April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள்

3–5 minutes

image : Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள்.

Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள்.

2026ஆம் ஆண்டில் இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமது வீடுகளில் இருந்தே Online jobs செய்ய விரும்புகின்றார்கள். பொருளாதார ரீதியான சிக்கல்கள், வேலைவாய்ப்புகளில் ஏற்படும் போட்டி, அரசு வேலையில் போதிய ஊதியமின்மை, வெளிநாட்டு வேலைகளில் வரும் அதிக வருமானம் போன்ற நியாயமான காரணிகள் அவர்களின் தேர்வுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

இந்தக் கட்டுரை Online jobs மூலம் இளைஞர்கள் எவ்வாறு அதிக வருமானம் சம்பாதிக்கலாம் என்பதற்கு பத்து ஆலோசனை வடிவங்களை கூறுகின்றது.

இன்று சில பொழுதுகளில் வேலையில் வாங்கும் சம்பளத்தின் பெரும்பகுதி அந்த வேலைக்காகவே போய் விடுகின்றது. போக்குவரத்து செலவு, தங்குமிட வசதி, வேலையின் போது செய்யப்படும் செலவுகள் போன்றவற்றில் எமது சம்பளம் கரைந்து விடுகின்றது. இலங்கையிலிருந்து பெரும்பாலானவர்கள் ஒரு காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றார்கள். ஆனால் இதற்குப் பிறகு அந்த வசதி கிடைக்குமா என தெரியவில்லை.

ஆகவே, தற்காலத்தில் Online jobs என்பது எமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் துளி அளவு சந்தேகம் இல்லை. இங்கு நீங்கள் எளிதாக (உங்கள் திறமை, உங்கள் முயற்சி, உங்கள் திட்டமிடல்) மூலம் உழைக்கக் கூடிய மிகப்பெரிய ஐந்து வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக வாசித்து இன்னும் ஆராய்ந்து விட்ட பிறகு மேலதிக சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

  1. Freelance Web Developer / Software Developer

இன்றைய டிஜிட்டல் உலகமானது திறமையானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது. இந்த உலகில் Website, Mobile App, Web Application போன்றவற்றை உருவாக்கும் திறன் மிகவும் பெரிதாக போற்றப்படுகின்றது. அவற்றை நீங்கள் கற்றுக் கொண்டால் அதற்குப் பிறகு உங்கள் வருமானத்திற்கு தடைகள் ஏதும் இருக்காது என்பதை எங்களால் உறுதியாக குறிப்பிட முடியும்.

இன்றுOnline jobs மூலம் அதிகமாக வருமானம் ஈட்டக் கூடியவர்கள், டொலர்கள் மழையில் குளிப்பவர்கள், பின்வரும் திறமைகளை கற்றுக் கொண்டவர்கள் தான்.

இந்த துறைகளை நீங்கள் கற்றுக் கொண்டால் வீட்டிலிருந்தே 500 டாலர் முதல் 3000 டாலர் வரை அல்லது அதற்கும் அதிகமாக உழைக்கலாம்.

2. Content Writting and blogging
(Tamil content writing jobs, blogging in srilanka)

உங்களால் எழுத முடியுமா … அவ்வாறு என்றால் வெற்றியாளர் நீங்கள் தான். உள்ளடக்க எழுத்து எனப்படும் Content Writting மற்றும் Blogging உங்களுக்கு அதிக வருமானத்தை பெற்று தருகின்றது. SEO Articles, Affiliate Blogging, News Blogs போன்றவை உங்களுக்கு அதிக வருமானத்தை எடுத்து தருகின்றன. ஏனென்றால், இவ்வாறான தலைப்புகள் அதிகம் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

இன்று எழுத முடியுமான பலர் தேவையற்ற பயனற்ற விடயங்களை எழுதி பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை செய்யும் போது அது மிகச்சிறந்த வருமான வாய்ப்பாக அமையும். எனக்குப் பிடித்தமான நாம் விரும்பும் ஒரு விடயமே எனக்கு பணத்தை தரும் போது அது எவ்வளவு இனிமையாக இருக்கும் தெரியுமா?

இணையதளத்தில் எழுவது கடினமாக இருக்கின்றது என்றால் புத்தக வெளியீடுகள் பற்றியும் நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். இந்த இணையதளத்திலேயே thalamvoice.com புத்தகம் எழுதுவது எவ்வாறு என்பது பற்றிய கட்டுரை நாங்கள் தந்திக்கின்றோம்.

3. Digital Marketing
( Digital Marketing jobs in srilanka)

இந்த காலத்தில் நாம் நன்றாக அவதானித்து ஒரு விடயம் இருக்கின்றது. சிறிய சிறிய வர்த்தகங்கள் முதல் பெரிய பெரிய வர்த்தக கம்பெனிகள் வரை அனைவருமே Digital உலகத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு பின்வரும் திறமைகள் இருந்தால், அல்லது பின்வரு துறைகளில் தேர்ச்சி பெற முடியுமாக இருந்தால் இனி வரும் காலத்தில் நீங்கள் தான் ராஜா

Social media Marketing
SEO
Google Ads
Facebook ads

திருவிழாக்கள் வரும் போது, பண்டிகைகள் வரும்போது புதிதாக பல WhatsApp குழுக்கள் ஆரம்பிக்கப்படும். ஆனால் காலப்போக்கில் அவை காணாமல் போய்விடும். இன்னும் சில டியூஷன் ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வாறு மாணவர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்து தமது வகுப்புக்களுக்கு எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும். இதேபோன்று வாய்ப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் நீங்கள் தயாரா?

4. Graphic Design and UI/ UX Design
Graphic Designer Jobs in Srilanka

இன்று சமூகவலைத்தளங்கள் மிகப்பெரிய வர்த்தக கருவிகளாக செயல்படுகின்றன. உங்களிடம் Creative idea (புத்தாக்கமாக சிந்தித்தல்) அதிகமாக உழைக்க முடிவதோடு சர்வதேசத்தில் வாடிக்கையாளர்களைப் பெறலாம்.

Logo Design
poster Design
Social Media Ads design. போன்றவற்றிற்கான தேவைகள் இப்போது கூடிக் கொண்டே செல்கின்றன. வர்த்தகம் மற்றும் வியாபாரம் அல்லாமல் பாடசாலைகள் கல்லூரிகள் இலக்கியவாதிகள் அரசியல்வாதிகள் போன்றோரும் இவற்றை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். Canva கூட உங்களுக்கு இந்த வேலை அனைத்தையும் செய்து தரக்கூடிய தளமாகும்.

இதற்கு நீங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளரை தான் தேடிச் செல்ல வேண்டும் என்பதில்லை. இலங்கையில் அளவுக்கு அதிகமாக demand இந்தத் துறைகளுக்கு உண்டு. சில Books publication கூட பொருத்தமான Designer தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். உங்கள் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பினால் நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

5. Video Editing
(Video Editing Job in Srilanka)

நீ இலகுவான கலை இது. YouTube பார்த்து சில வாரங்களிலேயே நீங்கள் முழுமையாக தேர்ச்சி பெற முடியும். இந்த இலங்கையில் கூட Youtube, TikTok, Instagram போன்றவற்றின் வளர்ச்சி மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் facebook கூட இலங்கையை சேர்ந்த திறமையாளர்களுக்கு income கொடுக்க முன்வந்துள்ளது. இந்த வகையில் பார்க்க போனால் இலங்கையிலே உங்களுக்கு தாராளமாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள்.

நீங்கள் உங்களுக்கு என்று YouTube சேனல் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். அதே போன்று வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் சேவை வழங்க முடியும்.

Video Editing என்பது தங்க முட்டையிடும் வாத்தாகும். அதைக் கற்றுக் கொண்டால், அவசரப்படாமல் பதட்டப்படாமல் பேராசைப்படாமல் நீங்கள் தேர்ச்சி பெற்றுக் கொண்டால், உங்கள் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் உண்மையாக உழைத்தால் இது மாத்திரமே உங்கள் வருமானத்துக்கு தாராளமாக போதும்.

Video Editing செய்பவர்கள் வரும் மிகப் பிரதான ஒரு பிழை இருக்கின்றது. வாடிக்கையாளர் என்னதான் தன் ஆசையை, கருத்தைச் சொன்னாலும் அதைப் பற்றி துளி கூட அலட்டிக் கொள்ளாமல் தனது திறமையை காட்டப் போவது.

இந்த மேதாவித்தனம் வேண்டாம். நீங்கள் திறமைசாலி தான். ஆனால் வேலை செய்யும் இடத்தில் அதிலும் குறிப்பாக. Online jobs என வரும்போது புத்திசாலித்தனம் என்னவென்றால் வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவது தான் உங்கள் இலக்காக அமைய வேண்டும்.

நீங்கள் ஓய்வு நேரங்களில் YouTube, Instagram, TikTok, Facebook போன்ற பகுதிகளில் வரும் Videoக்களை தேடிப்பாருங்கள். அவற்றில் சில Videoக்கள் எத்தனை சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். ஆகவே அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் Inbox மூலம் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். உங்களால் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை கூறுங்கள். முடியும் என்றால் இலவசமாக ஒரு வேலை செய்து கொடுத்துப் பாருங்கள். அதன்பின் ஒரு காலகட்டத்தில் உங்களால் தனியவே சமாளிக்க முடியாது மிகப் பெரும் வாடிக்கையா நீங்களே பெறுவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள