April 10, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

வரவு எட்டணா செலவு பத்தணா

2–3 minutes

வரவு எட்டணா செலவு பத்தணா

   "வாப்பா....." துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த தனது மகளை அள்ளி அணைத்துக் கொண்டான் ரமீஸ். 

      "வாப்பா நான் நேர்சரிக்குப் போகப் போறேன். உம்மா சொன்னாங்க. பாட்டுப் பாடேலும்.... டான்ஸ் ஆடேலும்...." 

கண்களை விரித்து முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சொன்ன தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.

  வீட்டுக்குள் வந்தவன் ஒரு கேள்விக்குறியுடன் தன் மனைவி முபீதாவின் முகம் நோக்கினான்.

  "ஏய்... இது மகள ஜனவரிக்கு நேர்சரிக்கு சேர்க்கோணுமே. நான் பெஸ்ட் நேர்சரி ஒன்டு பார்த்துட்டு வந்த"

  " முபீதா மகளுக்கு இப்பதானே மூன்றரை வயசு. அடுத்த வருஷம் சேர்த்தால் போதாதா ?"

” ஆ… நல்ல கத முன் வீட்டு ரிஸ்மாட மகள சேக்கிய. பக்கத்து வீட்டு ராபியாட மகள சேக்கிய. அது மட்டுமல்ல எங்கட தங்கச்சிட மகனையும் சேக்கிய. ரெண்டு வருஷம் நேர்சரில படிச்சோனும் அப்பதான் நல்லம்”

 " எல்லாரும் செய்தன்டு நாங்களும் செய்ய தேவில்ல முபீதா"

 " நீங்க சும்மா இரிங்கோ அது பெஸ்ட் நேர்சரி. அங்க தனி இங்கிலீஷ்ல தான் டீச்சர் பேசிய. அட்மிஷன் இருபதாயிரம். யூனிபார்ம் இரண்டு செட் தச்சோனும் அதுக்கு ஒரு ஐயாயிரம். புக்ஸ் லிஸ்ட் எப்படியும் ஒரு பத்து பன்னிரண்டாயிரம் வரும். அதோட பிள்ளைக்கு புது சப்பாத்து,பேக், எக்ஸ்ட்ரா செலவு எல்லாம் ஜஸ்ட் ஒரு ஐம்பதாயிரம் இருந்தால் போதும்"

 முபீதா மூச்சு விடாமல் சொன்னபோது ரமீஸுக்கு மூச்சு முட்டியது. அவன் தளர்வுடன் சோபாவில் அமர்ந்து கொண்டான். 

 "முபீதா நாங்க தமிழ் மீடியம் தான் புள்ளைய வச்சப் போற. அதுக்கு எதுக்கு இங்கிலீஷ் மீடியம் நேர்சரி. அடுத்தது நீங்க செல்லிய நேர்சரியப் பத்தி பெருசா நல்ல அபிப்ராயம் இல்ல. நாங்க வேற நல்ல நேர்சரி ஒன்டு பார்ப்போம். மூன்று மாசத்துக்கு முந்தி நாலாம் வகுப்பு படிச்சிய மகன வீக்கண்ட் இங்கிலீஷ் கொலேஜ் சேக்கோனும் என்டு ஆடி நின்ட. இருப்பதாயிரத்துக்கு மேல செலவு நான் ஏன்ட கூட்டாளிக்கிட்ட எடுத்த பத்தாயிரத்தையே இன்னும் திருப்பிக் கொடுக்கல்ல. அதுக்குள்ள இன்னொரு பெரிய செலவொன்ட இழுத்துப் போடிய"

  ரமீஸ் கொஞ்சம் காரமாக பேசியதும் முபீதா முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள்.

அடுத்த நாள் “முபீதா… முபீதா…” என கூப்பிட்டவாறு வந்தான் ரமீஸ்.

" நான் நல்ல நேர்சரி ஒன்டு பார்த்துட்டு வந்த. அந்தப் பள்ளி கிட்ட இருக்கிற கைரியா தாத்தாட மகள் பேகம் டீச்சர்ட நேர்சரி"

 "நான் நெனச்ச. எங்கட ஊர்ல இருக்கிற மிச்சம் சீப்பான நேர்சரி அதுதான். ஒரு இருப்பது இருபத்தஞ்சு புள்ளைக தான் படிச்சியாம். சீ... அதுல சேர்ததா சீரழிவு தான்"

" முபீதா நான் நேரில போய் பார்த்துட்டு தான் வந்த. அந்த நேர்சரி மிச்சம் நல்லம். நான் ஸ்கூல் டீச்சர்ஸ் மாரோடையும் பேசின. அவங்களும் பேகம் டீச்சர்ட நேர்சரியத்தான் ரெக்கமண்ட் பண்ணிய. முபீதா எங்கட வரவுக்கு தக்க தான் செலவு செய்யோணும். சும்மா பெருசா சல்லி எடுக்குற நேர்சரிதான் நல்லம் என்டு நெனச்ச வேணாம்" 

"போன வருஷம் கொண்சட்டுக்கு ஒரு புள்ளைக்கு முப்பதாயிரம் மட்டு செலவாம். ஏன்ட கூட்டாளி பொடியன் சென்ன. அவன்ட மகன்தான் இளவரசனாம். ஒத்த செருப்ப வெச்சிக்கொண்டு இளவரசி சிண்ட்றெல்லாவை தேடி போறாம். சின்ன பிள்ளைகளுக்கு இது என்ன பொருத்தமான நாடகமா? சீ.. வெட்கக் கேடு"

“வெளிப்பகட்டுக்கு மயங்க வேணாம் முபீதா. பேகம் டீச்சர்ட நேர்சரிக்கு போன நேரம் இந்த வருஷம் கொண்சட்டுக்கு ‘உண்மையின் உயர்வு’என்று ஒரு நாடகத்தை புள்ளைகளுக்கு பழக்கிக் கொண்டிருந்த .எவ்வளவு அருமையாக புள்ளைக செய்தாங்க தெரியுமா? எவ்வளவு மோட்டிவேஷனலான ஒரு விஷயம். நான் மகள பேகம் டீச்சர்ட நேர்சரில தான் சேர்க்கப் போற. டீச்சருக்கு நாங்க எங்களால ஆன ஹெல்ப்ப பண்ணுவோம்”

“மகள்… வாங்க இந்த அப்ளிகேஷனையும் கொடுத்துட்டு நீங்க ஜனவரியில் இருந்து படிச்சப் போற நேர்சரியையும் பார்த்துட்டு வருவோம்”

மகிழ்ச்சியோடு ஓடி வந்த மகளை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றான் ரமீஸ்.

ஹஸனியா இர்பான்,
தர்கா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள