இது உங்களின் குரல்களுக்கான தளம்

அவள் அழகானவள்

4–6 minutes
She is beautiful

உதட்டோரம் வழிந்து கொண்டிருந்த இரத்தத் துளிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் ஜீனத்தும்மா. ஒட்டுமொத்த இடிகளும் ஒன்றாய் இறங்கியது போன்று வலித்துக் கொண்டிருந்தது உச்சந்தலை. மூச்சு விடவும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பலகைக் கட்டையைத் தேடிப் பிடித்து அதில் அமர்ந்த போதுதான் எங்கோயோ ஓடி ஒளிந்து கொண்டிருந்த உயிர் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
சற்று வெளியே எட்டிப் பார்த்தாள்.

இத்தனை நேரம் அவளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த அவளது கண் கண்ட கணவன் மாமர நிழலில் நின்று சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. அப்படியே மெதுமெதுவாக தவழ்ந்து சென்று பாயில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். ஒரு விழியோரம் மாத்திரம் கரிசல் நீர் கரைந்தோடிக் கொண்டிருந்தது.

காதர் ஜீனத்தும்மாவை அடித்துத் துவைப்பது ஒன்றும் இது முதற் தடவையல்ல. அதுவும் கால் காசு பெறாத விடயங்களுக்காக தன் மனைவியை ஏறி மிதிப்பதில் அவர் படு கில்லாடி. சோற்றில் உப்புக் குறைந்தால்… கறியில் உப்புக் கூடினால்… கழுவிப்போட்ட சாரம் காயாவிட்டால்… என அவன் தன் மனைவியை அடிப்பதற்கான காரணங்கள் ரொம்பவுமே அற்பத்தனமாக இருக்கும். காதர் அடித்த அடியில் இரண்டு தடவை கை உடைந்து விட்டது.

நான்கு தடவை தலை வெடித்து இரத்தம் கசிந்தது. ஆனாலும், இந்த சமாச்சாரங்கள் அடுத்த வீட்டுக்குக் கூட தெரியாது நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் தனக்குள்ளேயே மறைத்து விழுங்கிக் கொண்டிருந்தாள் அந்த அப்பாவி மனுஷி.
பெண்களுக்கு ஒரு மகத்தான சக்தி இருக்கின்றது. எவ்வளவு பெரிய காயத்தையும் அவளால் கடந்து செல்ல முடியும். எவ்வளவு பெரிய வலியையும் அவளால் விழுங்கிக் கொண்டு மெல்லிய புன்முறுவலுடன் இந்த வாழ்வை ஜீரணிக்க முடியும். சத்தியமாக இது ஆண் என்பனுக்கு சாத்தியமே இல்லாத விடயம்.

ஜீனத்தும்மாவுக்கு இந்த அடி தடியல்லாம் பழகிவிட்டது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இந்த நாற்பது வருட கல்யாண வாழ்வில் எல்லாமே சலித்துப் புளித்து இழித்துவிட்டது. இரவு முழுவதும் உதை வாங்கினாலும் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தொழுதுவி;ட்டு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு பசுமாடுகள், கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கம் பதினைந்து கோழிகள், அவ்வப்போது எட்டிப் பார்த்து நலம் விசாரித்து விட்டுச் செல்லும் ஒற்றை மயில், கல்யாண வீட்டிலும் மையத்து வீட்டிலும் மணித்தியாலக் கணக்கில் ஊர் அரட்டையடிக்கும் பால்யக்காலத் தோழிகள், தூக்கம் வரும் வரை தூயவனைத் துதிக்க உதவும் தஸ்பீஹ் கோர்வை என அவளது வாழ்வு ஆரவாரமற்று அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது.
காதர் வித்தியாசமான பிறவி.

பள்ளிவாசலுக்கு எதிரே நாற்பது வருடம் கடை வைத்திருந்தார். அதிகாலையிலேயே அந்தக் கடைக்கு வரும் நான்கைந்து பெரிசுகள் டீயை உறிஞ்சி வடையைச் சப்பி ஊர் அரசியலை ஒரு கழுவு கழுவுவதற்கிடையில் சூரியன் உச்சி வானுக்கு வந்துவிடும். அதன் பிறகு தொங்கோட்டம் ஓடி வீட்டுக்கு பகல் சாப்பாட்டுக்கு வருவார்.

வரும்போது பாய் மீது சாப்பாடு, கை கழுவும் கோப்பை, தேவைக்கு உபயோகிக்க உப்பு போத்தல், பல் ஈறுகளுக்குள் மாட்டிப்படும் சோற்றுப் பருக்கைகளை வெளியே எடுக்க ஈக்கில் குச்சி என்பன தயாராக இல்லாவிட்டால் அவ்வளவுதான். எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்து விடுவார். அந்த கோபத்தில் தனது மனைவிக்கு இரண்டு சாத்து சாத்தினால்தான் அவரது ஆன்மா சாந்தமாகும்.

ஊரில் காதர் நானாவுக்கு நல்லதொரு பெயர் இருந்தது. ‘சாந்தமான மனுஷன்’ என பெயர் வாங்கியிருந்தார். ஆனால், கடைத் தெருவில் இருந்து அள்ளிக்கொண்டு வரும் ஆத்திரங்களை மனைவி மீது இறக்கி வைப்பதால்தான் அவர் ‘நல்ல மனுஷனாக’ உலா வந்துகொண்டிருக்கின்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

சிலர் வெளியுலகிற்கு அதி அற்புத தங்கப் பிறவிகளாக இருப்பார்கள். ஆனால், மனைவிகளிடம் சைக்கோத்தனமாக கொடிய ஜீவன்களாக அட்டூழியம் செய்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத்தான் உலாவிக் கொண்டிருந்தார் காதர்.

இடையில் ஒரு நாள் காதரின் ஆஸ்தான நண்பன் முக்தாரின் மனைவி இறந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் முதல் ஆளாய் கடைக்கு வரும் முக்தாரை அதன் பிறகு இரண்டு வாரம் காணவேயில்லை. ஒரு எட்டுப்போய் பார்த்து விட்டு வருவோம் என்று காதரும் கடையைச் சாத்திவிட்;டுப் புறப்பட்டார். வழமையாக சிங்க நடையில் உலா வரும் முக்தார் கசக்கிப் போட்ட காய்ந்த இலை போன்று நொடிந்து உட்கார்ந்திருந்தார். கன்னங்களில் படர்ந்திருந்த அரைகுறை தாடி அவரை சோகச் சித்திரமாக காட்டிக் கொண்டிருந்தது.
‘என்ன முக்தார் செய்வது. நடப்பது நடந்துவிட்டது.

இதற்குப் பிறகு எத்தனை நாள் இப்படியே இருக்கப் போர.. அடுத்த வேலையைப் பார்க்கத்தானே வேணும்’ என்றார் காதர்.
அந்த சோகத்திலும் முக்தாரின் முகத்தில் மெல்லிய சிரிப்பொன்று தோன்றி மறைந்தது.

‘வேறு வேலையா! இதற்குப் பிறகு இந்த உலகத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது. அவளே போய்விட்டாள்.’

என்றார் ஈனஸ்வரக் குரலில்… உதட்டோரம் வழிந்து கொண்டிருந்த இரத்தத் துளிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் ஜீனத்தும்மா. ஒட்டுமொத்த இடிகளும் ஒன்றாய் இறங்கியது போன்று வலித்துக் கொண்டிருந்தது உச்சந்தலை. மூச்சு விடவும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பலகைக் கட்டையைத் தேடிப் பிடித்து அதில் அமர்ந்த போதுதான் எங்கோயோ ஓடி ஒளிந்து கொண்டிருந்த உயிர் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
சற்று வெளியே எட்டிப் பார்த்தாள்.

இத்தனை நேரம் அவளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த அவளது கண் கண்ட கணவன் மாமர நிழலில் நின்று சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. அப்படியே மெதுமெதுவாக தவழ்ந்து சென்று பாயில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். ஒரு விழியோரம் மாத்திரம் கரிசல் நீர் கரைந்தோடிக் கொண்டிருந்தது.

காதர் ஜீனத்தும்மாவை அடித்துத் துவைப்பது ஒன்றும் இது முதற் தடவையல்ல. அதுவும் கால் காசு பெறாத விடயங்களுக்காக தன் மனைவியை ஏறி மிதிப்பதில் அவர் படு கில்லாடி. சோற்றில் உப்புக் குறைந்தால்… கறியில் உப்புக் கூடினால்… கழுவிப்போட்ட சாரம் காயாவிட்டால்… என அவன் தன் மனைவியை அடிப்பதற்கான காரணங்கள் ரொம்பவுமே அற்பத்தனமாக இருக்கும். காதர் அடித்த அடியில் இரண்டு தடவை கை உடைந்து விட்டது.

நான்கு தடவை தலை வெடித்து இரத்தம் கசிந்தது. ஆனாலும், இந்த சமாச்சாரங்கள் அடுத்த வீட்டுக்குக் கூட தெரியாது நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் தனக்குள்ளேயே மறைத்து விழுங்கிக் கொண்டிருந்தாள் அந்த அப்பாவி மனுஷி.
பெண்களுக்கு ஒரு மகத்தான சக்தி இருக்கின்றது. எவ்வளவு பெரிய காயத்தையும் அவளால் கடந்து செல்ல முடியும். எவ்வளவு பெரிய வலியையும் அவளால் விழுங்கிக் கொண்டு மெல்லிய புன்முறுவலுடன் இந்த வாழ்வை ஜீரணிக்க முடியும். சத்தியமாக இது ஆண் என்பனுக்கு சாத்தியமே இல்லாத விடயம்.

ஜீனத்தும்மாவுக்கு இந்த அடி தடியல்லாம் பழகிவிட்டது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இந்த நாற்பது வருட கல்யாண வாழ்வில் எல்லாமே சலித்துப் புளித்து இழித்துவிட்டது. இரவு முழுவதும் உதை வாங்கினாலும் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தொழுதுவி;ட்டு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு பசுமாடுகள், கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கம் பதினைந்து கோழிகள், அவ்வப்போது எட்டிப் பார்த்து நலம் விசாரித்து விட்டுச் செல்லும் ஒற்றை மயில், கல்யாண வீட்டிலும் மையத்து வீட்டிலும் மணித்தியாலக் கணக்கில் ஊர் அரட்டையடிக்கும் பால்யக்காலத் தோழிகள், தூக்கம் வரும் வரை தூயவனைத் துதிக்க உதவும் தஸ்பீஹ் கோர்வை என அவளது வாழ்வு ஆரவாரமற்று அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது.
காதர் வித்தியாசமான பிறவி.

பள்ளிவாசலுக்கு எதிரே நாற்பது வருடம் கடை வைத்திருந்தார். அதிகாலையிலேயே அந்தக் கடைக்கு வரும் நான்கைந்து பெரிசுகள் டீயை உறிஞ்சி வடையைச் சப்பி ஊர் அரசியலை ஒரு கழுவு கழுவுவதற்கிடையில் சூரியன் உச்சி வானுக்கு வந்துவிடும். அதன் பிறகு தொங்கோட்டம் ஓடி வீட்டுக்கு பகல் சாப்பாட்டுக்கு வருவார்.

வரும்போது பாய் மீது சாப்பாடு, கை கழுவும் கோப்பை, தேவைக்கு உபயோகிக்க உப்பு போத்தல், பல் ஈறுகளுக்குள் மாட்டிப்படும் சோற்றுப் பருக்கைகளை வெளியே எடுக்க ஈக்கில் குச்சி என்பன தயாராக இல்லாவிட்டால் அவ்வளவுதான். எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்து விடுவார். அந்த கோபத்தில் தனது மனைவிக்கு இரண்டு சாத்து சாத்தினால்தான் அவரது ஆன்மா சாந்தமாகும்.

ஊரில் காதர் நானாவுக்கு நல்லதொரு பெயர் இருந்தது. ‘சாந்தமான மனுஷன்’ என பெயர் வாங்கியிருந்தார். ஆனால், கடைத் தெருவில் இருந்து அள்ளிக்கொண்டு வரும் ஆத்திரங்களை மனைவி மீது இறக்கி வைப்பதால்தான் அவர் ‘நல்ல மனுஷனாக’ உலா வந்துகொண்டிருக்கின்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

சிலர் வெளியுலகிற்கு அதி அற்புத தங்கப் பிறவிகளாக இருப்பார்கள். ஆனால், மனைவிகளிடம் சைக்கோத்தனமாக கொடிய ஜீவன்களாக அட்டூழியம் செய்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத்தான் உலாவிக் கொண்டிருந்தார் காதர்.

இடையில் ஒரு நாள் காதரின் ஆஸ்தான நண்பன் முக்தாரின் மனைவி இறந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் முதல் ஆளாய் கடைக்கு வரும் முக்தாரை அதன் பிறகு இரண்டு வாரம் காணவேயில்லை. ஒரு எட்டுப்போய் பார்த்து விட்டு வருவோம் என்று காதரும் கடையைச் சாத்திவிட்;டுப் புறப்பட்டார். வழமையாக சிங்க நடையில் உலா வரும் முக்தார் கசக்கிப் போட்ட காய்ந்த இலை போன்று நொடிந்து உட்கார்ந்திருந்தார். கன்னங்களில் படர்ந்திருந்த அரைகுறை தாடி அவரை சோகச் சித்திரமாக காட்டிக் கொண்டிருந்தது.
‘என்ன முக்தார் செய்வது. நடப்பது நடந்துவிட்டது.

இதற்குப் பிறகு எத்தனை நாள் இப்படியே இருக்கப் போர.. அடுத்த வேலையைப் பார்க்கத்தானே வேணும்’ என்றார் காதர்.
அந்த சோகத்திலும் முக்தாரின் முகத்தில் மெல்லிய சிரிப்பொன்று தோன்றி மறைந்தது. ‘வேறு வேலையா! இதற்குப் பிறகு இந்த உலகத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது. அவளே போய்விட்டாள்.’ என்றார் ஈனஸ்வரக் குரலில்…

One response to “அவள் அழகானவள்”

  1. Riftha Avatar
    Riftha

    அழகு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள