
இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த தாயும் வேண்டாத நிலையில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம். தமது மனைவி குழந்தைகளுக்காக கொடிய பாலைவனத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான, இலட்ச்சக் கணக்கான மக்கள் வெந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மறுபக்கம் இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக சில ஆற்றல்களைக் கற்றுக் கொண்டு தாம் இருந்த இடத்திலேயே இலட்ச்சக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். Fiverr

ஐந்து வருடத்திற்கு முன்னால்… அப்போது அம்னா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை எழுத்துப் பிழைகளற்ற கவிதை போன்று அழகாகவே சென்று கொண்டிருந்தது. சிறு பள்ளம் மேடுகளைக் கடந்து செல்லமான சினுங்கல் இராகத்துடன் பயணிக்கும் சிற்றோடை போல அவளது வாழ்வும் மெல்லினங்களுக்கும் வல்லினங்களுக்கும் இடை நடுவில் அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த செல்லங்ககளையும் அள்ளிக் கொட்ட ஒரே ஒரு வாப்பா.இடைக்கிடை செல்லமாக திட்டிக் கொள்ள உம்மா.அரட்டைக்கும் குரட்டைக்கும் என்றே எழுதிக் கொடுக்கப்பட்ட பல்கலைக்கழக அறை. அதில்

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் மஹ்ரூப் (34) இரண்டு சிறுநீரகங்களும் இழந்த நிலையில் இந்த ரமழான் மாதத்தில் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார். தனது இரண்டு வயது மகளுடன் தான் தொடர்ந்து வாழ வேண்டும் என கண்ணீரோடு நிற்கும் அவர் தனது சிகிச்சைக்காக 90 இலட்சம் (09 மில்லியன்) பணம் தேவைப்படுவதாக கேட்கின்றார். ‘யார் ஒருவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டுமொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் போன்றாவார்’ என்ற நபிமொழியின் அடிப்படையில்-

அத்தியாயம் 01 இன்னும் நிலா தூங்கவில்லை. அம்னாவும் தூங்கவில்iலை. அந்தி நேர அடிவானில் ஒட்டப்பட்டிருந்த ஒற்றை நட்சத்திரம் சிநேகமாகச் சிரித்தது. தொலைதூர அடர்ந்த காடுகளில் இருந்து மேலெழும்பிய மின்மினிகள் புதர்க் காடுகளுக்குள் புகுந்து எதையோ வெகு சீரியஸாக தேடிக் கொண்டிருந்தன. மெல்லிய தென்றலின் மெதுவான வருடல் மேனிக்கு இதம் தந்தது. பக்கத்துக் கட்டிடம்தான் பாண் பேக்கரி. அங்கிருந்து அலை பாய்ந்து வரும் கருகலற்ற முறுவல் வாசம் அம்னாவின் நாசிக்குள் நுழைந்து உயிருக்குள் ஊடுறுவி அவளது சுவை நரம்புகளை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட வினா விடை போட்டி ! 30 நாட்கள் 30 வினாக்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வெற்றியாளர்களுக்காக காத்திருக்கின்றன. கூகுள் படிவம் (Google Form) வாயிலாக உங்கள் அறிவை சோதிக்க ஒரு அறிய வாய்ப்பு.தினமும் பகல் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள் வினாக்கள் வெளியிடப்படும். மேலதிக தகவல்களுக்கு 0722558800

புத்தகம் எழுதுவது எவ்வாறு? நீண்ட நாட்களாக பலரும் கேட்கின்ற கேள்வி ஒன்று இருக்கின்றது. அது புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று.. நானும் என்னால் முடிந்த அளவில் பொருத்தமான பதில்களை வழங்கியுள்ளேன். சிலர் விடாப்பிடியாக என்னைப் பிடித்து இரண்டு மூன்று புத்தகங்களை எழுதிவிட்டனர். இன்னும் சிலர் இரண்டு மூன்று கேள்விகளோடு காணாமல் போய்விட்டனர். இப்போது கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கின்றது. புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். எழுத்து

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb