image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்
இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்
(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும். இலங்கையின் ஜனாதிபதிகள், இலங்கையின் பிரதமர்கள், இலங்கையின் சபாநாயகர்கள் போன்ற வினாக்கள் முக்கியமானவை. இங்கு நாங்கள் பின்வரும் விடயங்களை தொகுத்துத் தந்துள்ளோம்.
- இலங்கையின் ஜனாதிபதிகளும் அவர்களின் பதவிக் காலங்களும்
- இலங்கையின் பிரதமர்களும் அவர்களின் பதவிக் காலங்களும்
- இலங்கையின் சபாநாயகர்களும் அவர்களின் பதவிக் காலங்களும்
- இலங்கையின் ஜனாதிபதி கொண்டிருக்கும் முக்கிய அதிகாரங்கள்
இலங்கையின் ஜனாதிபதிகள்
- இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்?
வில்லியம் கோபல்லாவ (William Gopallawa)
1972-1978 - இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதி யார்?
ஜே. ஆர் ஜயவர்தன
(J.R. Jayawardene)
1978-1989 - இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதி யார்?
ரணசிங்க பிரேமதாச
(Ranasinghe Premadhasa)
1989-1993 - இலங்கையின் நான்காவது ஜனாதிபதி யார்?
டி.பி விஜேதுங்க
(D.P Vijethunga)
1993-1994 - இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதி யார்?
சந்திரிகா குமாரதுங்க
(Chanthirika Kumarathunga)
1994-2005 - இலங்கை ஆறாவது ஜனாதிபதி யார்?
மகிந்த ராஜபக்ஷ
(Mahinda Rajapaksa)
2005-2015 - இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி யார்?
மைத்திரிபால சிறிசேன
(Maithiripala Srisena)
2015-2019 - இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி யார்?
கோட்டாபாய ராஜபக்ஷ
(2019-2022) - இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி யார்?
ரணில் விக்கிரமசிங்க
(Ranil wickramasinhe)
2022-2024 - இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி யார்?
அனுரகுமார திசாநாயக்க
(Anura kumara thisanayaka)
2024இல் இருந்து தற்போது வரை
இலங்கையின் பிரதமர்கள்
- இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?
டி.எஸ் சேன நாயக்க
D. S. Senanayake – 1947 – 1952 - இலங்கையின் இரண்டாவது பிரதமர் யார்?
டட்லி சேனநாயக்க
Dudley Senanayake – 1952 – 1953 - இலங்கை மூன்றாவது பிரதமர் யார்?
ஜோன் கொத்தலாவ
John Kotelawala – 1953 – 1956 - இலங்கையின் நான்காவது பிரதமர் யார்?
எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க
S. W. R. D. Bandaranaike – 1956 – 1959 - இலங்கையின் ஐந்தாவது பிரதமர் யார்?
விஜயனானந்த தகநாயக
Wijayananda Dahanayake – 1959 – 1960 - இலங்கையின் ஆறாவது பிரதமர் யார்?
சினிமாவோ பண்டாரநாயக்க அம்மையார்
Sirimavo Bandaranaike – 1960 – 1965 - இலங்கையின் ஏழாவது பிரதமர் யார்?
சேனநாயக்க
Senanayake – 1965 – 1970 - இலங்கையின் எட்டாவது பிரதமர் யார்?
சினிமாவோ பண்டாரநாயக்க
Sirimavo Bandaranaike – 1970 – 1977 - இலங்கையின் ஒன்பதாவது பிரதமர் யார்?
ஜே ஆர் ஜெயவர்த்தன
J. R. Jayewardene – 1977 – 1978 - இலங்கையின் பத்தாவது பிரதமர் யார்?
ரணசிங்க பிரேமதாச
Ranasinghe Premadasa – 1978 – 1989 - இலங்கையின் பதினோராவது பிரதமர் யார்?
டி பி விஜய்துங்க
D. B. Wijetunga – 1989 – 1993 - இலங்கையின் 12வது பிரதமர் யார்?
ரணில் விக்கிரமசிங்க
Ranil Wickremesinghe – பல காலங்களில் - இலங்கையின் 13 வது பிரதமர் யார்?
மஹிந்த ராஜபக்ஷ
Mahinda Rajapaksa – 2004 – 2005 / 2019 – 2022
நான்கு தடவை பிரதமராக இருந்துள்ளார். - இலங்கையின் 14 வது பிரதமர் யார்?
டீ.எம் ஜெயரத்தின
D. M. Jayaratne – 2010 – 2015 - இலங்கையின் 15 வது பிரதமர் யார்?
தினேஷ் குணவர்த்தன
Dinesh Gunawardena – 2022 – 2024 - இலங்கையின் 16-வது பிரதமர் யார்?
ஹரிணி அமர சூரிய
Harini Amarasuriya – 2024 –
இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையார் திகழ்ந்தார். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் உலகத்தின் முதலாவது பெண் பிரதமரும் அவர்தான். இலங்கைத் தேசமானது சமத்துவத்தை எந்தளவு பின்பற்றுகின்றது என்பதற்கு இது சான்றாகும். சிறிமா அம்மையார் தேசத்திற்குள் மாத்திரமின்றி சர்வதேசத்திலும் பெரும் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். அணிசேரா நாடுகளின் முக்கிய தூணாக செயற்பட்டார்.
சுதந்திரமடைந்து சிறிது காலத்திற்குள் பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி ஆகியோரை நாம் பெற்றிருந்தமையானது சர்வதேசத்தில் இலங்கைக்கு சிறந்த நற்பெயரையும் பெற்றுத்தர காரணமாக அமைந்தது.
இலங்கையின் சபாநாயகர்கள்
- இலங்கையின் முதலாவது சபாநாயகர் யார்?
சேர் பிரான்சிஸ் மொலமுரே
Sir Francis Molamure – 1947 – 1951 - இலங்கையின் இரண்டாவது சபாநாயகர் யார்?
அல்பேர்ட் பீரிஸ்
Albert Peiris – 1952 – 1956 - இலங்கையின் மூன்றாவது சபாநாயகர் யார்?
சேர் அல்பேர்ட் எப். பீரிஸ்
Sir Albert F. Peiris – 1956 – 1960 - இலங்கையில் நான்காவது சபாநாயகர் யார்?
ஆர். எஸ். பெல்பொல
R. S. Pelpola – 1960 – 1964 - இலங்கை ஐந்தாவது சபாநாயகர் யார்?
பெர்னான்டோ
Hugh Fernando – 1964 – 1970 - இலங்கையின் ஆறாவது சபாநாயகர் யார்?
ஸ்டான்லி திலகரத்தின
Stanley Tillekeratne – 1970 – 1977 - இலங்கையின் ஏழாவது சபாநாயகர் யார்?
ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் Ananda Tissa de Alwis – 1977 – 1981 - இலங்கையை எட்டாவது சபாநாயகர் யார்?
பீ.ஏ அபயவர்த்தன
B. A. Abeywardena – 1981 – 1989 - இலங்கையின் ஒன்பதாவது சபாநாயகர் யார்?
எம் எச் முஹம்மத்
M. H. Mohamed – 1989 – 1994 - இலங்கையின் பத்தாவது சபாநாயகர் யார்?
கே.பி. ரத்நாயக்க
K. B. Ratnayake – 2001 – 2004 - இலங்கையில் 11 வது சபாநாயகர் யார்
டபிள்யு ஜேஎம் லொக்கு பண்டார
W. J. M. Lokubandara – 2004 – 2010 - இலங்கையின் 12 வது சபாநாயகர் யார்?
சமல் ராஜபக்சே
Chamal Rajapaksa – 2010 – 2015 - இலங்கையின் 13 வது சபாநாயகர் யார்?
கரு ஜெயசூரிய
Karu Jayasuriya – 2015 – 2020 - இலங்கையின் 14வது சபாநாயகர் யார்?
மஹிந்தையாப்பா அபே வர்தன
Mahinda Yapa Abeywardena – 2020 – 2024 - தற்போதைய சபாநாயகர் யார்?
ஜகத் விக்கிரமா ரத்ன
(Kagath wickramarathna)
இலங்கையின் தலைவர்கள் பற்றிய பொது அறிவு வினாக்கள்
- இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்?
வில்லியம் கோபால்லாவ - இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி யார் ?
ஜே ஆர் ஜெயவர்த்தன - பதவியின் போது கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி யார்?
ரனசிங்க பிரேமதாச - இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி யார்?
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க - உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து ஜனாதிபதி யார்?
மஹிந்த ராஜபக்ஷ - தான் பதவியில் இருக்கும் போதே நெருக்கடிகளின் காரணமாக பதவியை துறந்த ஜனாதிபதி யார் ?
கோட்டாபாய ராஜபக்ஷ - ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் எவ்வாறு அழைக்கப்படும்?
President’s House - ஜனாதிபதி தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும்?
ஐந்து ஆண்டுகள் - இலங்கை ஜனாதிபதியின் முக்கிய அதிகாரங்கள் எவை?
முப்படையின் தளபதி அவர்.
பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
அமைச்சர்களை நியமிக்க முடியும். - ஏழை மக்களுக்கு வீட்டு திட்டங்களை அறிமுகம் செய்த ஜனாதிபதி யார்?
ரனசிங்க பிரேமதாச - இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 1972
- இலங்கையில் பாராளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
ரணில் விக்கிரமசிங்க - இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை எந்த ஆண்டு அறிமுகமானது? 1978
- 1993 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி யார்? ரணசங்க பிரேமதாச
- தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
- ஜனாதிபதி தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகின்றது? மக்கள் நேரடி வாக்கு
- ஜனாதிபதி யாரின் முன்னால் சத்தியபிரமாணம் செய்கின்றார்? உயர் நீதிமன்ற நீதியரசர்
- 1999 ஆம் ஆண்டு குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த ஜனாதியார்? சந்திரிகா குமாரதுங்க
- ஜனாதிபதி அவசர கால நிலையை அறிவிக்க முடியுமா?
ஆம் - தொடர்ச்சியாக இரண்டு தடவை பதிவகித்த ஜனாதிபதிகள் யாவர்?
சந்திரிகா குமாரதுங்க மஹிந்த ராஜபக்சே - இலங்கையில் மிக உயர்ந்த அரசியல் பதவி எது?
ஜனாதிபதி
இலங்கையில் ஜனாதிபதி தனிப்பட்ட தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை விட அதிகமாக வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றியடைந்தவராக கருதப்படுவார்.
இலங்கையின் முக்கிய அரசியல் பதவியாக ஜனாதிபதி பதவி காணப்படுகின்றது. காலத்திற்குக் காலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கூட்டி குறைக்கப்பட்டாலும் பல நாடுகளோடு ஒப்பிடும்போது அதிக அதிகாரம் கொண்ட பதவியாக இலங்கை ஜனாதிபதி பதவி அமைந்துள்ளது.
ஜனாதிபதி முப்படையின் தளபதி ஆகும். அவரே அமைச்சர்களை நியமிக்கின்றார். சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய முத்துறைகளிலும் அவருக்கு கணிசமான அதிகாரம் உள்ளது. வெளிநாட்டுத் தொடர்புகள், உள்நாட்டு பாதுகாப்பு பற்றி பல அதிகாரங்களை அவர் வைத்துள்ளார்.
இலங்கை இச்சிறிய வரலாற்றில் பல அற்புதமான ஜனாதிபதிகளை சந்தித்துள்ளது. ஏழைகளின் தோழன் என அழைக்கப்படும் ரணசிங்க பிரேமதாச ஏழை மக்களுக்காக பல்வேறு வீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். அதேபோன்று முப்பது வருடங்கள் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் முடிவுக்கு வந்தது. தற்போதைய ஜனாதிபதியான அனுர குமார திசாநாயக்க தான் வாக்களித்தபடி ஊழல்களை எதிர்த்து போராடுகின்றார்.
இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்கள்
- நிர்வாக அதிகாரம் -நாட்டின் நிர்வாக அதிகாரத்தின் தலைவராக ஜனாதிபதி திகழ்கின்றார். அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதியின் பெயரில் தான் நடைபெறும்.
- ஆயுதப் படைகளின் தலைமை
இலங்கை ஜனாதிபதி முற்படைகளின் தளபதி ஆகும். ராணுவப் படை கடற்படை வான் படை ஆகிவற்றை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு உள்ளது. - நியமனம்
ஜனாதிபதி பிரதமர் மட்டும் அமைச்சர்களை நியமிக்கின்றார். (பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்ற கட்சியின் தலைவரை, அல்லது அந்த கட்சி பரிந்துரைக்கும் ஒருவரை பிரதமராக நியமிப்பார்) - வெளிநாட்டு உறவுகள்
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தான் வெளிநாட்டு கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவர்தான் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கு தலைமை தாங்குகின்றார். - தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபரின் கைகளில் இருக்கின்றது. - பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம்
ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை அறிவிக்க முடியும். - சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்
பாராளுமன்றத்தால் உருவாக்கப்படும் சட்டங்கள் ஜனாதிபதியின் சம்மதத்தை பெற்ற பின்னரே அமுலுக்கு வரும். - மன்னிப்பு வழங்கும் அதிகாரம்
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்தும் ஜனாதிபதி சிலருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும். - உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் நியமித்தல்
உயர் நீதிமன்ற நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், அரச பதவிகளின் முக்கிய தலைவர்கள் போன்றவர்களை ஜனாதிபதி நியமிப்பார். - அவசர நிலையை அறிவித்தல் – நாட்டின் பாதுகாப்புக்கு அல்லது அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி அவசர நிலைமை அறிவிப்பார்
இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்




Leave a Reply