February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

என்னை மறந்த மூத்தம்மா

4–6 minutes

என் மூத்தம்மாவிற்கு வயது 101. குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளையும் கண்டு விட்டார். என் உம்மாவின் தாயின் தாய். 101 வருடங்கள் கடந்தும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடந்த காலந்தொட்டு இன்று வரை நடந்த கதை அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூறுவார். பேரப் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் இவர் கண்டுவிட்டார். மரணத்தை பலமுறை சந்திக்க நேர்ந்தாலும் மீண்டும் ஒரு பூவாய் மலர்ந்து விடுவார். நான் மூத்தம்மா என்று தான் கூப்பிடுவேன். வெள்ளைப்புடவை அல்லது வெள்ளை பூக்கள் காட்சி தரும் புடவை தான் அணிந்திருப்பார். இவரது இளைய மகளின் பராமரிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எந்த நோயும் இல்லாமல் 99 வயதில் கூட ஆரோக்கியமாக இருந்தார். இரண்டு வருடமாக படுத்த படுக்கையாய் கட்டிலில் இவரது காலம் செல்கின்றது.

100 வயதை தாண்டி 101 வயதில் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறார். 101வயதிலிருந்து மழலை பருவத்திற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார். மூத்தம்மா மழலை மொழியில் பேசவும் சிரிக்கவும் செய்கிறார்.

வயது செல்லச் செல்ல ஞாபகம் மங்கி செல்வது மிக துல்லியமாக தென்படுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த உறவு என்பதையும் சென்ற காலத்தையும் மெல்ல மெல்ல மறந்து வருகிறார்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் மூத்தம்மாவிடம் அந்த கால கதைகள் கேட்டு இருக்கின்றேன். ஒன்றும் விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்துவிடுவார்.

இவர் இவரின் பிள்ளைகளும் உணவு உண்பதில் சற்று வித்தியாசம். உணவக உணவுகளை முற்றாக தவித்துக் கொண்டனர். மீன், இறைச்சி, இறால் ,கோழி ,ஈரல் என்று ஒன்றும் சாப்பிடுவதில்லை.

” ஏன் மூத்த நீங்க மீன் இறால் சாப்பிடவில்லை” என்று நான் கேட்க “அது மன அந்தக் காலத்தில் வன்சல் பிரச்சினை வந்தது. சில ஆட்களை ஆத்துல வெட்டி போட்டதால அதையெல்லாம் மீன் சாப்பிட்டது.அதன் காரணம் தான் இன்று வரை நாங்கள் உணவில் மீனை சேர்க்கவில்லை” என்று சொல்லுவார்

மூத்தம்மாவை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. இரவில் பெரிதாக தூங்குவதும் இல்லை காலை விடிவதற்கு முன் வெளியில் வந்து கதிரையில் ஒரு காலுக்கு மேல் மற்றொரு காலை போட்டு தான் அமைந்திருப்பார்.

எப்போதும் வாயில் வெற்றிலைதான் மென்று கொண்டிருப்பார். உதடு செக்கச் சிவந்து ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கும். புடவையில் ஆங்காங்கே வெற்றிலை சாறு படிந்திருக்கும்.

நான் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டார் என்றால்” இது வந்து தான் இந்த உலகம் கெட்டு விட்டது. யாரைப் பார்த்தாலும் இதைத்தான் கையில் வைத்து உற்றுப் பார்த்து இருக்கிறார்கள். நம் வீட்டுக்கு ஆட்கள் வருவதும் நாம் அவர்களது வீட்டுக்கு செல்வதும். ஆனால் இன்று எவர் வீட்டிற்கும் எவரும் செல்வது கிடையாது. இந்த காலத்தில் யார்ர வீட்டுக்கு சென்றாலும் ஒருவரும் கண்டுக்க மாட்டார்கள். எல்லோரும் இதை தான் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். சின்னப்பிள்ளை கூட தூங்காமல் இரவு முழுவதும் பார்க்கிறது” என்று எனக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.

“ஒரு நாள் நஞ்சுக் கிரகணம் வந்தது.எல்லோரும் தங்கள் தங்களது குடிசைக்குள் சென்று தூங்கி விட்டோம். பிறகு மாலை நேரத்தில் தான் எழும்பி ஆற்றங்கரையில் போய் குளித்தோம் என்றார்”.

காதில் பல அடையாளங்கள் இருக்கும் “என்ன இது” என்று நான் காதை தொட்டு பார்த்து கேட்பேன். “அது அல்லு குத்து என்பார். காதில் பெரிய குண்டலமும் கையில் செப்புக்காப்பும் எல்லாம் போட்ட தான்.மூத்தப்பா இறந்ததிற்கு பிறகு அனைத்து நகையல்லாம் விற்றுவிட்டேன்” என்று சொன்னார்.

மகாராணி போல தான் மூத்தம்மா இருந்து இருப்பார் என அவர் ஒவ்வொன்றாய் கூறும் போது நான் கற்பனை செய்து கொள்வேன்.

எனக்கு சூறாவளி சுனாமி ஏற்பட்ட கதை அனைத்தையும் ஒன்றும் விடாமல் சொல்லி முடிப்பார்.

“இந்த காலத்திலே சூறாவளி சுனாமி என்று வந்தால் பெரிய பெரிய அழிவுகள் தான் வரும். எல்லோரும் பெரியமாடி வீடு பிளட்டு போட்ட வீடு கட்டி விட்டனர். முன்னே காலத்தில் குடிசைகள் சரிந்து விழுந்தால் கூட அதை மீண்டும் கட்டி எடுத்து விடலாம் ஆனால் இந்த மாடி வீடெல்லாம் இடிந்து விழுந்தால் சரியான சேதம் வரும்” என்று முந்தைய காலத்தை பெரிதாக எண்ணி கூறுவார்.

இவரின் காதில் கேட்கும் அளவிற்கு ஏவராவது பசிக்கிறது என்றால் உடனே ஏதாவது உணவு பண்டங்களை அவர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லுவார்.

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “பசிக்கிறது” என்று இவரிடம் கூறினால் சிறிது நேரம் கழித்து பிஸ்கடோ அல்வாவோ எனக்கு சாப்பிட தந்து அவரின் கண் முன்னே இருந்தே சாப்பிடச் சொல்வார்.

இவருக்கு தேநீர் என்றால் அலாதி விருப்பம். ஒரு கப் தேநீரை முழுவதுமாக குடித்து முடிப்பார். இவர் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது சின்ன பிள்ளைகளை கண்டால் அந்த பிள்ளைக்கும் கொஞ்சம் பருக்கி விடுவார்.

இவரின் தங்கச்சி மார் நோய் வந்து படுக்க படுக்கையாய் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களை பார்வையிட உடனே சென்று விடுவார்.

இந்த வயதில் கூட நெடுந்தூரம் நடந்தே பயணிப்பார். இறைச்சிக் கடைக்கும் இன்னும் மரக்கறி கடைக்கும் நடந்தே சென்றே வாங்கி வருவார்.

இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி அதைஅவித்து மிளகாய், புளியம்பழம் அதில் இட்டு சமைத்து தருவார். இதில் இருக்கும் ருசியே வேறு.

எங்கள் வீட்டில் பிளி மாங்காய் கொத்துக் கொத்தாக காய்த்திருக்கும். காலையில் அதை பறித்துக்கொண்டு செல்வார். பகல் ஒரு மணிக்கு ஒரு கோப்பையுடன் எங்கள் வீட்டுக்கு கறி கொண்டு வருவார். காய்ந்த இறைச்சியையும் பிளி மாங்காயையும் வைத்து கறி ஒன்று சமைப்பார். இன்று நினைத்தால் கூட நாவில் எச்சி ஊறுகின்றது.

“உப்பட்டி” என்று சொல்வார்கள் அது என்ன என்று கேட்பேன்.

முன்னே காலத்தில் வேளாண்மை செய்த பிறகு கதிர் முற்றிவிட்டால் ஒரு மாதத்திற்கு முன்னரே பெரிய குடும்பமே வயலுக்குள் பயணம் செய்து விடும்.

ஆனால் இந்த காலத்தில் அப்படி எல்லாம் இல்லை. பெரிய வேளாண்மை வெட்டும் இயந்திரம் ஒன்றும் இல்லாமல் அனைத்தையும் அறுவடை செய்து
மூட்டையாக வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் வேளாண்மை அறுவடை செய்து நெல்லை குத்தி சோறாக்கி வயலில் இருந்து சாப்பிட்டுவிட்டு மற்றவைகளை மூட்டியாய் கட்டி வைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.

வேளாண்மையை வெட்டி முடித்த பிறகு வயலில் நெல் ஆங்காங்கே நிறைந்து இருக்கும். அதை கொஞ்சம் கொஞ்சமாக பெரிய மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து அதை அவித்து குத்தி சோறு ஆக்கி எங்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் கொடுப்பேன். உப்பட்டி சுற்றுவது என்று கூறுவார்.

எப்போதும் இவருக்கு பக்கத்தில் வெற்றிலை பெட்டி இருக்கும்.
கையில் பாக்கு வெட்டியுடன் என் நேரமும் பாக்கை நறுக்கிக் கொண்டுதான் இருப்பார். வெற்றிலை பெட்டி எப்போதும் நேர்த்தியாக தான் இருக்கும். சுண்ணாம்பு வைப்பதற்காக ஒரு டப்பா என்று பார்ப்பதற்கு கண்ணீர் கவரும்.

“நீங்க வெற்றிலை போடுவதற்கு எப்போது ஆரம்பித்த” என்று நான் கேட்டேன். “அது பெரிய கதப்பா” என்று சொல்லி கதையை சொல்ல ஆரம்பித்தார்.

இவரின் இரண்டாவது மகள் பிறந்திருந்த காலம் அது. மூத்தம்மாவிற்கு 8 பிள்ளைகள் மூன்று பிள்ளைகள் மரணித்து விட்டார்.தாங்க முடியாத பல் வலி வந்ததது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சொன்னார்களாம் “வெற்றிலையையும் பாக்கையும் மென்று பாருங்கள் லேசாகிடும்” என்றனர். பல் வலி லேசாகிவிட்டது. ஆனால் வெற்றிலை போடும் பழக்கம் பல வருடங்கள் சென்றும் விடவில்லை.

ஒருநாள் மாலை மூத்தம்மாவிற்க்கு வருத்தம் என்று கேள்விப்பட்டு நான் சென்றேன். மூத்தம்மாவின் முழு குடும்பமும் வந்திருந்தது.

மூத்தம்மா தூங்கிக் கொண்டிருந்தார். சிலர் கண்ணீர் வடித்துக்கொண்டுருந்தனர். என்னை விட்டு மூத்தம்மா சென்று விடுவார்கள் என எனக்கு எண்ணம் கூட வந்தது.

ஆனால் அடுத்த நாள் காலை எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிட்டார். இது எல்லோருக்கும் வியப்பை தந்தது. நோய் என்று வந்தால் சுருண்டு படுக்க மாட்டார். உடனே அதிலிருந்து மீண்டு வந்து விடுவார். அவர் நோய் என்று இருக்கும் போது கண்ணெதிரே பார்வையில் வந்தது

2023 செப்டம்பர் மாதம் இறுதியில் பிரதேச சபை மூலமாக சிலர் வந்து அவரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்துள்ளார் மூத்தம்மா.

2023 அக்டோபர் முதலாம் திகதி காலை முதியோர் தினம் என்பதால் மூத்தம்மாவை பிரதேச சபைக்கு வரவழைத்து பொண்ணாடை போர்த்தி மாலையெல்லாம் அணிந்து மூத்துமாவின் புகைப்படத்தை மாதிரி கவிதை ஒன்றும் சேலை ஒன்றும் பரிசாக வழங்கினார்கள்.

நான் சென்ற மாதம் மமத்தம்மாவை பார்க்க சென்றேன்.என்னோடு நன்றாக தான் கதைத்தார்.
மூத்தம்மாவின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. தோல்கள் நன்றாக சுருங்கிவிட்டது. நான் கதைக்கும் போது நான் என்ன கூறுகிறேன் என்று கேட்க அவர் காதை என் வாய்க்கு அருகில் கொண்டு வந்து நான் சொல்வதை கேட்டார். கேட்கும் திறனும் குறைந்து இருந்தது. என் கைகளை பற்றி பிடித்தார். என் முகத்தை கைகளால் தடவினார்.

“எங்க இருந்து வாரீங்க” “கொஞ்ச நேரத்திற்கு பிறகு வந்து விடுவாங்க” “சந்திச்சிட்டு போங்க” “நீங்க இவங்களுக்கு என்ன உறவு” என்று கேட்டார். நான் திக்கற்றுப்போயிருந்தேன்.

கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. மூத்தம்மா என்னை மறந்து விட்டார்.

நவாஸ் பாஹிக் அஹமட் (சிறாஜி)
(இளம் புயல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள