மக்கள் வெந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மறுபக்கம் இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக சில ஆற்றல்களைக் கற்றுக் கொண்டு தாம் இருந்த இடத்திலேயே இலட்ச்சக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Fiverr அவ்வாறானதொரு தளமாகும். உங்களுக்கு ஏதேனும் ஆற்றல் இருந்தால், அல்லது திறமை இருந்தால் அதுவே போதும். நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே.. உங்களுக்கு தோதான நேரத்தில்… யாருக்கும் கைகட்டி சேவகம் செய்யாமல் உழைக்கலாம். உங்கள் குடும்பங்களைப் பிரியாமலேயே இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

இந்தக் கட்டுரை Fiverr பற்றி உங்களுக்கு அனைத்துத் தகவல்களையும் சொல்லித் தருகின்றது. அதன் அனைத்து வாசல்களையும் திறந்து விடுகின்றது.

டொலர்களில் சம்பாதிக்க நீங்கள் தயாரா…!

Fiverr இன் வரலாறு எளிதானது. எந்த வேலை செய்து கொடுத்தாலும் ஐந்து டொலர் என்ற அர்த்தத்தில்தான் Fiverr என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் எல்லாம் ஆரம்பமாகின. ‘உனது பெயரை கடற்கரையில் எழுதிக் காட்டுகின்றேன். எனக்கு ஐந்து டொலர் கொடு’ என்றெல்லாம் பேரங்கள் பேசப்பட்டன. ஆனால், இன்று நியூயோர்க் சந்தையில் ஒரு பில்லியன் அமேரிக்க டொலர் சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கின்றது …

Fiverr  மூலம் எவ்வாறு உழைக்கலாம்

சரி, தொன தொன என பேசுவதை விட்டுவிட்டு இப்போது விசயத்திற்கு வருகின்றேன்.

இல் உழைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…

1.         கிக் (Gig) மொடல் உருவாக்க வேண்டியது

இதுதான் Fiverr அடிப்படை. உங்கள் திறமை என்ன உங்களால் என்ன செய்ய முடியும். நீங்கள்எ எவ்வாறு மற்றவருக்கு உதவலாம் என்பதைப் பற்றி ஒரு விளம்பரமாக பதிவிடுவது. (இலகுவான வேலை மற்றும் குறைந்த விலை, கூடுதல் வசதிகள் மற்றும் நடுத்தரமான விலை, முழுமையான சேவை மற்றும் அதிக விலை)

2.         பைவர் ப்ரோ (Fiverr Pro)

நீங்கள்தான் உங்க ஏரியாவில் தலைசிறந்த ஆள் என்றால் சொல்லிக்கொள்ளவே தேவையில்லை. உங்கள் காட்டில் டொலர் மழைதான். நீங்கள் உங்களை fiverr Pro ஆக பதிவு செய்யலாம். fiverr உங்கள் ஆற்றலையும் அனுபவத்தையும் சரி பார்க்கும். இங்கு நீங்கள் உங்கள் வேலைக்கு 500 டொலர் முதல் 5000 டொலர் வரை சம்பாதிக்கலாம்.

3.         பைவர் ஸ்டுடியோ (Fiverr  Studio)

நீங்கள் தனியாகத்தான் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்தும் பணியாற்றலாம். வெறும் கோழிக்கடை வைத்திருப்பவர்களை விட கோழிக்கடையில் தேங்காயும் மசாலாத்தூளும் சேர்த்து விற்பவர்களுக்கு கிராக்கி அதிகம். அதேபோன்று நீங்களும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து இங்கு இயங்கலாம்.

4.         டிப்ஸ் (Tips)

நீங்கள் செய்யும் வேலையை நேர்த்தியாக செய்தால் அது நிச்சயம் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப பிடித்துவிடும். அவர்கள் உங்களுக்கான கூலி தவிர்த்து பத்து முதல் ஐம்பது வீதம் வரை டிப்ஸ் (Tips) தருவார்கள்.

நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விடயங்கள்

Fiverr கணக்கை ஆரம்பித்துவிட்டீர்கள். வேலையையும் தொடங்கிவிட்டீர்கள். இப்போது பண மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வீடு முழுக்க டொலர் வாசம் அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்த இன்பம் தொடர வேண்டும் என்றால் நீங்கள் சில விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

பின்வரும் எச்சரிக்கைக் குறிப்பை மறந்து விடாதீர்கள்.

  1. தளத்தை கடந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டாம்.

வாடிக்கையாளரிடம் Fiverr கமிஷன் கொடுக்க வேண்டாம். எனக்கு நேரடியாக பணத்தை அனுப்புங்கள் என ஒருபோதும் கேட்க வேண்டாம். இது Fiverr இன் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இதை நீங்கள் செய்தால் உங்கள் கணக்கு  Account முடக்கப்படும்.

  1. தகவல் தொடர்பு விதிகள்

வாடிக்கையாளரோடு தொடர்பு கொள்ளும்போது Phone number, E-mail, Adress போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் Fiverr இன் AI சிஸ்டம் தனது மூலம் இதை உடனடியாக கண்டறிந்து உங்கள் கணக்கை விழுங்கிச் சாப்பிட்டுவிடும்.

  1. பதிப்புரிமை பிரச்சினைகள் (Copy Rights)

(Google) கூகுலில் இருந்து படங்களையோ அல்லது மற்றவர்களின் படைப்புக்களையோ எடுத்து உங்களுடைய வேலைகளுக்கு பயன்படுத்தாதீர்கள். இது சட்டரீதியான சிக்கல்களை உங்களுக்கு கொண்டு வரும்.

  1. போலி வேலைகள்

உங்களிடம் இல்லாத சேவையை, உங்களிடம் இல்லாத திறமையை விளம்பரம் செய்ய வேண்டாம். Fiverr  இல் வருபவர்கள் ஒருபோதும் உங்களுக்கு வாய்ப்புத்தர வரவில்லை. மாறாக, தங்களுடைய தேவையை பணம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளவே வருகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  1. ஒரே முகவரி (IP Adress) கவனம்

ஒரே வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருவர் மூலம் வேலை செய்ய நாடினால் வேறு துறைகளில் வேலை செய்யுங்கள். ஏனென்றால் IP Adress மூலம் Fiverr உங்களை ஸ்பேம் என நினைத்து கணக்குகளை முடக்கிவிடலாம்.

இன்றைய காலத்தில் இணையதளம் மூலம் எந்தளவு வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ அதேயளவு ஆபத்துக்களும் மோசடிகளும் நிறைந்துள்ளன. இதனால் Fiverr தனது பயனாளர்களைக் காப்பாற்ற இத்தனை செயல்களைச் செய்கின்றது.

வெறுமனே கணக்குப் போட்டால் மாத்திரம் டொலர் மழை பெய்யுமா.. இல்லவேயில்லை. Fiverr என்பது அளவுக்கதிகமான போட்டியாளர்கள் நிறைந்த இடம். ஆகவே, மற்றவர்களிடம் இருந்து உங்களை பிரித்துக் காட்ட நீங்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். இங்கு உங்களுக்கான சில ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

  1. GIG SEO உங்கள் தலைப்பில் கீ வேர்டுகளை ‘High Volume’ பயன்படுத்துங்கள்
  2. நேர முகாமை ((Response Rate)) வாடிக்கையாளர் அழைத்து 5 நிமிடங்களுக்குள் பதில் தர முயற்சி செய்யுங்கள். இதற்கு பைவர் ஆப் மிகவும் உதவும்.
  3. வீடியோ கிக் ((Video Gig):) உங்கள் சேவையைப் பற்றி ஒரு வீடியோவை பதிவிடுங்கள். அது வாடிக்கையாளர் நம்பிக்கையை 200 வீதம் அதிகரிப்பதுடன் உங்களுக்கு பன்மடங்கு ஆடர்களைப் பெற்றுத் தருவதாகவும் ஆய்வுகள் சத்தியம் செய்கின்றன.
  4. வேலைக்குப் பின்னரான சேவை ((Customer Support) வேலை முடிந்துவிட்ட பிறகு நீ யாரோ நான் யாரோ என்று இருந்துவிட வேண்டாம். வாடிக்கையார்களின் சிறுசிறு சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள். இது உங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரும்.
  5. பகுப்பாய்வு ((Analytics) உங்கள் வேலைத்தரம் பற்றி அடிக்கடி ஆய்வு செய்யுங்கள். உங்கள் கிக் () எத்தனை பேரால் பார்க்கப்படுகின்றது. எத்தனை பேர் அதனை கிளிக் செய்கின்றார்கள் என்று வாரந்தோறும் ஆய்வு செய்யுங்கள்.

சரி, இவ்வளவுகதைஅளந்ததுபோதும். எவ்வாறு Fiverr இல் இணைவது (Step-by-Step Registration)

1.         Fiverr.com சென்று மின்னஞ்சல் மூலம் இணையுங்கள்.

2.         Seller Profile  உங்களைப் பற்றி உண்மையான தகவல்களை மட்டும் வழங்குங்கள். தொழின்முறையான, நேர்த்தியான புகைப்படத்தை இணையுங்கள்.

3.         Verification உங்கள் தொலைபேசி எண் மற்றும் அடையாள அட்டையை வழங்கி உறுதிப்படுதிக் கொள்ளங்கள்.

4.         Gig Creation உங்கள் முதல் கிக்கை உருவாக்குங்கள். அதற்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

5.         W-8BEN படிவம் வரி தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்யுங்கள்

சரிஏன் இலங்கைக்குப் பொருத்தமானது?

1.         டொலர் வருமானம் – இலங்கையின் ரூபாய் தள்ளாடினாலும் டொலரில்தான் எமது வருமானம் வருவதால் எவ்வித பாதிப்பும் இல்லை.

2.         குறைந்த ஆரம்பச் செலவு – திறமையான இளைஞர்களுக்கு லெப்டொப்பும் நிலையான இணையமும் போதும்

3.         பணத்தை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். Payoneer கணக்கை ஆரம்பித்து அதை எமது இலங்கை வங்கிக் கணக்குகளுடன் (Commercial, Sampath, HNB) இணைத்து மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

4.         நீங்களே ராஜா – உங்களைக் கட்டுப்படுத்த, ஆணையிட, அலட்ட யாருமே இருக்க மாட்டார்கள். உங்கள் இஷ்டப்படி நீங்கள் உழைத்துக் கொள்ளலாம்.

5.         வேலைக்கான செலவுகள் இல்லை – இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் வேலையின் சம்பளம் எப்படியோ அதற்கு நாங்கள் செலவழிக்கும் தொகை அதிகமாக இருக்கும். பயணச் செலவு, உணவுச் செலவு, தங்குமிடம், வேலைக்குப் பொருத்தமான ஆடைகள் என அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால், Fiverr உங்களுக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுக்கின்றது.

டொலர் மழையில் குளிக்க தயாரா…!

Fiverr என்பது ஒரு மந்திரக்கோல் அல்ல. எடுத்தவுடனேயே உங்கள் வீட்டின் முன் நீங்கள் சிறு வயதில் கண்ட கார்களையெல்லாம் வாங்கி குவித்துவிட முடியாது. சில பொழுதுகளில் உங்கள் முதல்  ஆடரைப் பெறவே வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால், ஆனால், ஆனால், நீங்கள் தொடர்ந்து நேர்த்தியாக முயற்சித்தால் உங்களால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை.

வாழ்த்துக்கள்

2 responses to “Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!”

  1. Riftha Avatar
    Riftha

    Meaningful article. I learned a lot of useful information from this article. I look forward to new articles related to these topics.

  2. Aadhil Avatar
    Aadhil

    Superb.. thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள