April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்

4–6 minutes

image : 2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்

2026ஆம் ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கு மிகச் சிறந்த ஆண்டாகும். எத்தனை நாள் தான் இன்னொருவரின் கீழ் கைகட்டி வாய் கொத்தி வேலை செய்வது என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் அவர்களுக்கு புதிய தொழில் தொடங்க துணிவு இல்லை.
அல்லது
புதிய தொழில் தொடங்கினால் வெற்றி அடைவோமா என்ற சந்தேகம்.

அச்சப்படத் தேவையில்லை. Comfort Zoneஇல் இருந்து வெளியே வாருங்கள். களத்தை ஆய்வு செய்யுங்கள். திட்டமிடுங்கள். நம்பிக்கையாக ஆரம்பியுங்கள். பொறுமையாக தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.

அல்லது, நீங்க துணிந்து முடிவெடுக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் இன்னொருவருக்கு அடிமையாக சேவகம் செய்ய வேண்டியது தான். நாங்கள் வாழ்வதற்காக தான் தொழிலே தவிர தொழில் செய்வதற்காக வாழவில்லை.

உங்களுக்கு ஒரு கதை சொல்லவா…

எங்கள் நண்பர்கள் பட்டாளத்தில் மொத்தம் பத்துப் பேர். படித்து முடித்த பின் தொழில் தேட ஆரம்பித்தோம். அரச துறையில் சிலர் இணைந்து கொண்டார்கள். இன்னும் சிலர் தந்தையின் தொழிலை தத்தெடுத்தார்கள். இன்னும் சிலர் தனியார் துறையில் இணைந்தார்கள்.
ஒருவனைத் தவிர.
அவன் தனக்கான தொழிலை தானே தேர்ந்தெடுத்தான். அது பிரச்சினையில்லை. ஆனால், அவன் தேர்வு செய்த தொழில் முறுக்கு மிக்ஸர் உற்பத்தி செய்வது. அதனை மொத்த வியாபரிகளுக்கு விற்பது. எங்கள் பார்வையில் அவன் முட்டாளாக தோன்றினான். எங்கள் எந்தவொரு அறிவுரையும் அவனை திருத்தவில்லை. அவன் தனது இலட்சியத்தில் உறுதியாக இருந்தான்.

காலங்கள் கடந்தன.

ஒரு நாள் எங்கள் பாடசாலையில் நூலக கூரை இடிந்து விழுந்தது. இனி பயன்படுத்தவே முடியாத படி சிதைந்துவிட்டது. என்ன செய்யலாம் என தலையை உடைத்துக் கொண்டு யோசிக்கும் போதுதான் அவன் வந்தான். அவனேதான்.

அவனிடம் விசயத்தைச் சொன்னோம். அவன் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. புதிய நூலகம் கட்டுவதற்கான காசோலையை கையில் தந்துவிட்டு சென்று விட்டான். அதுதான் அவனது தொழிலின் வெற்றி. யாரோ ஒருவருக்கு கை கட்டி வேலை செய்வதை விட நாமே எமக்கென ஒரு தொழிலை உருவாக்கிக் கொண்டால்… அதில் தொடர்ந்து உழைத்தால்.. அதற்காகத் தொடர்ந்து பயணித்தால் உண்மையிலேயே சாதிக்கலாம்.

இந்த கட்டுரையானது 2026ஆம் ஆண்டு புதிய தொழிலை தொடங்கி எவ்வாறு சாதிப்பது என்பது பற்றிய முழுமையான வழிகாட்டல்களைத் தருகின்றது.

இந்தக் கட்டுரையின் சிறப்புக்களை இவ்வாறு கூறலாம்…

  1. யதார்த்தமான விடயங்களை மட்டுமே சொல்லித் தருகின்றது.
  2. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வழிகாட்டுகின்றது.
  3. உங்களுக்குப் பொருத்தமான தொழிலை தெரிவு செய்ய உதவி செய்கின்றது.

01. நல்ல தொழில் ஒன்றை தொடங்க முன்… (2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்)

உங்களுக்கென தொழில் ஒன்றைத் தொடங்க முன் பின்வரும் விடயங்கள் பற்றி அலசி ஆராயுங்கள்.

இலங்கையின் 2026ஆம் ஆண்டுக்கான சந்தையை ஆய்வு செய்கின்ற போது பின்வரும் தொழிற் துறைகள் வேகமாக வளர்ந்து வருவதை காண முடியுமாக உள்ளது.

  1. உணவுத் தொழிலுடன் தொடர்பு பட்டவை.
  2. விவசாயத்துடன் தொடர்பு பட்டவை.
  3. Online உடன் தொடர்புபட்டவை
  4. Digital Marketing உடன் தொடர்பு பட்டவை
  5. Delivery Services உடன் தொடர்பு பட்டவை.
  1. சிறிதாக தொடங்குங்கள் (2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்)

நிறையப் பேர் தொழில் தொடங்காமல் இருக்க ஒரு காரணம் இருக்கின்றது. அது பென்னம் பெரிதாக தொடங்க ஆசைப்படுவதாகும். ஆனால், உண்மை வேறு. பெரியதாக சாதித்தவர்கள் எல்லாம் சிறிதாக தொடங்கியவர்கள்தான்.
உங்களால் முடியுமான அளவு நீங்கள் ஆரம்பியுங்கள். உதாரணமாக ஆடை தொடர்பான ஓர் தொழில் என்றால் சிறிய கட்டிடம் ஒன்றிலோ அல்லது WhatsApp Group மூலமாகவோ ஆரம்பியுங்கள். எடுத்தவுடனே அதீத பிரமாண்டம் வேண்டாம். விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும்.

தொழிலின் வெற்றி பிரமாண்டத்தில் அல்ல. அந்த தொழில் நாம் காட்டும் தொடர்ச்சியாக அக்கறையில்தான் இருக்கின்றது.

  1. சந்தையைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யுங்கள். (Market Research) (2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்)

வெறுமனே கற்பனையை வைத்து தொழிலில் வெற்றி பெற முடியாது. களத்தை புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களை அடையாளம் காண வேண்டும். சவால்களை தெளிவு படுத்த வேண்டும்.
உதாரணமாக நீங்கள் உணவு தொடர்பான ஓர் வர்த்தகத்தை Food Businessஆரம்பிக்க போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பின்வரும் விடயங்கள் பற்றி ஆராய்ந்து பாருங்கள்.

  1. அந்த உணவுக்கு எவ்வளவு கேள்வி (Demand) இருக்கின்றது?
  2. ஏற்கனவே அந்த உணவின் வியாபாரம் எவ்வாறு?
  3. உங்கள் போட்டியாளர் யார்?
  4. சந்தை வசதி எவ்வாறு இருக்கின்றது?
  5. விற்பனைக்குரிய இடம் எது?
  6. சமூக வளைத்தளங்களை (Social Media) எவ்வாறு பயன்படுத்தலாம்
  7. சந்தைப் படுத்தல் (Marketting) வசதி எவ்வாறு காணப்படுகின்றது?

04. Social Media – Online Marketing இனை பயன்படுத்துங்கள்.(2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள்)

உங்கள் தயாரிப்பு எவ்வறு சிறந்ததாக இருந்தாலும் அது மக்களிடம் சென்று சேர வேண்டும். மக்கள் அதனைப் பற்றி அறிய வேண்டும். போட்டிகள் அதிகரித்த சூழலில் online marketting இனை பயன்படுத்தி செய்தல் அத்தியாவசியம். நீங்களே எவ்வித செலவும் இன்றி இதனை மேற்கொள்ள முடியும். பின்வரும் ஊடகங்கள் உங்களுக்கு உதவலாம்.

Facebook

TikTok

Instagram

WhatsApp Business

Website

எனது பொருட்கள் தரமானவை. எனது சேவை சிறந்தது. நான் சிறந்தவற்றையே வழங்குகின்றேன் என்று எண்ணி இக்காலத்தில் ஒதுங்கிவிட முடியாது. மக்கள் அவற்றை அறிய வேண்டும். அவற்றை தேடி வரவேண்டும். அதற்கு ஆகச் சிறந்த வழி Social Media போன்றவற்றை பயன்படுத்தி Marketting செய்வதுதான்.

2026ஆம் ஆண்டு இலங்கையில் குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய தொழில்கள் – 10

01. Food delivery business
வீட்டில் இருந்தவாறு உணவு தயாரித்து விற்பனை செய்யலாம். பாடசாலை ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சாலை வேலை செய்பவர்கள் போன்றோரை இலக்கு வைத்து படிப்படியாக விற்பனை அதிகரித்து செல்லலாம்.

02. Online clothing
இக்காலத்தில் அதிகமானவர்கள் இதனை செய்தாலும் நேர்த்தியாக செய்பவர்களை இதுவரை காணவில்லை. பலர் மழைக்கு முளைக்கும் காலான்களைப் போல. பண்டிகை காலங்களில் வருவார்கள். காணாமல் போய்விடுவார்கள்.

பெண்களுக்கு உரிய ஆடைகளை மட்டுமே செய்பவர்கள், குழந்தைகளின் ஆடைகளை மட்டுமே செய்பவர்கள் பெரிதாக வெற்றி அடைய முடியும்.

  1. Coconut products business
    நாம் எமது இணையதளத்தில் thalamvoice.com ஏற்கனவே கூறியது போல தேங்காய் தொடர்பான உற்பத்தி பொருட்கள் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் பால்
தேங்காய் பால் பவுடர்
சிரட்டை
போன்றவத்தை வைத்து இலகுவாக வியாபாரத்தை ஆரம்பித்து வெற்றி அடையலாம்.

4. Vegetables farming
காய்கறி வியாபாரம் அற்புதமானது. குறைந்த முதலீடு செய்யப்படும். பகுதி நேர வேலையாகவும் செய்யலாம். நிரந்தர வாடிக்கையாளர்களை வெற்றி கொண்டால் தாராளமாக போதும்.

  1. Mashroom farming

காளான் வளர்ப்பு சிறந்த தொழிலாகும். 2026ஆம் ஆண்டு வளர்ந்து வருடம் தொழிலாக இது காணப்படுகின்றது. அதிக லாபத்தை பெறலாம்.

  1. Blogging
    உங்களுக்கு எழுத்து திறமை இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. வீட்டிலிருந்தே கட்டுரையில் எழுதி உழைத்துக் கொள்ளலாம். Website மற்றும் Blogger மூலம் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கின்றது.
  2. YouTube Channel
    சிலவேளை இந்த தலைப்பை பார்ப்பதற்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் இதன் மூலம் கோடி கோடியாக உழைப்பவர்களைக் கண்டால் உங்கள் நகைப்பு மறைந்து விடும். உங்களால் கருப்பொருட்களை உருவாக்க முடியும் என்றால், நன்றாக பேச முடியும் என்றால், Editing செய்ய முடியும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த வேலையை செய்து முடிக்கலாம்.
  3. Digital Marketing Services
    இன்றைய உலகம் Digital மயமாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், பாரம்பரிய வர்த்தகத்தில் மூழ்கி இருந்தவர்கள், காலம் காலமாக சம்பிரதாய முறைப்படி வர்த்தகம் செய்தவர்கள் Digital வர்த்தகத்துக்கு திடீரென மாற முடியாமல் தடுமாறுகின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். அவர்களுக்காக Social media marketing செய்யலாம். இந்த முயற்சி பெரும்பாலும் சிறிய நிறுவனங்களுக்கே பொருந்தும். ஏனென்றால் பெரிய நிறுவனங்கள் இதற்கென தனி Team வைத்திருப்பார்கள். எனது நண்பன் ஒருவன் ஆறு நிறுவனங்களுக்கு இந்த வேலை செய்து கொண்டிருக்கின்றான். ஒவ்வொரு நிறுவனத்திலும் மாதாந்தம் 30,000 ரூபாய் அறவிடுகின்றான்.
  4. Graphic Design
    பெரும் தட்டுப்பாடாக உள்ள பகுதி இது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் AIஇன் வளர்ச்சி எம்மை பயமுறுத்தினாலும் இன்னும் போதுமான அளவு Graphic Design செய்யக்கூடியவர்கள் இல்லை என்று கூற வேண்டும்.
    logo design
    poster design
    banner desig
    Cover page
    Social media போன்றவற்றின் மூலம் உழைக்கலாம்.
  5. Tution classes

கேட்பதற்கு மிக பழைய ஐடியாவாக இருக்கலாம். ஆனால், மிக எளிதாக ஆரம்பித்து விட முடியும். எனக்குத் தெரிந்த மேல்மாகாண கிராமத்து புற ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வகுப்பு வைத்தே – ஆங்கிலப் பாடம் – மாதாந்தம் ஐந்து இலட்சத்திற்கு அதிகமாக உழைக்கின்றார்.
சான்றிதழ்கள் கொடுப்பது
மாதாந்த பரீட்சை நடாத்துவது
பரிசுகள் கொடுப்பது என கொடி கட்டிப் பறக்கின்றது அவரது டியூசன் வகுப்பு.

நீங்களும் புதிய தொழில் ஒன்றைத் தொடங்குங்கள்.
பெரிதாக சாதியுங்கள்.
பணம் வந்துவிட்டால் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகள் ஓரமாய் ஒதுங்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள