உயர்ந்த கனவுகளைக் காண
ஒருபோதும் அச்சப்படாதீர்கள்.
உள்ளத்தில் உறுதி கொண்டால்
உச்சி வானில் உங்கள் பெயரை எழுதலாம்.
திறமைகளால் இந்த வாழ்வை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்றும்,
இந்த அகன்று விரிந்த பூமிப்பந்தை கண்ணிரற்ற கவிதைத் தேசமாய் கொண்டாடலாம் எனவும் தளம் Voice இன் வரிகள் கற்றுத் தருகின்றன.
ஏன் தளம் Voice?
காலமாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளத் தவறுவது (Inadaptability), பல அற்புதமான படைப்பாளிகளின் வாழ்நாள் சாதனைகளை வரலாற்றில் இருந்து மறைத்துவிடுகிறது. எத்தனையோ பெறுமதிமிக்க ஆக்கங்கள் உரிய அங்கீகாரம் கிடைக்காமலும், ஆவணப்படுத்தப்படாமலும் என்றென்றே தொலைந்து போயுள்ளன. எமது முன்னோர்களின் அறிவுச் செல்வம் மற்றும் சமகாலப் படைப்பாளிகளின் சிந்தனைகள் தகுந்த தளம் இல்லாத காரணத்தால் பலமுறை சிதறிப் போயிருப்பதை நாம் கண்டுள்ளோம்.
இந்த இடைவெளியை நிரப்பவே தளம் Voice உருவானது. ஒரு படைப்பின் மதிப்பு அது சென்றடையும் வாசகர்களிலேயே தங்கியுள்ளது. அங்கீகாரம் கிடைக்காத ஒரு படைப்பு, அணைக்கப்படாத நெருப்பிற்குச் சமமானது. எமது நோக்கம் அத்தகைய நெருப்பை ஒருபோதும் அணைய விடாமல் பாதுகாப்பதாகும்.
எமது தொலைநோக்கு (Our Vision)
எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட எவருக்கும், அல்லது தகுந்த வாசகர் வட்டம் தேவைப்படும் எந்தவொரு ஆக்கத்திற்கும் ஒரு பலமான மேடையை வழங்குவதே எமது அடிப்படை இலக்காகும்.
- அனைவருக்கும் வாய்ப்பு: நீங்கள் அனுபவம் வாய்ந்த எழுத்தாளராகவோ அல்லது இப்போதுதான் எழுதத் தொடங்கிய ஒருவராகவோ இருக்கலாம்; தளம் Voice உங்கள் திறமைக்கான களம்.
- ஆவணப்படுத்தல்: உங்கள் படைப்புகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வகையில் நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படுகிறது.
- வாய்ப்புகளை உருவாக்குதல்: வெறும் தளம் மட்டுமல்லாமல், படைப்பாளர்களின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய வாய்ப்புகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதே எமது பயணம்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை உண்டு, ஒவ்வொரு சிந்தனைக்குள்ளும் ஒரு புரட்சி உண்டு. உங்கள் ஆக்கங்கள் வெறும் காகிதங்களில் முடங்கிவிடாமல், உச்சி வானில் மின்னும் நட்சத்திரங்களாக ஒளிரட்டும்.
எம்முடன் இணைந்து உங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்குங்கள்!



