Book Cover

என் அல்லாஹ்விற்கு என்ன பிடிக்கும்!

1

எமது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் ஆகச்சிறந்த பரிசு என்னவென்று கேட்டால் சந்தேகமேயில்லை. அவை, சிறந்த புத்தகங்கள்தான். அதுவும், அவர்களின் வெள்ளை மனதுகளில் அல்லாஹ், அண்ணலார், அல்குர்ஆன் பற்றிய அறிமுகங்களை ஆழமாக பதித்தால் அவர்களது வாழ்வும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

அந்த வரிசையில்…

சிறுவர்களுக்கு பல பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டிருக்கும் நபீல் அபாபீல் அவர்களின் ‘என் அல்லாஹ்விற்கு என்ன பிடிக்கும்!’ என்ற நூல் இம்முறை ரமழானுக்கான சிறப்பிதழாக வந்துள்ளது. அல்லாஹ் அன்பாளன், அல்லாஹ் அருட்கொடையாளன் என ஆரம்பிக்கும் அத்தியாயங்கள் இறுதியாக தொழுகையின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளில் வந்து முடிவுறுகின்றன. தொழுகை சீரடைந்தால் வாழ்வு சீராகும் என்ற கருத்தை சிறுவர்களுக்கேயுரிய விதத்தில் முன் வைப்பதில் எழுத்தாளர் வெற்றியடைந்துள்ளார்.

நூல் : எனது அல்லாஹ்விற்கு என்ன பிடிக்கும்
பக்கங்கள் : 52
ஆசிரியர் : நபீல் அபாபீல்
விலை : 300
தொடர்புகளுக்கு : 0779930356

Comments

One response to “என் அல்லாஹ்விற்கு என்ன பிடிக்கும்!”

  1. அல்லாஹ்வின் அன்பை அன்பாலேஉணர்த்தி..
    அவணை வணங்கிட
    ஆர்வம் காட்டி..
    அழகிய நூலை
    அன்பளிப்பாக தந்த..
    ஆசிரியருக்கு அல்லாஹ்வே
    அருள் புரிவானாக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *