April 11, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

அல்லாஹ்வைப் புரிந்துகொள்வோம்

2–3 minutes
Praying to Allah
  1. அல்லாஹ்வின் திருநாமங்கள்
  2. அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள்
  3. நபிமார்களின், நல்லடியார்களின் வரலாறு
  4. எமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்
  5. அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி ஆராய்தல்


அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் அற்புதமான கருத்துக்களை கற்றுக்கொள்ளும் போதும் அவை பற்றி ஆழமாக கற்கும்போதும் நாம் அல்லாஹ்வைப் பற்றி இன்னும் இன்னும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக ‘அர்ரஹீம்’ என்ற திருநாமமானது அல்லாஹ்வின் அளவற்ற கருணை பற்றி நமக்கு கற்றுத் தருகின்றது. இந்த வாழ்வில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு காலெட்டிலும் அல்லாஹ்வின் அளவற்ற அன்பு நிறைந்திருப்பதை அது நினைவூட்டுகின்றது. ‘அர்ரஸ்ஸாக்’ என்ற திருநாமம் எமது அனைத்து வாழ்வாதாரங்களும் – வாழ்வதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் அல்லாஹ்வால் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது. ‘அர்ரகீப்’ என்ற திருநாமம் அல்லாஹ் எப்போதும் எம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனையை எமக்கு தந்துவிடுவதால் நாம் பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள எமக்கு உதவுகின்றது.

அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள்
அல்குர்ஆன் வசனங்களும் அண்ணலாரின் நபிமொழிகளும் அல்லாஹ்வைப் பற்றி எமக்கு இன்னும் இன்னும் அதிகமாக கற்றுத் தருகின்றன. உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் அல்லாஹ்வே அகிலத்தின் அதிபதி. அவனே எமக்கு பொறுப்புதாரி என்ற நம்பிக்கையை வலுவூட்டுகின்றது.

‘அவன் கிழக்கு மேற்குத் திசையின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்கு பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!’ (அல்குர்ஆன் 73:9)

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் அருட்கொடைகளின் பிரம்மாண்டம் பற்றி எமக்குக் கற்றுத் தருகின்றது.

‘எனதருமை அடியார்களே..! நான் உணவளிக்காவிட்டால் நீங்கள் அனைவரும் பசியோடுதான் இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் உணவளிக்கக் கேளுங்கள். எனதருமை அடியார்களே நான் ஆடை தராவிட்டால் நீங்கள் அனைவரும் ஆடையின்றியே இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் ஆடை கேளுங்கள். எனதருமை அடியார்களே ஒட்டுமொத்த மனித இனமும் ஜின் இனமும் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்களது அனைத்துத் தேவைகளையும் ஒன்றுசேர என்னிடம் கேட்டுவிட்டு, அந்தத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தால் கூட,ஒரு பெரும் சமுத்திரத்தில் ஊசி ஒன்றை முக்கி எடுத்தால் எவ்வளவு தண்ணீர் குறையுமோ அந்த அளவு கூட என்னிடம் இருக்கும் அருள்வளங்களில் இருந்து குறையாது’
அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (ரழி) நூல் : முஸ்லிம் திர்மிதி


நபிமார்களின் நல்லடியார்களின் வரலாறு
இவை போன்றே. அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நிறைந்திருக்கும் நபிமார்களின் வரலாறு, அதேபோன்று நல்லடியார்களின் வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவற்றிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி, அவனது வரம்புகளற்ற அன்பு நதி பற்றி, அவனது அருட்கொடைகள் பற்றி நாம் தெட்டத்தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஒட்டுமொத்த மரக்கட்டைகளையும் விறகுக் குவியல்களையும் ஒன்றுசேர்த்த கொடிய எதிரிகள் அதில் தீ மூட்டி பென்னம்பெரிய தீக்கிடங்கை உருவாக்கினார்கள்.

அது அனலாக கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் அனைத்துத் திசைகளிலும் வெப்பம் பரவி கொடூரமாக மாறிவிட்டது. அதன் அருகே நிற்கக் கூட அனைவரும் அச்சப்பட்டு விலகிக் சென்றார்கள். அதற்குள்தான் இறைத்தூதர் ஒருவரை தூக்கியெறி;ந்தார்கள்.
ஆனால்,
அவர் அச்சப்படவில்லை…
அலறவில்லை…
சஞ்சலப்படவில்லை…
சலனப்படவில்லை…
அல்லாஹ் என்னைப் பாதுகாக்க போதுமானவன். நான் அவனிடமே என்னிடம் பொறுப்புச் சாட்டுகின்றேன் என்று அல்லாஹ்வின் அன்பிடம் முற்றாக தஞ்சமடைந்துவிட்டார். அல்லாஹ் அவரை கைவிடவில்லை. கொடிய நெருப்பு அவருக்கு குளிர்ந்த நந்தவனமாக மாறியது. அது அவருக்கு இன்பமான இடமாக மாறிவிட்டது. துளியளவும் தீங்கின்றி, அணுவளவும் பாதிப்பின்றி அவர் திரும்பி வந்தார்.
அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்தானே..!


எமது வாழ்க்கைச் சம்பவங்கள்
இதுபோன்றுதான் எமது வாழ்க்கையிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி புரிந்து கொள்ள பல அற்புதமான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கும். பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் அல்லாஹ்வின் அன்பை இன்னும் ஆழமாக நாம் கண்டுணர்ந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு கிடைக்காத சில அருட்கொடைகள் எமக்கு மிகவும் இலகுவாக கிடைத்திருக்கும். சில ஆபத்தான சந்தர்ப்பங்களில் இருந்து அல்லாஹ் எம்மை மிக எளிதா காப்பாற்றியிருப்பான். நாம் மிகவும் ஆசைப்பட்ட விடயங்கள் எமக்கு பொருத்தமற்றது என்பதால் அது எமக்கு கிடைக்காமல் போயிருக்கும். இன்னும்.. இன்னும்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புக்கள்
அல்லாஹ்வின் அற்புதமான, நேர்த்தியான, பிரம்மாண்டமான படைப்புக்களைப் பற்றி ஆராய்ந்தாலே – அவற்றை உற்றுநோக்கினாலே நாம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அல்குர்ஆனே எம்மை அல்லாஹ்வின் படைப்புக்களை உற்றுநோக்குமாறும் அவற்றைப் பற்றி ஆராயுமாறும் ஏவுகின்றது.


இந்த பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும் நாம் அல்லாஹ்வின் அற்புதம ஆற்றலைக் கண்டு மெய்மறந்து நிற்கின்றோம்.
உயர்ந்த வானில் உட்கார்ந்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
ஆழ்கடலினுள் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் அற்புத உயிரினங்கள்
மனித உடலுக்குள் மறைமுகமாக நடைபெறும் செயற்பாடுகள்
சின்னஞ்சிறு உயிரினங்களின் விசித்திரமான வாழ்க்கை வட்டம்
என நாம் பார்க்கப் பார்க்க எம்மை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைக்கும் வகையில்தான் அல்லாஹ் இந்த விசாலமான உலகை அதிசயமாக படைத்திருக்கின்றான்.

அதனால்தான் உலகை உண்மைக் கண்களால் ஆராய்ந்த அறிஞர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள போட்டி போட்டுக்கொண்டார்கள்.
அல்லாஹ்வைப் பற்றி புரிந்துகொள்வதால் எமக்குக் கிடைக்கும் பரிசுகள் எவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள