February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

ரமழானும் குழந்தைகளும்

1–2 minutes

ரமழான் எட்டிப் பார்த்திருக்கின்றது. இந்த நாட்களில் எவ்வாறு நாம் இந்த அழகிய நாட்களை பயன்படுத்தலாம் என்று ஆயிரம் திட்டங்களைத் தீட்டியிருப்போம். இதே நேரத்தில் எமது குழந்தைகளுடன் எவ்வாறு அந்த அற்புத நாட்களை அழகிய முறையில் கழிக்கலாம் என்பது பற்றிய சில கதையாடல்களைத் தருகின்றோம்.

  1. நோன்பின் நோக்கம் பற்றி குழந்தைகளோடு கலந்துரையாடல்
    நோன்பின் சட்டதிட்டங்கள் பற்றியும் அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் எமது குழந்தைகளோடு அளவளாவும் நாம் நோன்பின், எமக்கு விதிக்கப்பட்ட கடமைகளின் நோக்கம் பற்றியும் அவற்றினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அவர்களோடு உரையாட வேண்டும்.

    நோன்பு எமக்கு இறையச்சத்தைத் தரும் என்று அல்லாஹ் ஸுரா பகராவில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் என்பது அல்லாஹ்வின் மீதான அச்சமும் அல்லாஹ் மீதான நேசமும் ஆகும். அதுவே எம்மை பாவங்களில் இருந்து பாதுகாக்கின்றது. அதுவே எம்மை இபாதத்துக்களின் பக்கம் கட்டியிழுக்கின்றது.
  2. அல்லாஹ் பற்றி அதிகம் உரையாடல்
    நோன்பு சில பொழுதுகளில் எமக்கு கடும் பிஸியான காலமாகும். ஆனால், குழந்தைகளுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும். இந்த நாட்களை நாம் எமது குழந்தைகளோடு அல்லாஹ்வைப் பற்றி உரையாட ஒதுக்கிக் கொள்ளலாம். அதிகம் தேடத்தேவையில்லை. அல்குர்ஆனிய கதைகளை எடுத்துக் கொண்டாலே அல்லாஹ்வைப் பற்றி எமது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல ஏகப்பட்ட கதைகள் இருக்கும்.
  3. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
    பல இடங்களில் சிறுவர்களுக்காக பல ரமழானிய நிகழ்ச்சிகள் இடம்பெறத்தான் செய்கின்றன. ஆனால், அவை எந்தளவு தூரம் எமது குழந்தைகளுக்கு பொருத்தமானது என்பதை பார்க்கத்தான் வேண்டும். ஆகப் பிரபலமான ஒருவரை மேதாவித்தனமாக கொண்டு வருவதை விட சிறுவர்களுக்குப் பொருத்தமான ஒருவரை கொண்டு வந்து மாணவர்களின் மனதில் ஆழமாக பதியும் வகையில் நிகழ்வுகளை நடாத்துதல் பொருத்தமானது.
  4. குடும்பவியல் குர்ஆனிய ஓதல்கள்
    குடும்பமாக உட்கார்ந்து குர்ஆன் ஓத ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்வது சிறந்ததாகும். இது குழந்தைகளுக்கு மகிழ்வான நிகழ்வாகவும் அவர்களை உற்சாகமூட்டும் விடயமாகவும் இருக்கும்.
  5. வாசிப்பை அன்பளித்தல்
    எமது குழந்தைகள் வாசிப்பை பழகிக் கொள்ள ரமழான் அற்புத சந்தர்ப்பமாகும். ஆனால், அவர்களுக்கு அதற்குப் பொருத்தமான புத்தகங்கள் வேண்டும். சிலவேளை நாம் புத்தகத் தேர்வில் விடும் தவறுகள் எமது குழந்தைகளுக்கு வாசிப்பு பற்றிய விருப்பை மொத்தமாக பொசுக்கி விடவும் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள