April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Facebook Page மூலம் உழைக்க முடியுமா?

3–5 minutes

image: Facebook மூலம் உழைப்பது எவ்வாறு?

2026 ஆண்டு என்பது ஒரு பக்கம் யுத்தங்களும் போர்களும் சண்டைகளும் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் online மூலம் உழைப்பதற்கான வழிகளையும் திறந்து வைத்துள்ளது. இது ஆற்றல் மூலம் சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

எமது வாழ்நாளின் பெரும்பாலான காலம் facebook இல் கழிகின்றது என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். Post (பதிவுகள்) பதிவிடலும் அவற்றை வாசித்தலும். Reels (காணொளிகள்) பார்த்தல். என நாம் Facebook இல் மூழ்கிக் கிடக்கின்றோம். ஆனால் அது வருமானம் உழைப்பதற்கு மிகச் சிறந்தவழியாகும். இப்போது இலங்கையிலும் கூட Facebook மூலம் பலர் உழைக்கின்றார்கள். இது ஆயிரங்கள் முதல் இலச்சங்கள் வரை மாறுபடுகின்றது.

இந்தக் கட்டுரை உங்களுக்கு Facebook எவ்வாறு உழைக்கலாம் என்பதை எளிமையாகவும் முழுமையாகவும் கற்றுத் தருகின்றது. அதேபோன்று பின்வரும் உள்ளடக்கங்களை கட்டுரை மூலமாக நீங்கள் கேட்டுக் கொள்ளலாம்.

  1. Facebook மூலம் உழைப்பது எவ்வாறு
  2. Facebook monetitation Srilanka
  3. Facebook page earning
  4. Facebook reels income tamil

இந்தக் கட்டுரையானது facebook page வருமானம் பெறலாம் என்பதை நமக்கு முழுமையாக கற்றுத் தருகின்றது.

01. Facebook மூலம் உழைக்கமுடியுமா?

ஆம். நிச்சயம் Facebook மூலம் வருமானம் பெற முடியும். ஆனால் அதற்கு நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சில காலம் காத்திருக்க வேண்டும்.

  1. உடனடியாக பணம் கிடைக்காது. நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.
  2. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதே நடுவில் பொறுமை இழந்து விடக்கூடாது.
  3. தரமான உள்ளடக்கம் ( Content) வேண்டும்.
  4. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இந்த விதிகளை பின்பற்றி நீங்கள் 03 தொடக்கம் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து உழைத்தால் நல்ல பலனை காணலாம்.

நீங்கள் உங்கள் முகம் காட்டி காணொளிகளை பதிவு செய்யலாம். அல்லது புகைப்படங்களை, அல்லது Video (காணொளிகளை) முன்னால் ஓடவிட்டு Voice (குரல் பதிவு) வழங்கலாம். ஆனால், அவை எந்த அளவு பார்ப்பவர்களைக் கவரும் என்ற விடயத்தில் அக்கறையாக இருங்கள்.
உங்கள் Video காணொளிகளைப் பார்ப்பவர்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும். ஆகவே, அதற்கு இரண்டு விடயங்கள் அத்தியாவசியம். நீங்கள் சொல்லும் விடயம் வெறும் மழுப்பலாக இன்றி உண்மையான குறிப்புக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதே போன்று நீங்கள் கவர்ச்சியான விதத்தில் சொல்ல வேண்டும். கறுப்பு வெள்ளைப் படக் கால சுத்தத் தமிழும் இன்றி, அதீத பேச்சுத் தமிழும் இன்றி கேட்பவர்கள் கவரும் காந்தத் தமிழாக இருக்க வேண்டும்.

  • Facebook page மூலம்எவ்வாறுபணம்உழைப்பது? Facebook page மூலம் உழைக்க முடியுமா?
  1. Professional page ஐ உருவாக்கவும்.
  2. உங்கள் Pageக்கு பொருத்தமான பெயரை தேர்வு செய்யவும். பொருத்தமான கருப்பொருளை தேர்வு செய்யவும். இந்த உதாரணங்கள் சிலவேளை உங்களுக்கு உதவி செய்யலாம்

(Uk Student Visa Update, Online jobs Srilanka, Education Tips Tamil, Motivation Quotes, Cooking Video)

  1. தினமும் 1-2 Post போடவும்.
  2. அதிக Audience பெற திட்டமிட்டு முயற்சி செய்யவும்.
  3. Facebook page நமக்கு வருமானம் தரும் தகுதியைப் பெற தேவையானவை எவை?
  4. 10 000 followers வேண்டும்
  5. 600, 000 Minutes watch time வேண்டும் (60 நாட்களுக்குள்)
  6. Facebook இன் விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும்.
  7. இலங்கையில் அதிக வருமானப் பெறக்கூடிய page வகைகளை இவ்வாறு அடையாளப்படுத்தலாம்
  • Uk Student Visa Update
  • Online jobs Srilanka
  • Education Tips Tamil
  • Motivation Quotes
  • Cooking Video

இவற்றில் ஒரு தலைப்பையோ அல்லது வேறு பொருத்தமான ஒரு தலைப்பையோ தெரிவு செய்யுங்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் எல்லாவற்றையும் பற்றி போட போகின்றேன் என்று அனைத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

Facebook pageஇல் Videoக்கள் போட அதிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம். எளிமையாக நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். Inshot, capcut போன்ற Appகளை நீங்கள் YouTube இன் உதவியோடு ஒரு மணித்தியாலத்தில் பழகிக் கொள்ள முடியும்.

நீங்கள் செய்யத் தேவையான குறிப்புக்கள் பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவேண்டாம். AI தொழிநுட்பம் உங்களுக்குத் தேவையான அனைத்துக் குறிப்புக்களையும் நீங்கள் போதும் போதும் என அழும் அளவுக்கு அள்ளித் தரும். ஆனால், எதற்கும் அவற்றை ஒரு முறைக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
MUSIC (இசை) நீங்கள் இணைப்பதாக இருந்தால் சிறந்த ஐடியாதான். ஆனால் Copy Right (காப்புரிமை) இல்லாத இசையாக தேர்வு செய்யுங்கள். உங்கள் இசை, நீங்கள் தேர்வு செய்யும் காணொளிகள் என்பது எதுவும் Copy Right (காப்புரிமை) இல்லாததாக இருக்க வேண்டும். ஏனென்றால், YouTube, Copy Right (காப்புரிமை)விடயத்தில் காட்டும் அக்கறையை விட காட்டும் Facebook, Copy Right (காப்புரிமை)அக்கறை மிகவும் பெரியது. சிறிய விடயத்தைக் கூட ஊதிப் பெருப்பித்து விடும்.

  • Facebook page மூலம்40 நாட்களில் வருமானத்தை பெறும் வழிகளை சொல்லித் தரவா!

பின்வரும் தலைப்புகளை Videoக்களாக மாற்றி தினமும் பதிவிடுங்கள். Videoக்கள் செய்யும்போது உங்கள் முகத்தை காட்டி சொந்தக் குரலில் செய்ய முயற்சி செய்யுங்கள். முகம் காட்டாமலும் உங்களால் காணொளிகளை உருவாக்க முடியும்.

  1. Uk Student Visa – 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள்
  2. Uk செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்
  3. Investment இல்லாமல் Online. இல் உழைப்பது எவ்வாறு?
  4. ILETS பரீட்சையில் வெற்றி பெற இலகுவான வழிமுறைகள். அல்லது அந்த பரிட்சையில் 7 எனும் அடைவை அடைவது எவ்வாறு ?
  5. இலங்கையில் மிகச் சிறந்த Online income வழிமுறைகள்
  6. Facebook மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு
    7.facebook மூலம் பணம் சம்பாதிக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் எவை
  7. Facebook மூலம் பணம் சம்பாதிக்கும் போது தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்களை தருகின்றோம்
  8. Uk Visa மறுக்கப்படுவதற்கான காரணங்கள்
  9. Uk இல் Part time (பகுதி) நேரம் வேலை செய்வதற்கான வழிகள்
  10. A/L பரீட்சைக்கு பின் எமது ஆற்றலை மேம்படுத்தக்கூடிய பாட நெறிகள் (Best Skills Couses After A/L)
  11. ஒரு மாணவனின் Uk பயணம் – வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்த சுயசரிதை கட்டுரை.
  12. உலகில் எந்தெந்த நாடுகளுக்கு உயர் கல்விக்காக போகலாம்
  13. குறைந்த விலையில் ஆனால் பயனுள்ள தொலைபேசி வகைகள்
  14. நமக்கு பொருத்தமான Laptop எது?
  15. எதிர்வரும் காலத்தை வெற்றிகொள்ள நாம் எம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் எவை?
  16. YouTube மூலம் எங்களால் பணம் சம்பாதிக்க முடியுமா?
  17. நீங்கள் online மூலம் வருமானம் பெற முயற்சி செய்கிறீர்களா?
  18. வீட்டிலிருந்த உழைப்பதே எவ்வாறு?
  19. கட்டாயம் அலுவலகம் சென்று தான் உழைக்க வேண்டுமா?
  20. Social Media (சமூக வலைத்தளங்கள்) பொழுது போக்கிக்கொள்ள மட்டும் தானா?
  21. எவ்வாறு வாழ்வில் சாதிக்கலாம்?
  22. இலங்கையில் எவ்வாறு investment செய்யலாம்
  23. நண்பர்களோடு சேர்ந்து எவ்வாறு உழைக்கலாம்
  24. இணையதளத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?
  25. ஆபாச படங்கள் வராமல் எவ்வாறு எமது தளங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் ?
  26. Facebook page மூலம் உழைக்க முடியுமா?

எமது தேசத்தின் மக்களுக்கு ஒரு வியாதி இருக்கின்றது. அது என்னவென்றால் தனக்கான சாம்ராஜ்யத்தை தாமே உருவாக்க அவர்கள் விரும்புவதில்லை. இன்னொருவரின் கீழ் வேலை செய்ய அவர்களுக்கு ரொம்பப்ப பிடிக்கின்றது. அல்லது, வாழ்நாள் முழுவதும் யாரோ ஒருவருக்காக வேலை செய்வதில் இன்பம் காண்கின்றார்கள். ஏன் இந்த மனநிலை என்று தெரியவில்லை.

உயர்தரம் இரண்டு வருடம் கற்கின்றார்கள். பெறுபேற்றுக்காக ஒரு வருடம் காத்திருக்கின்றார்கள். பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். அங்கு நான்கு வருடங்கள் தொலைகின்றன. பல்கலைக்கழகத்தில் ஓய்வெடுத்தகளைப்பை போக்க இரண்டு வருடம் வீட்டில் ஓய்வெடுக்கின்றார்கள். பின்னர் இரண்டு வருடம் வேலை தேடி மாதம் 60000 ரூபாய்க்கு ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றார்கள். தமது இலக்கு நிறைவேறிவிட்டது என்று நினைத்துக் கொண்டு மரணம் வரை மரணிக்கின்றார்கள்.

ஏன் இது…
ஒரு வருடம் முழுமையாக முயற்சி செய்து மூலம் தமக்கான ஒரு Online Job வாய்ப்பை உருவாக்கலாம் தானே. நானே எனக்கு ராஜா என நமக்குரிய வாழ்வை நாமே வடிவமைக்கலாம்தானே…

Facebook page மூலம் உழைக்க முடியுமா? Yes…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள