1. நான் எப்படி எனது ஆக்கங்களை அனுப்பலாம்?
உங்கள் ஆக்கங்களை தளம் வாய்ஸின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எமது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் / டெலிகிராம் எண்களுக்கு நேரடி செய்தியாக அனுப்பலாம். ஆக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட வடிவில் (MS Word, Google Doc or Text) இருப்பது சிறப்பாக அமையும்.
2. என்ன மாதிரியான ஆக்கங்களை நான் அனுப்பலாம்?
சிறுகதைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பதிவுகள் என எதனையும் நீங்கள் அனுப்பலாம். அவை உங்களின் சுயமான ஆக்கமாக இருக்க வேண்டும்.
3. எனது ஆக்கம் எப்போது பிரசுரமாகும்?
உங்கள் ஆக்கம் எமக்குக் கிடைத்தவுடன், எமது ஆசிரியர் குழு அதனைப் பரிசீலிக்கும். தளம் வாய்ஸின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் உங்கள் ஆக்கம் பிரசுரிக்கப்படும். பிரசுரிக்கப்பட்டவுடன் அதற்கான லிங்க் உங்களுக்கு அனுப்பப்படும்.
4. ஏற்கனவே முகநூல் அல்லது பிளாக்குகளில் வெளியிட்ட ஆக்கங்களை அனுப்பலாமா?
தளம் வாய்ஸ் புதிய மற்றும் பிரத்யேகமான (Exclusive) ஆக்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. எனவே, இதுவரை எங்கும் வெளியிடப்படாத ஆக்கங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. எனது ஆக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா?
ஆக்கத்தின் தரம் மற்றும் வாசிப்புத் தன்மையை மேம்படுத்த, சிறிய எழுத்துப் பிழைத் திருத்தங்கள் அல்லது வடிவமைப்பில் மாற்றங்கள் எமது ஆசிரியர் குழுவால் மேற்கொள்ளப்படலாம்.
6. எனது படைப்புகளுக்கான அங்கீகாரம் எவ்வாறு அமையும்?
உங்கள் எழுத்துக்கள் உலகெங்கும் பரந்து வாழும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவதே எமது முதன்மை நோக்கம். சன்மானங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு தனித்துவமான படைப்பாளியாக உங்களை நிலைநிறுத்தவும், உங்கள் கருத்துக்கள் சமூகத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்கவும் தளம் வாய்ஸ் ஒரு பாலமாக அமைகிறது.



