இது உங்களின் குரல்களுக்கான தளம்

புத்தகம் எழுதுவது எவ்வாறு?

3–5 minutes
Creator

புத்தகம் எழுதுவது எவ்வாறு?

நீண்ட நாட்களாக பலரும் கேட்கின்ற கேள்வி ஒன்று இருக்கின்றது. அது புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று.. நானும் என்னால் முடிந்த அளவில் பொருத்தமான பதில்களை வழங்கியுள்ளேன். சிலர் விடாப்பிடியாக என்னைப் பிடித்து இரண்டு மூன்று புத்தகங்களை எழுதிவிட்டனர். இன்னும் சிலர் இரண்டு மூன்று கேள்விகளோடு காணாமல் போய்விட்டனர்.

இப்போது கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கின்றது. புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

எழுத்து என்பது எமது உள்ளத்திற்கும் உணர்வுக்கும் சுறுசுறுப்பு தரும் மந்திர பானமாகும். அதனை சரிவர பயன்படுத்தும்போது இந்த உலகின் தலைவிதியைக் கூட தலைகீழாய் மாற்றிவிடலாம்.

புத்தகங்கள் பல்வேறு காரணங்களுக்காக, இலக்குகளுக்காக வெளியிடப்படுகின்றன. தனது அடையாளத்தை நிரூபிப்பதற்காக, சமூகத்தில் மாற்றமொன்றை நிகழ்த்துவதற்காக, மேலதிக வருமானம் ஒன்றை தேடிக் கொள்வதற்காக.. என அந்த இலக்குகள் மாறுபடுகின்றன. ஆகவே, கீழே உள்ள பொதுக் குறிப்புக்களும் உங்கள் இலக்குகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சிற்சில மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

1.           மனநிலை (Mindset)

புத்தகம் எழுதுவதற்கு முதலில் அடிப்படைத் தேவை அதற்குரிய மனநிலையாகும். வெறுமனே ஒரு கட்டுரையை எழுதுவது போன்றோ… அல்லது கவிதையொன்றை பிரசவிப்பது போன்றோ கட்டுரையை எழுதிவிட முடியாது. அதற்கு ஆழமான மனநிலையொன்று வேண்டும்.

புத்தகம் எழுதுவது என்பது தொடர் செயற்பாடு. அதன் முதல் அத்தியாயத்தில் நாம் காட்டும் அக்கறையும் ஆர்வமும் இறுதி முற்றுப்புள்ளி வரை தொடர வேண்டும் என்பதால் இந்த மனநிலை அவசியப்படுகின்றது. புத்தகங்களை வாசித்தல், எழுத்தாளர்களுடனான உரையாடல், ஆழ்ந்த சிந்தனை, சில நீண்ட பயணங்கள் என்பன எமக்கு புத்தகங்களை எழுதுவதற்கான உந்துதலை பரிசளிக்கலாம்.

2.           எமது துறையை தெரிவு செய்யலாம்

நான் அடிக்கடி கூறும் வசனம் ஒன்று இருக்கின்றது. இங்கு அநேகப் பேர் தமது திறமைகளால் இந்த உலகை வெற்றி கொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் தமக்கு பொருத்தமில்லாத துறையில் வீண் முயற்சி செய்வதும் தனக்கு பொருத்தமான துறையில் சோம்பிக் கிடப்பதுமாகும்.

புத்தகம் எழுத விரும்பினால் உங்கள் துறை எது என்பதை முதலில் தெரிவு செய்யுங்கள். இலக்கியம், அரசியல், கலை, விஞ்ஞானம், தொழிநுட்பம், மோட்டிவேஷன்… என உங்களுக்கான துறையை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு எழுத்தாளர் எத்தனை துறைகளில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், தனது கால்களை ஸ்தீரப்படுத்துவதற்கு ஏதாவது துறையை முதலில் தெரிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பிறகு விரும்பிய துறையில் ஒரு கலக்கு கலக்கலாம்.

3.           மொழிநடையை தெரிவு செய்து கொள்ளுங்கள்

நீங்கள் யாருக்காக எழுதுகின்றீர்கள் என்பது அத்தியாவசியமாகும். புத்திஜீவிகளுக்காக எழுதுகின்றீர்களா? சாதாரண பொதுமக்களுக்காக எழுதுகின்றீர்களா? மாணவர்களுக்காக எழுதுகின்றீர்களா? குழந்தைகளுக்காக எழுதுகின்றீர்களா? என்பதை வரையறை செய்து கொள்ளுங்கள். இது தவிர்த்து சமூக வளைத்தளங்களில் பத்திகள் எழுதுவதென்றால் அதற்கென தனி மொழிநடை இருப்பது உங்களுக்குத் தெரியும்.

4.           திட்டமிடல் (planing)

முதலில் புத்தகத்தில் கருப்பொருளை தெரிவு செய்து கொள்ளுங்கள். அது தொடர்பான உப தலைப்புக்களை ஆக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் தந்தையைப் பற்றி எழுதப் போகின்றீர்கள் என்றால்.. அவரின் தோற்றம், உங்களுடனான உறவாடல்கள், உங்களுக்கும் அவருக்கும் இடையிலான அந்தரங்க பாசப் போராட்டம், அவரின் ஆளுமைகள், அவருடனான மறக்க முடியாத சம்பவங்கள் போன்றவற்றை எழுதிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு அவற்றை தலைப்பு ரீதியாக முன் வைப்பதா அல்லது அல்லது நாவல் வடிவத்தில் பரிமாறுவதா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.

எத்தனை தலைப்புக்களாக அல்லது எத்தனை அத்தியாயங்களாக எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதேபோன்று ஒவ்வொரு அத்தியாயமும் எந்த அளவு வரவேண்டும் என்பதை திட்டமிடவும் மறக்க வேண்டாம்.

5.           எழுத ஆரம்பியுங்கள் (start)

அதிகம் யோசித்தால் வேலைக்கு ஆகாது. எழுத ஆரம்பித்து விடுங்கள். எழுதுவற்கான மனநிலையை சரியாக புரிந்து கொள்ளுங்கள். சில பொழுதுகளில் உங்களால் ஆயிரம் பக்கங்களைக் கூட அசால்டாக எழுதிவிட முடியும். ஆனால், இன்னும் சில நேரங்களை அகரத்தை எழுதக் கூட முடியாமல் முண்டியடிக்க வேண்டியிருக்கும். அப்போது எழுதினால் உப்புச்சப்பற்ற எழுத்துக்கள்தான் குறைபிரசவமாய் கொட்டும். ஆகவே, உரிய மனநிலையை எழுத பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

6.           தட்டச்சு (Type) செய்து கொள்ளுங்கள்

புத்தகத்தை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். பாமினி  (Bamini) எழுத்தச்சில் தட்டச்சு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

7.           செவ்வை பார்த்தல் (Proof Reading)

உங்கள் ஆக்கங்களில் எழுத்துப் பிழைகள், வசனப் பிழைகள், கருத்து மயக்கங்கள் இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் இன்னொருவரின் உதவியை நாடலாம். ஏனென்றால், நாம் விடும் தவறுகளை நமது மூளை நம்மிடமிருந்து மறைத்துவிடும்.

8.           ஆலோசனை கேளுங்கள்

உங்கள் எழுத்தாக்கத்தை உரிய எழுத்தாளர்களுக்கு காட்சி சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள தயங்காதீர்கள். ஆனால், ஆனால், ஆனால், மிகக் கவனம். பொருத்தமான எழுத்தாளர்கள் மட்டும் இருந்தால் மாத்திரமே ஆலோசனை கேளுங்கள். ஏனென்றால், எழுத்தாளர்களில், இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் திமிர் நோயால் அவதிப்படுபவர்கள். இன்னும் சிலர் இந்த உலகத்தில் தாம் மட்டுமே பெரிய்ய்ய்ய எழுத்தாளர் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நமது அப்பாவி நூலைக் காட்டினால் அவ்வளவுதான். மலத்தை மிதித்தது போன்று மூஞ்சியை வைத்துக் கொண்டு அவர்கள் கிழிக்கின்ற கிழியில் ‘வேண்டாம் தங்கமே, இதற்கு அப்புறம் புத்தகம் எழுதுவதைப் பற்றி கனவில கூட நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்று ஓடி வந்து விடுவீர்கள். ஆகவே, பொருத்தமானவர்கள் இருந்தால் மட்டும் ஆலோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.

9.           வடிவமைப்பு செய்யுங்கள் (Layout)

வடிவமைப்பாளர்கள் உங்கள் பக்கங்களை வடிவமைப்பு செய்து தருவார்கள். உங்களுக்கு பொருத்தமான அட்டைப்படத்தை (Cover page) செய்து தருவார்கள். வேலையை ஆரம்பிக்க முன்பே உங்கள் புத்தகம் இவ்வாறுதான் வரவேண்டும்.. இவ்வாறுதான் அதன் படங்கள் அமைய வேண்டும்… இந்த அளவுதான் உங்கள் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறிக் கொண்டால் தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

10.         பதிவு செய்தல்

இலங்கையில் வெளியாகும் அனைத்துப் புத்தகங்களையும் பதிவு செய்தல் அவசியமாகும். எமது பாசையில் இதை ISBN இலக்கம் பெறல் என்று சொல்லிக் கொள்வார்கள்.

இணையதளத்தினுள் நுழைந்து ISBN Apply டைப் செய்யுங்கள். National Library இனுடைய இணையதளம் விரியும். அதில் ISBN Apply என்பதை சொடுக்குங்கள். உங்களுக்குத் தேவையான விபரங்களை பூர்த்தி செய்யுங்கள். அடையாள அட்டையில் உள்ளவாரே உங்கள் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள். கட்டணமாக வெறும் 400 ரூபாய் மாத்திரமே அறவிடப்படும். அதற்காக மக்கள் வங்கி அட்டையை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில மணித்துளிகளில் அல்லது, ஒரு சில நாட்களில் உங்களுக்கான  ISBN இலக்கம் கிடைத்துவிடும்.

11.         வெளியிடுவது எவ்வாறு?

புத்தகம் எழுதும் பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கும் சிக்கல் இதுதான். எழுதிய புத்தகத்தை, வடிவமைத்த புத்தகத்தை எவ்வாறு வெளியிடுவது..

மற்ற நாடுகளைப் போன்று இலங்கையில் ஊக்கப்படுத்துவதற்காக புத்தகங்களை வெளியிடுவது அரிதாகும். National Library சில முயற்சிகளை மேற்கொள்கின்றது எனவும் இன்னும் சில பதிப்பங்கள் இதற்கு அவ்வப்போது உதவி செய்கின்றது எனவும் அறிந்தேன். ஆனால், எமது புத்தகங்களை கண்டவுடனேயே கண்களில் நீர் மல்க எம்மை கட்டியணைத்து உச்சி முகர்ந்து எமது புத்தகங்களை வெளியிட ஆள் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில பிரபல எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்பு இருக்கலலாம்.

புத்தகங்கள் எழுதி முடித்தால்..

1.           வெளியீட்டகங்களை  (Publication) தொடர்பு கொண்டு எமது புத்தகம் பற்றி எடுத்துரைக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு இலாபத்தில் ஒரு பங்கை எமக்குத் தருவார்கள்.

அல்லது,

2.           எம்மால் புத்தகங்களை விற்க முடியும் என நினைத்தால் நாமே அவற்றை வெளியிடலாம். இன்று எமது தனிப்பட்ட தொடர்புகள் மூலமும் சமூக வளைத்தளங்கள் மூலமும் தாராளமாக சந்தை வசதியை உருவாக்கக் கூடிய வாய்ப்புக்கள் மலிந்திருக்கின்றன.

அல்லது

3. E-Book வடிவத்தில் வெளியிடலாம். இதற்காகவும் எம்மால் வாசகர்களிடமிருந்து கட்டணம் ஒன்றை அறவிட்டுக் கொள்ள முடியும்.

புத்தகம் எழுதுதல், வடிவமைத்தல், வெளியிடல், விற்பனை செய்தல் போன்றன பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கொமண்ட் செய்யுங்கள். அதற்குரிய பதில்களை அடுத்த பதிவில் விரிவாக தர முயற்சிக்கின்றோம்.

2 responses to “புத்தகம் எழுதுவது எவ்வாறு?”

  1. Sumaiya Ismail Avatar

    மிகவும் பயனுள்ள பதிவு

    جزاك الله خيرا

  2. Sumaiya Ismail Avatar

    மிகவும் பயனுள்ள பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள