April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

3–4 minutes

2026இல் விவசாயம் மூலம் ஒரு மில்லியன் சம்பாதிக்கலாமா?

இன்றைய காலத்தில் இளைஞர்கள் சேட் கொலரில் அழுக்கு படியாத வேலையைத்தான் விரும்புகின்றார்கள். அதனால்தான் அவர்கள் விவசாயத்தை விரும்புவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய காலத்தில் விவசாயம் கூட மிகப்பெரிய வருமானத் தரும் தொழிலாக மாறி உள்ளது. விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்

இந்தக் கட்டுரை உங்களுக்கு விவசாயம் மூலம் ஒரு மில்லியன் சம்பாதிக்கலாம் என்பதை கற்றுத் தருகின்றது. உங்களிடம் ஒரு ஏக்கர் காணியிருந்தால் இன்றே ஆரம்பிக்கலாம்.

வெற்றியை ஏன் தள்ளிப் போட வேண்டும்!

  1. மிளகும் (Paper) தென்னையும் இணைந்த விவசாயம். (Intercop) 2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

இன்று இலங்கையில் ஒரு தேங்காய் விலை உங்களுக்கு தெரியும். தேங்காய்க்கு வந்த காலத்தை நினைத்து நீங்களே ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள். காலத்துக்கு காலம் தேங்காய் விளைச்சல் குறைகின்றது. ஆனால் தேங்கிக்கான தேவை கூடிக் கொண்டே செல்கின்றது. அசுர வேகத்தில் தேங்காய் விலையும் அதிகரிக்கிறது.

தேங்காய்கான காணியை நீங்கள் குத்தகைக்கும் பெற முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் 60 தொடக்கம் 70 தென்னை மரங்கள் வளரும். இந்த மரங்கள் ஒவ்வொன்றைச் சுற்றியும் மிளகு கொடிகளை வளர வைக்கலாம்.

ஒரு நல்ல தென்னை மரம் வருடத்திற்கு 60 – 80 தேங்காய் கொடுக்கும். ஒரு தேங்காய் விலை 100 ரூபாய் என்றாலே 5 லட்சத்தை விட அதிகமான தொகை எங்களுக்கு கிடைத்து விடும். இதனோடு சேர்த்து மிளகின் வருமானமும் தென்னை மரத்தின் புற உற்பத்திகளான பின்வரும் விடயங்ள் தொடர்பாகவும் நீங்கள் கவனம் செலுத்தினால் மாதாந்தம் மிக இலகுவாக 1.5 இலச்சங்களை உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

  1. தேங்காய் (Coconut)
  2. தேங்காய் எண்ணெய் (coconut oil)
  3. தேங்காய் பால் (coconut milk)
  4. கோயர் (Coir fiber)
  5. தென்னை மரம்.

புத்தள நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த வேலை சற்று பெரிதாக நடப்பதை கண்டோம். 10 ஏக்கர் அளவு பெரிய காணி அது. இவற்றோடு சேர்த்து ஆடுகளும் முயல்களும் வளர்க்கின்றார்கள். ஆச்சரியம் என்னவென்றால் நடுவே நீச்சல் தடாகம் ஒன்று கட்டியுள்ளார்கள்.

அதை நீச்சல் தடாகத்துக்குளம் மதிப்பு (Demand) இருக்கின்றதே…

அப்பப்பா

02. அண்ணாசி (Pineapple Farming) 2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

இலங்கையில் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கும் அண்ணாசி மீது அலாதி காதல் உண்டு. அண்ணாசியை பொடிப் பொடியாக வெட்டி காரத்தூள், சேர்த்து உப்பு சேர்த்து விற்பவர்களைக் கண்டிருப்பீர்கள். சரி, அண்ணாசி சுவைத்தது போதும். இனி அதை எப்படி மில்லியன் பணமாக மாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.

உங்களிடம் ஒரு ஏக்கர் காணி இருந்தால் அதில் சராசரியாக 20000 அண்ணாசிக் கன்றுகளை நட முடியும். உரிய முறையில் பராமரித்தால் அவை அனைத்தையும் வளர்க்க முடியும். 14-16 மாதங்களில் அவை விளைச்சல் தரும். அறுவடை செய்வதும் இலகுவானது.

“அவற்றில் 15000 கன்றுகள் தான் பலன் தந்தது. கனி ஒன்று 100 ரூபாய்க்குத்தான் விற்றோம்” என கணக்குப் பார்த்தாலும் மாத வருமானம் அதிகமானது. ஒரு இலட்சத்தை விட அதிகமானது.

03. அவகாடோ -(Avocado Farming) 2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

எதிர்காலத்தில் எகிறப் போகும் வியாபாரம் இது. இன்றைய நாட்களில் கூட அவகாடோ பழச்சாறு பெரிய அளவில் விற்பனையாகின்றது. அதற்குக் காரணம் அதன் மருத்துவச் சிறப்பு. மற்றும் அலாதியான சுவை. கூடவே, குடித்தவுடன் உடலில் விறுவிறு என ஏறும் உட்சாகம். எதிர்காலத்தில் தங்கப் பழமாக அவகாமோ மதிக்கப்படும். அதில் சந்தேகமேயில்லை.

ஒரு மரத்தில் சராசரியாக 200 காய்கள் காய்க்கும். ஒரு காயை மூப்பது ரூபாய்க்கு விற்றாலும் கொள்ளை இலாபம்தான். அவகாடோவை வளர்ப்பது இலகுவானது. அறுவடையும் இலகு. விற்பனையும் இலகு.

நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரே நேரத்தில் வியாபாரத்தில் வெற்றியடைய விரும்பினால் இதுதான் உங்களுக்கு வழி. அவகாடோ உங்களுக்கு கை தரும். இன்று உங்களிடம் முதலீடு இருந்தால் நீங்கள் யோசிக்காமல் இதை முயற்சி செய்யலாம்.

ஒரு ஏக்கரில் அவகாடோ மரம் 60 – 80 நட்டலாம். அவ்வாறென்றால் ஐந்து இலட்சம் அளவில் பெறலாம். (சராசரியாக ஒரு ஏக்கருக்கானது.)

04. வாழை (Banana Cultivation) 2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

ஏழைகளின் ஆப்பிள் என வாழை செல்லமாக அழைக்கப்படுகின்றது. வாழைப் பயிர் வளர்ப்பது இன்பமானது. எளிதானது. இலகுவானது. அதிகம் பராமரிப்பு தேவைப்படாது. அதே போன்று தேசம் முழுக்க விற்கலாம். வீட்டு விசேசம் என்றாலும் பண்டிகை என்றாலும் வாழைக்கு மவுசு அதிகம்தான்.

இன்றைய காலங்களில் கூட வாழைத் தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஒரு காலத்தில் பழத்திற்காக மாத்திரம் அதை வளர்த்தார்கள். இன்று சமூக ஊடகங்களின் வருகை வாழை இலைகளுக்கும் உணவகங்களில் தேவையை ஏற்படுத்தியுள்ளன. வாழையின் உள்ளீடுகளை வைத்து இன்னும் உற்த்திகள் அதிகரிக்கின்றன.

ஒரு ஏக்கர் தோட்டத்தில் 800-1000 வாழை மரங்களை நடலாம். ஒரு வாழைக் குலை 800 -1500 வரை விலை போகும். ஒரு மாதத்திற்கு 100 குலைகள் பெற்றாலே 150000 ரூபாய் பணம். அவ்வளவு தேவையில்லை. 50 குலைகள் பெற்றாலும் போதுமே..!

05. இலவங்கப்பட்டை (Cinnamon) 2026 -விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன்!

இலவங்கப் பட்டை அதிக பிரபலமானது. இலங்கையின் தங்கப் பயிர் என அழைக்கப்படுகின்றது. பாரம்பரியத்தைக் கொண்டது. உலக அளவில் இலங்கையை பிரபலமாக்கியது. இன்று பிரபலமான பலர் இந்த விவசாயத்தில் பாய்ந்துள்ளனர். அந்த அளவு உத்தரவாதம் கொண்டது.


இலவங்கத்தை நீங்கள் பயிரிட்டால் ஒரு ஏக்கரில் சராசரியாக 300-500 Kg பெற்றுக் கொள்ளலாம். சராசரி விலை 3000 என்றாலும் மாத வருமானம் ஒரு இலட்சமாகும். நீங்கள் இரண்டு மூன்று ஏக்கர் பயிரிட்டால்…

உங்களிடம் சிறிய இடம்தான் இருக்கின்றது என்றால் இவற்றை முயற்சிக்கலாம்.

  1. மிளகு பயிரிடலாம்.
  2. இஞ்சி பயிரிடலாம்.
  3. இலவங்கப்பட்டை பயிரிடலாம்.
  4. ஏலம் பயிரிடலாம்.
  5. மஞ்சள் பயிரிடலாம்.

அவ்வளவு ஏன்! ஒரு காலத்தில் கிராமங்களில் நிலக்கடலை பயிரிடுவார்கள். இன்று அதன் தேவை அதிகரித்து விட்டது. ஆனால், கிராமத்தவர்களுக்கு அது புரியவில்லை. நாளைய நாளில் நிலக்கடலையில் விலை வானைத் தொடும். ஆகவே, நீங்களும் முயற்சிக்கலாம். சோளம் இன்று அனைவராலும் விரும்பப்படுகின்றது. தலை நகரில் எந்த முடுக்கில் சோளக்கடை போட்டாலும் வெற்றிதான்.

நீங்கள் வர்த்தக ரீதியாக விவசாயம் செய்ய விரும்பினால்..

  1. வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. விவசாயம் பற்றி கற்றுக் கொள்ளுங்கள். இன்று இலவசமாகவே கற்கலாம். பல பல்கலைக்கழகங்கள் இந்த வசதியை தருகின்றன.
  3. விவசாய கண்காட்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
    வெளிநாட்டு வாடிக்கையாளர்களை பெறுங்கள்.
  4. இணைய தளங்களில் காட்சிப் படுத்துங்கள்.
  5. நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்.
  6. தீங்கான பசளைகளை தவிருங்கள்.
  7. தொடர்ந்து முயற்சியுங்கள்.
  8. பொருளாதாரத்தை திட்டமிடுங்கள்.
  9. வெளிநாட்டு விவசாயத்தை உற்றுநோக்குங்கள்.
  10. இயற்கை அனர்த்தங்களை முகங்கொடுக்க தயாராகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள