இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Chief Editor

  • தமிழ் என்றும் வாழும்

    தமிழ் என்றும் வாழும்

    0

    தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று ‘காலத்தை வென்று வாழும் மொழியாக’ தமிழ் அடையாளப்படுத்தப் படுகின்றது.இலக்கியம், பண்பாடு, மதம், அரசியல், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் மொழியின் சிறப்புக்களைச் சொற்களில் வடித்துவிட முடியாது. இனம், மதம், தேசம் வரையறைகள் எதுவும் இன்றி உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் மொழியின் செல்லச்

    மேலும் வாசிக்க…

  • நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

    நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

    0

    அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவ்வளவுதான். இதன் பின்பு ஒட்டுமொத்த எட்டுச்  சுவனங்களின் மொத்த இன்பங்களை அவளின் காலடியில் கொட்டி வைத்தாலும் அவள் பரிதாபத்திற்குரியவள்தான். ஆணுக்கு வேண்டுமென்றால் திருமணம் என்பது வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக இருக்கலாம். ஆகவே, வெகு சாதாரணமாக அவனால் அதை கடந்து சென்று விட முடியும்;. ஆனால்,

    மேலும் வாசிக்க…

  • 2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

    2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

    0

    ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் பாஸ்போர்ட் (One Day Service)  எடுப்பது பற்றி நிறைய குழப்பங்கள் இப்போதும் நிலவுகின்றன. ஆகவே, அது பற்றி சில தெளிவுகள் இங்கு முழுமையாக வழங்கப்படுகின்றன. இலங்கையில் பாஸ்போர்ட் (Passport)  பெறுவதற்கு பல பிராந்தியங்கள் இருந்தாலும் ஒரே நாளில் பெற்றுக் கொள்ள (One Day Service)  நாம் கொழும்புக்கு வரவேண்டும்.

    மேலும் வாசிக்க…

  • நாவல் – ஒரே ஒரு மகள்
அத்தியாயம் 03

    நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

    1

    அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. பெயர் தெரியாத பறவைகள் பெருங்குரலெடுத்து கானம் இசைத்துக் கொண்டிருக்க அடி வானில் அப்பிக்கிடந்த இளஞ்சிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக சாயமிழந்து கொண்டிருந்தது. தென்றல் காற்று கொஞ்சம் நனைந்திருந்ததால் அதன் வருடல் இதமாகிக் கொண்டிருந்தது. அம்னா முன்னால் ஏறி அமர்ந்திருக்க வாப்பா சைக்கிளை ஊன்றி ஊன்றி மிதித்துக் கொண்டிருந்தார். அவரின்

    மேலும் வாசிக்க…

  • பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

    பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

    0

    Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும் தருணம் வரையில் உண்டு உறங்கி நிம்மதியாக இருக்கிறது வெளியுலகை காணும்தருணம் வீறிட்டு அழுகிறது.உதிரத்தை பாலாக்கி தன் பசியையும் தூக்கத்தையும் தியாகம் செய்து தன் மூலம் வெளியான ஒரு ஜீவனுக்காக தாய் என்பவள் படும் பாடுகள் கொஞ்சமன்று. எந்தப் பிள்ளையும் பெற்றோர் இன்றிய வாழ்வை ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. அவ்வாறான

    மேலும் வாசிக்க…

  • மன்னிப்பின் மாதம்

    மன்னிப்பின் மாதம்

    0

    இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் – சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் போற்றி வளர்த்த பாசமகன் அய்லன். ஷார்ஜாவில் பணியாற்றும் சர்புதீன்கடந்த ஜனவரி 18ம் தேதி விசிட் விசாவில் மனைவியையும் மகனையும் அழைத்து வந்த போது அவர்களுக்கு தெரியாது தங்கள் செல்ல மகனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.பிப்ரவரி 12ம் தேதி சர்புதீன் பணிக்கு சென்றிருந்த சமயம் தாய் சஃப்னாகுப்பை

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள