அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார்.
இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார். பயிற்சிகளை செய்யச் சொல்வார். வகுப்பில் கெட்டிக்காரி என அவர் நினைத்த ஆயிஷாவை எழுந்து விடைகளை வாசிக்கச் சொல்வார். நாங்களே பயிற்சிகளுக்கு சரி, பிழை இட்டுக் கொண்டு பயிற்சிக் கொப்பிகளை மேசையில் அடுக்குவோம்.
அவரும் தனது கையொப்பத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவார். சித்திரப்பாட ஆசிரியர் வருவார். நல்ல மனநிலையில் இருந்தால் ‘விரும்பிய ஓவியத்தை வரையுங்கள்’ என்பார். பாவம்! ஏதோ பிரச்சினையில் சிக்கிப்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் ‘சீத்தை அலங்காரம் வரையுங்கடா’ என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.
ஆங்கிலப் பாட ஆசிரியர் வருவார். புத்தகங்கள் வாங்காமல் படிக்க முடியாது என்று அக்கறை காட்டிவிட்டு சில நூறு ரூபாய்களை வசூலிப்பார். எப்படியும் வகுப்பில் உள்ள அனைவரிடமும் வசூலித்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடும். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றார் என்றால் அடுத்த மாதம்தான் திரும்பவும் வசூல் வேட்டைக்கு வருவார். சிங்களப்பாட ஆச்சியை, மன்னிக்கவும் ஆசிரியையைக் கண்டாலே கை வலிக்கத் தொடங்கிவிடும்.
வெண்கட்டியை எடுத்துக்கொண்டு கரும்பலகையின் ஒரு தொங்கலில் ஆரம்பித்து மறு தொங்கல் வரை எழுதிக் கொண்டே போவார். அவர் முதல் வரியில் எழுதிய மூன்றாவது சொல்லை கண்ணை கோணல் மாணலாக்கி ணுழழஅ செய்து கண்டு பிடித்து எழுதுவதற்கிடையில்….. தான் எழுதிய அனைத்தையும் எழுதி முடித்துவிட்டு அடுத்த பயிற்சியை கிடுகிடுவென எழுதத் தொடங்கிவிடுவார்.
இலங்கையின் பொருளாதார வங்குரோத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர் எழுதி முடித்த வெண்கட்டிகள்தான்.
இப்படி இருக்கும்போது புதிதாக வந்த விஞ்ஞானப்பாட ஆசிரியை ஆய்வு என்றார். பரிசோதனை என்றார். விண்வெளி என்றார். எங்களுக்கு எல்லாமே புதிதாக இருந்தன. புதிய உற்சாகம் ஒன்று எங்களைத் தொற்றிக் கொண்டது. இத்தனை நாட்கள் மாயாஜால மந்திர சூத்திரமாய் முறைத்த விஞ்ஞானப் பாடம் இப்போது அருகே அமர்ந்து தோளில் கைபோட்டபடி உரையாடும் நண்பனாகி விட்டது.
ஒரு நாள் விஞ்ஞானப் பாட ஆசிரியை விசித்திரமான ஒரு விடயத்தைச் சொன்னார். ‘பிள்ளைகளே! திங்கட்கிழமை வரும்போது ஆளுக்கொரு ஆண் பூவும் பெண் பூவும் கொண்டு வாருங்கள்’ என்றார்.
‘ஆண் பூவா’
‘பெண் பூவா’
சத்தியமாக என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. உம்மம்மா உச்சந்தலையில் கொட்டிக்கொட்டி உண்ண கட்டளையிடும் வாழைப்பூ தெரியும். குளம் முழுக்க கோடியழகில் பரவிக்கிடக்கும் தாமரைப்பூ தெரியும். இதென்ன ஆண் பூவும் பெண் பூவும்?
திங்கட்கிழமை வெறுங்கையோடுதான் சென்றோம்.
விஞ்ஞானப்பாட ஆசிரியை அசரவில்லை. தெளிவாக ஆனால், இலகுவாக விளக்கப்படுத்தினார்.
‘தாவரங்களில் ஒருபாற் பூவை உடையவை, இருபாற் பூவை உடையவை என இரு வகை உண்டு. இருபாற் பூவை உடைய தாவரங்களில் மகரந்தச் சேர்க்கையை செய்வதற்கு ஏதுவாக அப்பூக்களிலேயே ஆண், பெண் உறுப்புக்கள் காணப்படும். ஆனால், ஒருபாற் பூவை உடைய தாவரப்பூக்களில் ஆண் உறுப்பு காணப்படும் அல்லது, பெண் உறுப்பு காணப்படும். இத்தகைய தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டுமென்றால் எதிர் பால் உள்ள இன்னொரு பூவுடன் நடைபெற வேண்டும்.
இச்செயற்பாட்டுக்காக மகரந்த மணிகளைக் காவிச்செல்லும் ஊடகமாக காற்று தொழிற்படுகின்றது.’
மூச்சுவாங்க பேசி முடித்த ஆசிரியை அதனுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அடுத்ததாக அவர் சொன்ன விஷயம்தான் எமது அல்குர்ஆன் பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது. ‘நான் சொன்ன விடயங்கள் அனைத்தும் அண்மைக் காலங்களில் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்தவை. ஆனால், இவற்றை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் கூறிவிட்டது.’
நாங்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டோம். அல்குர்ஆனில் விஞ்ஞானக் கருத்துக்களும் உண்டா என்று.
‘கருக்கொள்ளும்படியான காற்றை நாமே அனுப்பி வைத்திருக்கின்றோம். மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம். அதனை நாமே உமக்குப் புகட்டுகின்றோம்’ (ஸு{ரா அல்ஹிஜ்ர் : 22) என்று இந்த வசனத்தை வெண்பலகையில் எழுதிவிட்டு அவர் அமர்ந்துவிட்டார்.
எங்கள் சிந்தனைகள் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டன.
மற்ற வேதங்களில் இருந்து அல்குர்ஆனை தெட்டத்தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒரு விடயம் இருக்கின்றது. அது அல்குர்ஆன் தன்னை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அங்கீகரிப்பதேயில்லை. அது மனிதனை சிந்திக்கும்படி கட்டளையிடுகின்றது. ஆராயும்படி ஆணையிடுகின்றது. அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி கவனிக்கச் சொல்கின்றது.
• ‘ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? இது எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டுள்ளது? வானத்தையும் (கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. மலைகளையும் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு விஸ்தரிக்கப்பட்டுள்ளன?’ (ஸூரா அல்காஷியா: 19-20)
• ‘இந்த உதாரணங்களை அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே நாம் கூறுகின்றோம்.’ (ஸுரா அல்ஹஷ்ர்: 21)
• ‘அவர்கள் அல்குர்ஆனை ஆராய வேண்டாமா? அல்லது அவர்களது உள்ளங்களில் தாழிடப்பட்டிருக்கின்றதா?’ (ஸுரா முஹம்மத்: 24)
• ‘உறுதியாக ஈமான் கொண்டோருக்கு பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களி லேயும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (ஸுரா அத்தாரியாத்: 20-21)
பொதுவான பார்வையில் நபிமார்கள் தமது தூதுத்துவப் பணியை இலகுவாக மேற்கொள்ள அல்லாஹ் பல அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்திருந்தான். அவற்றைத்தான் நாம் ‘முஃஜிஸா’ என அழைக்கின்றோம். மூஸா (அலை) அவர்களுக்கு கைத்தடி, ஒளி வீசிய வலது கை, ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு மலையில் இருந்து வெளியே வந்தவுடன் குட்டியை ஈன்ற ஒட்டகம், நெருப்பில் பொசுங்காமல் தப்பித்த இப்றாஹீம் (அலை), ஈஸா (அலை) அவர்களின் பிறப்புச்சம்பவம் என இந்த வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது. அதேபோன்று நபியவர்களுக்கும் அல்லாஹ் பல அற்புதங்களைக் கொடுத்தான். அவற்றுள் தலையாயது அல்குர்ஆன் ஆகும்.
அல்குர்ஆனுக்கும் பல அற்புதங்கள் இருக்கின்றன.
- அல்குர்ஆனின் மொழியியல் அற்புதம்
அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்று தம்மைத் தாமே கவிச்சக்கரவர்த்திகளாகக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்களுக்கு மிகப் பெரிய மொழியியல் சவாலாக அல்குர்ஆன் இறங்கியது. இத்தனை காலமாக கவிதை இயற்றிக் கொண்டிருந்த கவிஞர்கள் கூட அல்குர்ஆனின் அற்புத மொழிநடை கண்டு சொக்கிப்போய் வாயடைத்து அதன்பின் கவிதை இயற்றாமல் போகும் அளவு அதன் மொழிநடை அதீதமாய் அமைந்திருந்தது. அண்ணலாரைக் கொன்று விட வாளேந்திச் சென்ற உமர் (ரழி) அவர்கள் கூட மனம் நிதானித்து இஸ்லாத்தை தழுவும் அளவு, கவிதையின் கர்த்தாக்கள் என புகழப்பட்ட அபூதர் அல் கிஃபாரி (ரழி), துபைல் இப்னு அம்ர் (ரழி) போன்றோரும் இஸ்லாத்தை ஏற்கும் அளவு, மறைந்து அல்குர்ஆனிய வசனங்களை செவிமெடுத்துக் கொண்டிருந்த கொடிய எதிரிகளும் தம்மையறியாமல் ஸுஜூதில் விழும் அளவு, குறைஷித்தலைவர்கள் மக்காவின் ஒவ்வொரு வாசலிலும் உச்சி வெயிலில் கால் கடுக்க நின்றுகொண்டு ‘அல்குர்ஆனை செவிமடுக்காதீர்கள்’ என கதறும் அளவு அதன் மொழிநடை வசீகரத்தின் உச்ச கட்டமாக அமைந்திருந்தது.எதிர்வுகூறும் அற்புதம்
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதற்கும் அதனை மக்களிடம் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கும் முற்றிலும் சாட்சியாக அல்குர்ஆனின் எதிர்வுகூறல்கள் அமைந்திருக்கின்றன. ரோமர்களின் வெற்றி மற்றும் முஸ்லிம்களின் பத்ர் வெற்றி, பிர்அவ்னின் சடலம் பாதுகாக்கப்படல் போன்ற எதிர்வுகூறல்கள் நடந்து முடிந்து விட்டன. - பாதுகாக்கப்பட்ட அற்புதம்
அல்குர்ஆனின் ஒரு முற்றுப்புள்ளி கூட மாற்றப்படாமல் திரிபுபடுத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதை நாம் அதிசயம் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. எழுத வாசிக்க அறியாத ஒருவருக்கு, கல்வியில் நாட்டம் செலுத்தாத ஒரு மக்கள் குழுவுக்கு அருளப்பட்டு இன்றுவரை உலகில் அதிகமாக அச்சிடப்படும் புத்தகமாகவும் அதிகமான மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ள கிரந்தமாகவும் ஒளிவீசும் அல்குர்ஆன் அற்புதம்தான். - யாவருக்குமுரிய, எக்காலத்திற்குமுரிய சட்டங்கள்
உலகின் சட்டமேதைகள் தலையைப் பிய்த்து மூளையை கசக்கிக் கொண்டு யோசித்தும் அவர்களால் இயலாமல் போன ஒரு விடயம் ‘அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டம்’ என்பதாகும். ஏனென்றால் ஒரு தரப்பினருக்கு சாதமாக அமையும் சட்டம் இன்னொரு தரப்பினருக்கு நிச்சயம் எதிராகவே அமையும். ஆனால், அல்குர்ஆன் அனைத்து மக்களுக்கும் முற்றிலும் பொதுவாகவே அமைகின்றது. இன்னும் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தால் அவனுக்கும் முற்றிலும் பொருத்தமான சட்டமாகவே அல்குர்ஆன் அமையும். - அறிவியல் அற்புதங்கள்
இந்த வரிசையில்தான் ‘அல்குர்ஆனிய விஞ்ஞான, அறிவியல் அற்புதங்கள்’ என்ற தலைப்பை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு மனிதன் சிந்திப்பதற்கு ஏதுவாக அல்குர்ஆன் முழுவதும் விஞ்ஞானக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்தக் கருத்துக்களை ஆராய முனையும்போது நாம் அதிர்ந்து நிற்கின்றோம். அல்குர்ஆன் என்பது ஆன்மீக வேதம் மாத்திரமல்ல, அறிவியல் கருவூலமும்தான் என்று எமது சித்தம் நித்தம் சத்தியம் செய்கின்றது. அதுவும் இலக்கிய மொழிநடையில் வரலாற்று, சட்ட, போதனை கருத்துக்களுடன் விஞ்ஞானக் கருத்துக்களைத் தொகுத்துத் தருவதென்றால் – உண்மையிலேயே அல்குர்ஆன் மகத்தான அதிசயம்தான்.
அல்குர்ஆனின் சில விஞ்ஞான கருத்துக்கள்
- கடல்களுக்கு மத்தியில் திரையுண்டு
‘அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீறமாட்டா.’ (அல்குர்ஆன் 55:19-20) - விண்வெளிப்பயணம்
‘அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 6:125) - மனிதனின் படைப்பு
‘பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்;. பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்;. பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்;. பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்;. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.’ (அல்குர்ஆன் 23:14) - பால் உற்பத்தி
‘நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.’ (அல்குர்ஆன் 16:66) - தாவரங்களை ஜோடி ஜோடியாக படைத்தமை
‘மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;. இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்;. அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (அல்குர்ஆன் 13:3)
‘நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.’ (அல்குர்ஆன் 51:49) - பெருவெடிப்புக் கொள்கை – பிரபஞ்சத்தின் தோற்றம்
‘நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ (அல்குர்ஆன் 21:30) - பூமி அதன் ஓரங்களால் குறைதல்
‘பூமியை அதன் ஓரங்களிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.’ (அல்குர்ஆன் 13:41) - தேனின் மருத்துவ குணம்
‘அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 16:68-69) - உலகின் முடிவு
‘வானம் வெடித்துவிடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறி விடும்போது’ (அல் இன்ஃபிதா : 1,2)
‘சூரியன் ஒளி நீக்கப்பட்டுச் சுருட்டப்பட்டுவிடும் போது, மலைகள் பூமியில் இருந்து பெயர்க்கப்படும் போது…’ (அத்தக்வீர் : 1,3) - வித்துக்கள் முளைத்தல்
‘வித்துக்களையும் கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடித்து முளைக்கச் செய்கிறான்.’ (6: 95) ………………………………………………………………………… அடிக்கடி அல்குர்ஆன் சிந்திக்குமாறும் அறிவைத் தேடுமாறும் கட்டளையிட்டது. அதற்குத் தூண்டுகோலாக பல அறிவியல் அற்புதங்களை அது எடுத்துக்காட்டியது. அதன் வழியில், அதன் ஒளியில், அதன் மொழியில் வழிநடந்த நமது முன்னையவர்கள் புகழ் பூத்த விஞ்ஞானிகளாக உயர்ந்தார்கள். வானியல், புவியியல், மருத்துவம், பௌதிகவியல் என அனைத்து விஞ்ஞானத் துறைகளையும் ஆய்வு செய்தார்கள். அற்புதமான கண்டுபிடிப்புக்களையும் அறிவியல் அகராதிகளையும் பிரசவித்தார்கள்;.
இடைக்கிடை வரலாற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்கள், நகர எரிப்புக்கள், படுகொலைகள் என்பவற்றின் பின்னர் மிகச் சொற்பமான அறிவியல் நூல்களே எஞ்சியருந்தன. அந்த எஞ்சிய நூல்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்தன. அவை, ஐரோப்பாவை ஆக்கிரமித்திருந்த அறியாமை இருளை ஓட ஓட விரட்டியடித்து விட்டு அறிவு வெளிச்சத்தைப் பரப்பின. அதன் மூலம் உலகத்திற்கும் விடிவு வந்தது. சிலவேளை மொங்கோலியர்களால் அறிவியல் நூல்கள் யுப்ரடீஸ், டைகரீஸ் நதிகளுக்குள் தூக்கியெறியப்படாமல் இருந்திருந்தால், ஸ்பெய்னின், குர்துபாவின் அறிவியல் நூல்கள் கொளுத்தப்படாமல் இருந்திருந்தால்….




Leave a Reply