இது உங்களின் குரல்களுக்கான தளம்

மன்னிப்பின் மாதம்

1–2 minutes

இரண்டு வயது ஆண் குழந்தை
அய்லன் ரூமி…
மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்த
சர்புதீன் – சஃப்னா தம்பதியர் மகன்..
இருவருக்கும் திருமணம் முடிந்து
எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் போற்றி வளர்த்த பாசமகன் அய்லன்.

ஷார்ஜாவில் பணியாற்றும் சர்புதீன்
கடந்த ஜனவரி 18ம் தேதி விசிட் விசாவில் மனைவியையும் மகனையும் அழைத்து வந்த போது அவர்களுக்கு தெரியாது தங்கள் செல்ல மகனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.
பிப்ரவரி 12ம் தேதி சர்புதீன் பணிக்கு சென்றிருந்த சமயம் தாய் சஃப்னா
குப்பை கொட்டுவதற்கு குடியிருப்பு
கீழ் பகுதியில் குழந்தையுடன் இறங்கி
குழந்தையை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு குப்பையை தொட்டியில் கொட்டிவிட்டு திரும்பிய கணநேரத்தில் அந்த துயர சம்பவம் அரங்கேறியது..
குழந்தை அய்லன் நிற்பது தெரியாமல்
பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்த
வேறொரு நபரின் கார் மோதியதில் குழந்தை அய்லன் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்த சில நிமிடங்களில் வஃபாத் ஆன சோகமான சம்பவம் ஷார்ஜாவில் வசிக்கும் ஒட்டுமொத்த மலையாளிகள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

மறுநாள் குழந்தை அய்லன் ஜனாஸா ஷார்ஜாவில் அடக்கம் செய்யப்பட்டது.
குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
குழந்தையின் பிரிவு தம்பதியரை அதிகமாக பாதித்தது. இருவரும் அங்கு தனிமையில் இருப்பது துக்கத்தை அதிகரிக்கும் என்பதால் ஊருக்கு சென்று சிறிது காலம் குடும்பத்தோடு கழிக்க நண்பர்கள் வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்..

ஊர் திரும்பும் முன்பு தம்பதியர் இருவரும் யோசித்து எடுத்த முடிவு அவர்கள் இருவரின் இறையச்சத்துடன் கூடிய
மனித நேயத்தை பறைசாற்றுகிறது.
“”தங்களின் குழந்தை மரணித்தது அசாதாரணமான விபத்து.
மனப்பூர்வமாக நடந்த சம்பவம் அல்ல.
தங்களின் குழந்தை மரணித்ததற்காக
வேறொரு நபர் சிறையில் இருப்பதும்
அந்த நபரின் குடும்பம் ரமலான் மாதத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர்ந்து
ஷார்ஜா காவல்நிலையம் சென்ற தம்பதியர் இருவரும் தங்களுக்கு புகார் இல்லை என்றும், குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஒட்டிய நபரை மன்னித்து விட்டதாகவும்
எழுத்து மூலமாக ஆவணங்களில் கையெழுத்திட்டு வழங்கியது
அவர்களின் உள்ளத்தை உருக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது…

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக.
இதற்கு பகரமாக மக்கள் செல்வங்களை அதிகரித்து வழங்குவானாக ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள